கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்குஇன உணர்வாளர்கள் கொதிப்பு!

கொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் கைதுக்குஇன உணர்வாளர்கள் கொதிப்பு !
கருத்துரிமையை பறிக்கும் - காங்கிரசாரின் கூக்குரக்கு தி.மு.க. ஆட்சி துணை போவது தமிழிண உணர் வாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது. காங்கிரசார் வற்புறுத்தலுக்கு தமிழக அரசு பணிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ளது.கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி பெரியார் திராவிடர் கழக ஆதரவோடு ஏற்பாடு செய்திருந்த ஈழத் தமிழர் ஆதரவுப் பொதுக் கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், பெ. மணியரசன் ஆகியோர் கலந்து கொண்டு, இந்திய அரசின் துரோகத்தையும், சிங்கள அரசின் இனப் படுகொலையையும் கண்டித்துப் பேசினர். எப்போதுமே அரசு அதிகாரத்தை மட்டும் சார்ந்து, மக்கள் ஆதரவின்றி செயல்பட்டு வரும் தமிழக காங்கிரசார், வழக்கம் போல் தி.மு.க ஆட்சியை மிரட்டி அறிக்கைகள் வெளி யிட்டன. குறிப்பாக தமிழக காங்கிர தலைவர் தங்கபாலு, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அறிக்கை வெளிவந்தவுடனே தி.மு.க. அரசு செயல்படத் தொடங்கியது.
தங்கபாலு அறிக்கை வெளிவந்தவுடன், தமிழக காங்கிரசார் சிலர், இயக்குனர் சீமான் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு தீ வைத்துவிட்டு, அருகே காங்கிர° குழுக்கள் ஒன்றுக்கு தலைவரான ஈ.வெ.கி.எ°. இளங்கோவன் பிறந்த நாள் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றனர். காங்கிரசார் இப்படி வன்முறையைக் கையில் எடுத்த நிலையில் தமிழகம் முழுதும் கொந்தளிப்பு உருவானது. கார் எரிப்பு செய்தி கிடைத்தவுடனேயே கோவையில் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் கழகத் தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே வத்தலகுண்டுக்கு அருகே ஜி.கல்லுப்பட்டி எனும் ஊரில் படப்பிடிப்பிலிருந்த இயக்குனர் சீமானை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து மேட்டூரில் தனது இல்லத்தில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும், அடுத்த நாள் சென்னையிலிருந்த பெ.மணியரசனையும் காவல்துறை கைது செய்தது. ஈரோடு கருங்கல் பாளையம் காவல் நிலையத்தின் சிறப்பு போலீ°படை இக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய தண்டனை சட்டம் 13-1(பி) மற்றும் 505 வது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஈரோடு கூட்டத்தில் இயக்குனர் சீமான் ராஜீவ் காந்திக்கு எதிராக ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தியதாக மொடக்குறிச்சி காங்கிர° சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி காவல் நிலையத்தில் தந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் சட்ட நிபுணர்களின் கருத்தைக் கேட்டு, அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால், வழக்கு தொடரக்கூடிய முறையில் எந்த உரையும், அக்கூட்டத்தில் நிகழ்த்தப்படவில்லை என்பது மாநாடுபோல் பல்லாயிரக் கணக்கில் திரண்டு நின்ற பொது மக்களுக்கும், சட்டம் படித்த எவருக்கும் நன்றாகவே புரியும்.மக்கள் மன்றத்தில் வாதங்களை எதிர்கொள்ள முடியாத காங்கிரசார் சட்டத்தின் உதவியோடு தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. கைதான இருவரையும் ஈரோடு முதலாவது நீதிமன்ற நீதிபதி பி.அசோகன், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இயக்குனர் சீமான் கடந்த இரண்டு மாதத்துக்குள் இரண்டா வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில்...சென்னையில் அடுத்த நாளே டிசம்பர் 20 அன்று தமிழ் நாடு காங்கிர° கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தது. இராயப்பேட்டை மருத்துவமனை அருகே கழகத் தோழர்கள் ஏராளமாகத் திரண்டு, சத்தியமூர்த்தி பவன் நோக்கி புறப்பட்டபோது, காவல்துறை கழகத் தோழர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தது. துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டதோழர்களை காவல்துறை கெடுபிடி செய்து வாகனங்களில் ஏற்றியது. செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அதற்கு கருத்து தெரிவிக்கக்கூட காவல்துறை அனுமதிக்க மறுத்தது.
இதற்கிடையே தங்கபாலு, இளங்கோவன் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. அப்போது எதிரே உள்ள கடைகளில் நின்றிருந்த சத்தியமூர்த்தி பவனைச் சார்ந்த காங்கிரசார் சிலர், கழகத்தினர் மீது கற்களை வீசி தாக்கத் தொடங் கினர். கழகத் தோழர்களை வாகனங்களில் கட்டாயப்படுத்தி ஏற்றிய காவல்துறை இராயப்பேட்டையிலுள்ள சமூகநலக் கூடத்திற்கு கொண்டு வந்து தங்க வைத்தது. வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோ ஆகியோர் தோழர்களை சந்திக்க வந்தனர். வழக்கறிஞர் துரைசாமி போராட்டத்தைப் பாராட்டிப் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சாரநாத், மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சார்ந்த வெங்கடேசன், இளைஞர் இயக்க சார்பில் மருத்துவர் ந. எழிலன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அன்பு தென்னரசு, மு. மாறன், சிந்தனையாளர் பேரவை ஆயுள் காப்பிட்டுக் கழக கமலக் கண்ணன், தமிழர்முழக்கம் சாகுல் அமீது ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஒரு மணி நேரம் ஈழப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு, ராஜீவ் செய்த துரோகம், எம்.ஜி.ஆர். செய்த உதவிகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், காங்கிரசின் துரோக வரலாற்றை விளக்கிப் பேசினார். இதற்கிடையே சத்திய மூர்த்திபவன் அலுவலகம் தாக்கப் பட்டது என்ற செய்தி தோழர்களுக்கு கிடைத்தது. 6 மணியளவில் காவல்துறை கழகத் தோழர்களை எழும்பூர் நீதிமன்றம் கொண்டு சென்று நேர் நிறுத்தியது. நீதி மன்றத்துக்கு வழக்கறிஞர் இளங்கோ, குமாரதேவன் ஆகி யோர் வந்திருந்தனர். இரவு 7 மணியளவில் 62 தோழர்களையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அங்கிருந்து புழல் சிறைக்குக் கொண்டு போகப்பட்டு, கழகப் பொறுப்பாளர்கள் ஆனூர் செகதீசன், விடுதலை இராசேந்திரன், எ.கேசவன், இரா. உமாபதி உள்ளிட்ட 62 தோழர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். சட்ட விரோதமாகக் கூடுதல், பொது இடங்களில் இடையூறு விளைவித்தல், கொடும்பாவி எரித்தல், ஒன்று கூடி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் (தண்டனை சட்டப் பிரிவுகள் 147, 143, 188, 41(ஏ), 7(1)(ஏ) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தோழர்களுக்கான பிணை மனுவை அன்றைய தினமே வழக்கறிஞர் இளங்கோ தாக்கல் செய்தார். பிணை மனு விசாரணை டிசம்பர் 22 திங்கள் கிழமை பிற்பகல் 3 மணியளவில் எழும்பூர் 13வது பெருநகர் நீதிமன்ற நீதிபதி பாக்யவதி முன் விசாரணைக்கு வந்தது. கழகத்தினருக்காக மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி அவர்களே பெருநகர நீதிமன்றம் வந்து வாதாடியது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்க ஆணையிட்டது.
நீதிமன்றம் பிணை வழங்கியவுடன், வழக்கறிஞர்கள் செ.துரைசாமி, இளங்கோ, ராஜா ஆகியோர், உடனே புழல் சிறைச்சாலைக்கு விரைந்து மாலை 5 மணியளவில் கழகத்தினரை சந்தித்து, பிணை கிடைத்த விவரத்தைத் தெரிவித்தனர்.தோழர்கள் பிணை விடுதலைக்கான உறுதியளிப்பு ஆவணங்களைத் திரட்டி, தயாராக வைத்திருந்த கழகச் செயல்வீரர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். பிணை ஆணையைப் பெற்று விரைந்து சிறைச்சாலைக்கு அனுப்பினர். இரவு 8 மணியளவில் தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை மார்க்கெட் பகுதியிலிருந்து மேளதாளங் களுடன் எழுச்சி வரவேற்பு தரப்பட்டது. ஏராளமான தோழர்களும், பொது மக்களும் திரண்டிருந்தனர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இராயப்பேட்டை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தோழர்கள் அனைவருக்கும் தோழர்கள் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். இராயப்பேட்டை வி.எம்.சாலைப் பகுதி முழுவதுமே எழுச்சி கோலம் பூண்டது.தர்மபுரியில்20.12.2008 சனி காலை 11 மணிக்கு தர்மபுரியில் ராசகோபால் பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட செயலாளர் முனி. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கொ.வேடியப்பன், பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் வணங்காமுடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்ஜித், தமிழ்மான மீட்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எ°.சம்பத், ஒன்றிய செயலாளர் வெல்டிங் சின்னசாமி, தகடூர் செல்வம், வஜ்ஜிரவேல், பெரியார் தி.க. ஒன்றிய அமைப்பாளர் செந்தில்குமார், இளங்கோவன், மா.பரமசிவம், ஆ. அம்பிகாவதி, ஆ. நெடுமான் அஞ்சி உட்பட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில்
19.12.08 அன்று மாலை 4 மணியளவில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று, இளங்கோவன், தங்கபாலுக்கு எதிரான முழக்கங்களையும் கழகத் தலைவர்கொளத்தூர் மணி, இயக்குநர் சீமானையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் கழகத் தோழர்கள் முழக்கமிட்டு வந்து ஈ.வெ.கி. எ°. இளங்கோவன், தங்கபாலு உருவ பொம்மைகளை எரித்தனர்.நகரத் துணைச் செயலாளர் முகிலன் தலைமையில், நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரச் செயலாளர் ஏகலைவன் அன்பு, மாவட்ட அமைப்பாளர் நா.இளையராஜா, மாவட்ட செயலாளர் தெ.மகேசு, ரமேசு, குத்தாலம், ஒன்றிய செயலாளர் இயற்கை, வா.வினோத், வேலங்குடி இராஜா, ஈழம் சுந்தா, முத்தழகன் உள்ளிட்ட 25 தோழர்களை காவல்துறை கைது செய்தது. இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.அதற்கு முன்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, 25.11.08 அன்று மறியல் நடந்தது. காலை 11 மணியளவில் அனைத்து கட்சிகளின் சார்பில் மத்திய தலைமை தபால் நிலையம் முன்பாக நடந்த மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனி°ட் கட்சியின் வட்டச் செயலாளர் இர. இடும்பையன் தலைமை தாங்கினார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைத்து கட்சியைச் சார்ந்த 51 தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கலந்து கொண்ட கழகத் தோழர்கள், மாவட்ட செயலாள்h தெ.மகேசு, மாவட்ட அமைப்பாளர் நா. இளையராஜா, நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரச் செயலாளர் அன்பு, நகரத் துணைத் தலைவர் இராஜராஜன், முகிலன், வா.வினோத், ம.ஸ்ரீதர், இயற்கை, கார்த்திக், இராஜா, வீ.முரளி, உ.ஜீவா, முத்தழகன், இரமேசு.
(சிறைப்படுத்தப்பட்ட 62 தோழர்களின் பட்டியல் அடுத்த வாரம்)
தேவை, உறுதி ஒன்றுதான்!
நான் ஏன் கக்கூசு எடுக்க வேண்டும்;
நீ ஏன் மலசல உபாதைக் குப் போக வேண்டும்.
நீ ஏன் அதன் பயனை அடைய வேண்டும் என்று நீங்கள் துணிந்து கேட்க வேண்டும். இதை அனுமதிக்கும் கடவுளை வெறுக்க வேண்டும்.உடைத்து ரோட்டுக்குச் சல்லி போட வேண்டும். இந்த உரிமையை மறுக்கும் சட்டத்தையும், சாத்திரத்தையும் நெருப்பி லிட்டுப் பொசுக்க வேண்டும். இந்த உரிமையை மறுக்கும் மதத்தை மடியச் செய்ய வேண்டும். மனத்தில் நீங்கள் உறுதி கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க மன உறுதியின்றேல் காரியம் கை கூடாது. உறுதி இருந்தாலோ அது உங்களை வெற்றிப் பாதை யில் தள்ளிக் கொண்டு போகும். உறுதி உள்ளவனைச் சாமியோ, பூதமோ கூட பய முறுத்தாது. அதற்கு அதிகாரமும் இல்லை. உன்னுடைய அறிவின் முன்னேற் றத்தைத் தடுப்பதற்கு.- பெரியார்
தலையங்கம்
தமிழக காங்கிரசின் அடாவடி
ஈழத் தமிழர்களின் பாரம்பர்யப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்திய ராணுவம், தமது சிங்கள ஒற்றை ஆட்சியின் கீழ் சரணடைய வேண்டும் என்பதற்காக தமிழர்கள் மீது ராணுவப் படையெடுப்பை நடத்தி வருகிறது. தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சிங்களப் பேரினவாத அரசு அந்த உரிமையை துப்பாக்கி முனையில் பறிக்கத் துடிக்கிறது. இதைக் கண்டித்தால் சிங்களர் ஆத்திரமடைவதில் நியாயம் உண்டு. தமிழக காங்கிரசார் ஏன் ஆத்திரமடைய வேண்டும்?முதல்வர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக் குழுவில் இடம் பெற்று, பிரதமரிடம் போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று கோரியது, தமிழக காங்கிரசாரும் தானே! இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் இல்லை, தாக்குதல் தொடரும் என்று அறிவித்து விட்டார். மன்மோகன்சிங் ஆட்சியோ மவுனம் சாதிக்கிறது. ஏன் இந்த மவுனம் என்று, தட்டிக் கேட்க சொந்தக் கட்சிக்காரர்களான காங்கிரசாருக்கு கூடுதல் உரிமை உண்டு. அப்படி கேட்கவும் இல்லை. அதுபற்றி வாய் திறக்கவும் இல்லை. அவர்கள் கேட்க மறுப்பதை தமிழ்நாட்டில் இனஉணர்வாளர்கள் கேட்டால், காங்கிரசார் எகிறிக் குதிக்கிறார்கள். விடுதலைப்புலிகள் பற்றியோ, ராஜீவ் காந்தி பற்றியோ பேசவே கூடாது என்று சட்டத்தால் தடைபோட்டு கருத்துரிமையை பறிக்க துடிக்கிறார்கள்.மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய் ராஜபக்சேயிடம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்பதும், அனைத்துக் கட்சியினர் விடுத்த கோரிக்கைதான்.
பிரணாப் முகர்ஜி போக மறுத்துவிட்டார். இதை தமிழக காங்கிரசார் தட்டிக் கேட்டார்களா? ஏன் வாயை மூடிக் கொண்டார்கள்?கொளத்தூர் மணி, மணியரசன், சீமான் இதைப் பேசினால், திருமாவளவன் பேசினால் கைது செய் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏதோ, தமிழக காங்கிர° சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று வந்ததைப் போல் (கூட்டணி ஓட்டுகளை மறந்து), தி.மு.க. ஆட்சியை மிரட்டுகிறார்கள்.மத்தியில் மன்மோகன்சிங் ஆட்சி நிலை பெற்று நிற்பதற்கு, தி.மு.க.வின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதை மறந்தே போய்விடுகிறார்கள்.மிரட்டினால் கலைஞர் பணிந்து விடுவார் என்று கருதுவதற்கான வாய்ப்புகளை தமிழக முதல்வரும் தனது நடவடிக்கைகளால் உறுதிப்படுத்தி வருகிறார். இதையும் நாம் சுட்டிக்காட்டியாகவேண்டும்.
கருத்துரிமையை பறிக்கிறது என்பதற்காக ‘பொடா’ சட்டத்தை எதிர்த்த கட்சி தி.மு.க. பொடா சட்டம் இல்லாமலே அந்த இருண்ட காலத்தை உருவாக்க காங்கிரசார் துடிக்கும்போது இதற்கு தி.மு.கவும் துணை போகிறது.இப்போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் கைது செய்யப் பட்டிருப்பதே, இதற்கு சான்றாகும். பொடா சட்டப்படியே ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேச உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யிருப்பது காங்கிரசாருக்குத் தெரியாதா என்று கேட்கிறோம்.காங்கிரசார் வன்முறையைக் கையில் எடுத்து இயக்குனர் சீமான் காரை எரித்ததின் விளைவுதானே, சத்யமூர்த்தி பவன் தாக்குதல் வரை வந்திருக்கிறது? அறிக்கை விடும் காங்கிரசார் இதை ஏன் மறைக்கிறார்கள்? இயக்குனர் சீமான் கார் எரிக்கப் பட்டதை காந்தியின் வழி வந்தவர்கள் கண்டித்தார்களா? வினை ஒன்று நிகழ்ந்தால் எதிர் வினையும் இருக்கத் தானே செய்யும்? இதை காங்கிரசார் சிந்திக்க மாட்டார்களா? நாட்டில் எல்லா குடிமக்களுக்கும் ஒரே சட்டம் தான் என்பதை காங்கிரசார் புரிந்து கொள்ளட்டும். மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால், தமிழக காங்கிரசார் மற்ற குடிமக்களைவிட உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களாகக் கருதிக் கொள்ளக் கூடாது; ஆட்சி அதிகாரம் நிரந்தரமானதும் அல்ல.
தமிழக உணர்வை மதிக்காது செயல்படும் மன்மோகன் சிங்கையும், பிரணாப் முகர்ஜியையும் கண்டிக்காத காங்கிரசாருக்கு தமிழகத்தில் எழும் தமிழ் ஈழ ஆதரவுக் குரலை எதிர்க்கும் உரிமை கிடையாது. காங்கிரசாரின் இந்த சலசலப்புகள் தமிழின உணர்வை மேலும் உரம் போட்டு வளர்க்கவே செய்யும்; அது மட்டுமல்ல, அக்கட்சிக்கான சவக்குழியையும் அவர்களே இதன் மூலம் தோண்டிக் கொள்கிறார்கள்.
பெரியாரின் எழுத்துச் சிதைப்பாளர்கள் - யார்?
‘குடிஅரசு’ காலவரிசைத் தொகுப்புப் பற்றி ‘ஆனந்த விகடன்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் காலவரிசைப்படி மொத்தமாகத் தொகுப்பதால் கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும் என்று வீரமணி பதில் அளித்தார். அது மட்டுமல்ல, பிறர் பெரியார் எழுத்துக்களைப் பதிப்பித்தால் அதில் மாற்றங்களை செய்துவிடக் கூடும் என்றும் கூறினார்.
“பெரியார் எழுத்துக்களைப் பதிப்பிக்கிறோம் என்ற போர்வையில், அவரது எழுத்துக்களைச் சிலர் மாற்றிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. தவிர மொத்தமாகப் பதிப்பிக்கும்போது, கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும்.” கி.வீரமணி பேட்டி, ‘ஆனந்த விகடன்’ 27.8.2008
மொத்தமாகப் பதிப்பித்தல் என்று கி.வீரமணி கூறுவது, காலவரிசைப் படியான தொகுப்பைத்தான். அதற்கு மாறாக கடவுள், மதம், சாதி, பெண்ணுரிமை என்று தலைப்பு வாரியாக, வெவ்வேறு காலகட்டங்களில் பெரியார் பேசியதைத்தான் திராவிடர் கழகம் வெளியிட்டு வருகிறது.இப்போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நூல் ஒன்றை அவசரம் அவசரமாக தமிழ்நாடு முழுதும் பரப்பும் வேலையை அக்கட்சித் தொண்டர்களுக்கு வழங்கியுள்ளார் கி. வீரமணி. நூலின் தலைப்பு : “பகுத்தறிவு ஏன்? எதற்காக?” என்பதாகும். ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அதன் பதிப்புரையில் கி. வீரமணி, “அய்யா அவர்களது அரிய எழுத்துக்கள், உரைகளைப் பல்வேறு தலைப்புகளில் கால வரிசை அடிப்படையில் களஞ்சியங்களாகத் தொகுத்து அவர்கள் உருவாக்கிய அறக்கட்டளையான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் மூலம் வெளியிட்டு வருவதை பெரிய பேறாகக் கருதியே உழைத்து வருகிறேன்” - என்று எழுதியுள்ளார்.
காலவரிசைப்படி மொத்தமாகத் தொகுப்பது - குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பேட்டி அளித்தவர்-காலவரிசைப்படி தொகுக்காமல் - தலைப்பு வாரியாக தொகுத்தே நூல்களை வெளியிடுபவர்-இப்போது காலவரிசைப்படி தொகுத்து வெளியிடுவதாக - தம்பட்டம் அடிப்பது அப்பட்டமான பொய் அல்லவா?இது அறிவு நாணயமா என்று கேட்க விரும்புகிறோம்?பெரியார் திராவிடர் கழகம் - காலவரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்பை வெளிக் கொண்டு வந்த காரணத்தால் தாங்களும் அப்படி வெளியிடுவதாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே வாதங்களைத் தேடுவதால்தான் கி.வீரமணி முன்னுக்குப் பின் முரணாக எழுதியும் பேசியும் வருகிறார்கள் என்ற முடிவுக்குத் தானே இதிலிருந்து வர முடிகிறது?அது மட்டுமல்ல,
பெரியாரின் “எழுத்துக்களை சிலர் மாற்றிவிடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது” என்றும், ‘ஆனந்தவிகடன்’ பேட்டியில் கி.வீரமணி கூறியிருக்கிறார்.
அத்தகைய ‘ஆபத்துகளை’ பெரியாருக்கு உருவாக்கியிருப்பவர் ‘சாட்சாத்’ இதே கி.வீரமணிதான் என்று நாம் குற்றம்சாட்டுகிறோம். அதற்கான ஆதாரங்களை யும் முன் வைக்கிறோம்.
பெரியார் எழுதிய ‘குடிஅரசு’ தலையங்கங்கள் மிகவும் ஆழமானவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் காணப்படுகின்றன. கருத்துகளை தலையங்கங் களில் வார்த்தைகளால் பெரியார் செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு தலையங்கத்துக்கும் அதில் எத்தகைய தலைப்பு இடம் பெறவேண்டும் என்பதை முடிவு செய்து பெரியார் தலைப்பிட்டிருக்கிறார். தலையங்கத்துக்கு தலைப்பிடுவது, அத்தலையங்கத்தின் முதன்மையான கருத்தை வாசகர்களுக்கு வெளிச்சப்படுத்துவதேயாகும். எனவே தலையங்கம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போல் அதன் தலைப்பும் முக்கியமாகிறது. அது ஆசிரியரின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், இப்போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள பகுத்தறிவு ஏன்? எதற்காக? என்ற நூலில் என்ன நடந்துள்ளது?
• நூலின் பக்கம் 36-ல் வெளியிடப்பட்ட கட்டுரையின் தலைப்பு ‘பகுத்தறிவும் நா°திகமும்’ என்பதாகும். ஆனால் ‘குடிஅரசில்’ அக்கட்டுரைக்கு தந்துள்ள தலைப்பு ‘நா°திகம்’ என்பது மட்டுமே! இவர்கள் தலைப்பு வாரியாக பகுத்தறிவு என்ற தலைப்பின் கீழ் தொகுத்ததால் - ‘பகுத்தறிவு’ என்பதையும் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். 28.9.1930-ல் ‘குடிஅரசில்’ எழுதப்பட்ட அத்தலையங்கம் ‘நா°திகம்’ பற்றி மட்டுமே பேசுகிறது. பகுத்தறிவுக்கான எல்லையைத் தாண்டி நிற்பது நா°திகம்! எனவே பெரியார் சூட்டிய சரியான தலைப்பை இவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? இந்த அதிகாரத்தை இவர்களுக்கு தந்தது யார்? இது வீரமணியாரின் வாதப்படியே எழுத்துகளை மாற்றிய ஆபத்து அல்லவா?
• பக். 44-ல் - நூலில் இடம் பெற்றுள்ள பெரியார் தலையங்கத்துக்காக தரப்பட்டுள்ள தலைப்பு, “பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமைகள்” என்பதாகும். 5.10.1930 ‘குடிஅரசு’ ஏட்டில், பெரியார் அந்தத் தலையங்கத்துக்கு தந்துள்ள தலைப்பு அதுவல்ல. பெரியார் எழுத்தில் இவர்கள் கை வைத்துள்ளார்கள். அதற்கு பெரியார் ‘இனியாவது புத்தி வருமா?”, “பெண்களுக்கு சொத்துரிமை” என்ற இரண்டு தலைப்புகளைத் தந்துள்ளார். ஒரு தலையங்கத்துக்கு இரு வேறுபட்ட தலைப்புகளை பெரியார் தருவதிலிருந்தே தலைப்பு வழியாக அவர் முதன்மைப்படுத்தும் கருத்துகளை உணர்த்த விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் இதை மாற்றுகிறார்கள்? இப்படி பெரியார் எழுத்தில் கை வைத்து மாற்றுவதைத்தான், “பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமை” என்று கூற வேண்டியிருக்கிறது!
• பக்கம் 58-ல் வெளிவந்த கட்டுரைக்கு இவர்கள் தந்துள்ள தலைப்பு - ‘பகுத்தறிவை அடிமைப் படுத்தும் மதம்’ என்பதாகும். 9.9.1934 ‘பகுத்தறிவு’ ஏட்டில் பெரியார் எழுதிய இத்தலையங்கத்துக்கு அவர் தந்துள்ள தலைப்பு, “மதம் ஏன் ஒழிய வேண்டும்?” என்பதுதான். மதமே ஒழிய வேண்டும் என்று பெரியார் தந்த மத எதிர்ப்புக்கான அழுத்தத்தை இத் தலைப்பு வழியாக சிதைத்துள்ளார்கள்.
• இன்னும் துல்லியமாகக் கூட நம்மால் பல செய்திகளை எடுத்துக் காட்ட முடியும். உதாரணமாக பச்சையப்பன் மண்டபத்தில் 1927 அக்டோபர் 21 ஆம் நாளில் ஆற்றிய உரை - நூலில் அக்.22 என்று தவறாக இடம் பெற்றுள்ளது. 2.8.1931 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதிய கட்டுரையை 9.8.1931 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
• 115 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறு நூலிலே பெரியார் எழுத்துகளை மாற்றி தவறான தகவல்களைத் தருகிறவர்கள்தான், மற்றவர்கள் வெளியிட்டால், ‘திருத்தி விடுவார்கள்; எங்களைப் போன்ற பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்காது’ என்றெல்லாம் தங்களுக்குத் தாங்களே மார்தட்டிக் கொள்கிறார்கள்.
ஒன்றை கூற விரும்புகிறோம்; ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ என்று பெரியார் ஏடுகளை நுணுகிப் படித்து, ஆய்ந்து, தேய்ந்து அலசக்கூடிய ஆற்றல் திறமை மிக்கவர்கள் பலரும் இப்போது வந்து வந்துவிட்டார்கள் என்பதை வீரமணியார்களும், அவரது விளக்க உரையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்!பெரியாரைப் பெரியாராகக் காட்டாமல், பெரியாரை தங்களது பார்வைக்கேற்ப சுருக்கிக் கொள்வது பெரியாரியலுக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும்.இவர்களுக்கு பெரியார் திராவிடர் கழகத்தினரை - திரிபுவாத திம்மன்கள் என்று கூற தகுதியுண்டா என்று கேட்கிறோம்?(புரட்டுகள் உடைப்பு தொடரும்)
வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்
- விடுதலை இராசேந்திரன்
வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ‘தீக்குளிப்புகளை’ அம்பலப்படுத்தினார், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். அவரது உரையின் சென்ற வார தொடர்ச்சி -காங்கிரசிலிருந்து வெளியேறிய வி.பி.சிங், ‘ஜன்மோர்ச்சா’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிராக அந்த இயக்கம் போராடியது. இந்தியாவின் நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை வலிமை உ.பி., பீகார் மாநிலங்களிடம் இருந்ததால், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிர° கட்சியை தோற்கடித்துக் காட்டுவேன் என்று சபதமேற்ற வி.பி.சிங், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஜனதா, லோக்தளம், காங்கிரசு (எ°) போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ‘ஜனதா தளம்’ என்ற கட்சியை உருவாக்கினார். (1988, அக்.11). 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய ‘தேசிய முன்னணி’ என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கிய தும் வி.பி.சிங் தான். மத்திய அரசில் மாநிலக் கட்சிகளும் அதிகாரப் பங்கு பெறும். கூட்டாட்சிப் பாதைக்கு வழியமைக்கும் முயற்சியாகவே இது அமைந்தது. காங்கிர° எதிர்ப்பு ஒன்றையே முன் னிறுத்தி - முரண்பாடுகள் கொண்ட, இடதுசாரிகள்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்த சாதனையை வி.பி.சிங் ஒருவரால் தான் செய்ய முடிந்தது. வி.பி.சிங் மீதான நம்பகத் தன்மையும் நேர்மையுமே இதற்கு அடிப்படை என்று உறுதி யாகக் கூற முடியும். முரண்பாடுகளை நிர்வகித்தல் (Managing the Contradictions) என்று வி.பி.சிங், இதற்குப் பெயர் சூட்டினார். ஆனாலும்கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்தார். தனது இயல்பான நட்பு சக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங், பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறினார்.
1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, வி.பி.சிங் பிரதம ரானார். பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவை நல்கினர். 1977 க்குப் பிறகு, இரண்டாவது முறையாக காங்கிர° தோற்கடிக்கப் பட்டது. வி.பி.சிங் சபதம் ஏற்றதுபோல், உ.பி.யில் 83 தொகுதிகளிலும், பீகாரில் 54 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடி, 137 இடங்களை இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றியது. காங்கிர° படுதோல்வியை சந்தித்தது. இந்திராவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிய காங்கிர° வி.பி.சிங் விலகலுக்குப் பிறகு 200 இடங்களைத் தாண்டவே முடியவில்லை. ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தலில்தான் 200க்கும் சற்று கூடுதலாக வெற்றி வெற்றது. இந்திய அரசியலில் காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைக் கணிசமாக குறைத்தப் பெருமை வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. இதை மறுத்துவிட முடியாது. ‘ஜன்மோர்ச்சா’ தொடங்கிய காலத்தில்கூட வி.பி.சிங்கிற்கு இடஒதுக்கீடு குறித்த தெளிவான பார்வை இருந்ததாகக் கூற முடியாது.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம்தான் அப்போது முன் வைக்கப்பட்டது. அவரைச் சூழ்ந்து நின்ற அருண்நேரு போன்ற பார்ப்பன சக்திகளின் கருத்து ‘ஜன்மோர்ச்சாவுக்குள்’ நுழைக்கப்பட்டது. தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்கள் வி.பி.சிங்கிடம் இடஒதுக்கீட்டு கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தை யும் எடுத்துக் கூறியபோது நியாயங்கள் அவருக்குப் புரியத் தொடங்கின. இங்கே பேசிய சகோதரி ஓவியா குறிப்பிட்டதைப்போல, மண்டல் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களைத்தான் நேரில் போய் சந்தித்து நன்றி கூறினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு செய்யும் முடிவை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை முடி வெடுத்து, அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர், அன்று சமூகநலத்துறை அமைச்சராக இருந்த ராம்விலா° ப°வான் என்ற தலித் தான்! ஒரு தலித் அமைச்சர் ஆணை வழியாகத்தான் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மறந்துவிடக் கூடாது.
அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பிரிவுகள் தான் பிற்படுத்தப்பட் டோருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது என்பதையும் பிற்படுத்தப் பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது. (கைதட்டல்)வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்று (2.12.1989) 11 மாதங்களில் ஆட்சியை உதறினார் (10.11.1990), 1990 ஆம் ஆண்டு ஆக°ட் 9 ஆம் நாள். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல. இந்திய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். அன்றுதான் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப் பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அலறின. எரி மலையாக வெடித்தார்கள். ஏதோ பூகம்பமே வந்து விட்டதைப்போல கொதித்தார்கள். வடமாநிலங் களில் மாணவர்களைத் தூண்டி கலவரத்தை நடத்தினர். இதிலே மிகப் பெரும் சோகம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களே இதை எதிர்த்து வீதிக்கு வந்து, கலவரத்தில் இறங்கியதுதான்.
இது, தங்களுக்கான உரிமை என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் உருவாக்கப்படவில்லை. ஏன்? என்ன காரணம்? அங்கு ஒரு பெரியார் பிறக்கவில்லை; (கைதட்டல்) அதுதான் காரணம்.ஆணை வந்தவுடன் புதுடில்லியில் ஆர்.எ°.எ°. தலைமையகத்தில், முக்கிய தலைவர்கள் கூடி வி.பி.சிங் ஆட்சிக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வற் புறுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செய லாளர் மனோகர் ஜோஷியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி உடனே ஆதரவைத் திரும்பப் பெற்றுவிட வில்லை. பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தயங்கியது. காரணம், நாடாளுமன்றத்தில் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையைத் தாண்டாத பாரதிய ஜனதா வி.பி.சிங் அணியில் இடம் பெற்றதால்தான் 86 உறுப்பினர்களைப் பெற முடிந்தது. அந்த 86 பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 பேர் பிற்படுத்தப் பட்டவர். 12 பேர் தாழ்த்தப்பட்டவர். எனவே, இவர்களின் எதிர்ப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற தயக்கம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. எதிர்ப்பை வேறு வழியில் காட்ட காரணம் தேடிக் கொண்டிருந்தது.ஆணையை எதிர்த்தது, ஆர்.எ°.எ°. மட்டுமல்ல; காங்கிர° கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே என்ற பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையைத் திரும்பப் பெறக் கூறி நாடாளு மன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். தனது கட்சியின் கருத்து பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை.
பார்ப்பன உயர்சாதி அய்.ஏ.எ°. அதிகாரிகள் ரகசியமாகக் கூடி பேசி, அரசுக்கு எதிராக செயல்படுவதென முடிவெடுத்தனர். முதல் கட்டமாக அய்.ஏ.எ°. அதிகாரிகளின் மனைவியர்களை திரட்டி, அணியாக்கி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர். எப்போதாவது இந்த பரம்பரையெல்லாம் வீதிக்கு வந்திருப்பார்களா?பெங்களூரில் பார்ப்பனர் சங்கம் அவசரமாகக் கூடி, “இந்த ஆணை இந்து மதத்தை சாதி அடிப்படையில் பிரித்து விடும். எனவே அமுல்படுத்தக்கூடாது” என்று தீர்மானம் போட்டனர். சாதி அடிப்படையில் பிரிப்பது இந்து மதமா? அல்லது அரசு ஆணையா? ஏதோ இந்து மதத்துக்குள் சாதி நுழைந்ததே ஆக°ட் 7 ஆம் தேதி தான் என்பதுபோல் நாடு முழுதும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஒரே குரலில் ஓலமிட்டனர். இப்போது 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியிலுள்ள ‘அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன’ பார்ப்பன மாணவர்கள் எப்படி எதிர்த்தார்களோ, அதுபோல், அப்போது டெல்லிப் பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள்தான் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். விவரமறியாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஏதோ தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட வைத்து, கலவரத்தைத் தூண்டினார்கள். பீகாரில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதில் இறந்த 6 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எதிர்ப்புக் கலவரத்தில் பீகார், உ.பி., ம.பி., ஒரிசா, இராஜ°தான், அரியானா மாநிலங்களில் இறந்த 32 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அதே ஆண்டு ஆக°ட் 24 ஆம் தேதி நாடாளு மன்றத்தின் முன்பு மாணவர்கள் நடத்திய பேரணி கலவரமாக மாறிய போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், செப்டம்பர் 24 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், மு°லிம் மாணவர்கள் தான். மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளிப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்திகளை வெளியிட்டன. உண்மையில், பல மாணவர்கள் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டு, அவர்கள் தீக்குளித்ததாக நாடகமாடினார்கள். இன்று எப்படி வி.பி.சிங் அவர்களை ‘சமூக இழிவைக்’ கொண்டு வந்தவர் என்று பார்ப்பன இறுமாப்போடு ‘இந்தியா டுடே’ எழுதியதோ அதே ஏடு அன்றைக்கும், கலவரங்களை ஊதி விட்டது. அப்படி இடஒதுக் கீட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அதே ‘இந்தியா டுடே’ தான் - தீக்குளிப்பு என்ற பெயரில் ராஜீவ் கோ°வாமி என்ற பிற்படுத்தப்பட்ட மாணவரை பார்ப்பன மாணவர்கள் தீக்குளிப்பது போல் நாடகமாடுமாறு கூறிவிட்டு, பிறகு, உண்மை யிலே தீக்குளிக்க வைத்தனர் என்ற செய்தியை மருத்துவனையில் உயிருக்குப் போராடிய கோ° வாமியின் வாக்குமூலத்தின் வழியாக அம்பலப் படுத்தியது (இந்தியா டுடே அக்.6-20, 1990).
இதே போல் பல பள்ளி மாணவர், மாணவிகளும் தீக்குளிக்க செய்யப்பட்டனர். பலர் கொளுத்தப்பட்டனர். புதுடில்லி ஆர்.கே.புரத்தில் வகுப்பை விட்டு தண்ணீர்குடிக்க வெளி வந்த பிரவீணா என்னும் சீக்கிய மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து கொலை செய்தனர். ‘இந்தியன் எக்°பிர°’ நாளேட்டில் ஆசிரியராக இருந்த பார்ப்பன அருண்ஷோரி, வி.பி.சிங்குக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரான ‘குருசேத்திரப் போரையே’ நடத்தினார். ஆக°ட் 15 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்றரை மாத காலத்தில் ‘இந்தியன் எக்°பிர°’ ஏட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அருண்ஷோரி எழுதி குவித்த தலையங்கங்கள், கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டும் 168. அதே போல் ‘டைம்° ஆப் இந்தியா’ அதே காலகட்டத்தில் வெளியிட்டவை 171. ‘இந்து’ வெளியிட்டவை 151. ‘இந்து’ சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு வெளிவந்த காரணத்தால் இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகப் போய்விடும் என்பதால், சற்று அடக்கியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.
“மண்டல் பரிந்துரை நாட்டையே அழித்துவிடும்; அரசு நிர்வாகத்தை மேலும் சீர்குலைக்க வைத்துவிடும்; இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவு சமூகப் பதட்டத்தைத்தான் உருவாக்கப் போகிறது. இதன் முதன் விளைவு இதுவாகவே இருக்கும்” என்று ‘எக்°பிர°’ எழுதியது. “40 ஆண்டுகாலமாக - நவீன - சமத்துவ சமுதாயத்தை உருவாக்க படிப்படியாக எட்டிய சாதனைகள் அனைத்தையும் ஒரே அடியில் வி.பி.சிங் வீழ்த்திவிட்டார்” என்று ‘டைம்° ஆப் இந்தியா’ பார்ப்பன நாளேடு எழுதியது. இவ்வளவையும் நாம் விரிவாக ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால், எத்தகைய சூழலில் வி.பி.சிங், இப்படி ஒரு சமூகநீதி ஆணையைப் பிறப்பித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான். பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் ஒரு சார்பான பிரச்சாரம்; மிரட்டல்கள்; பார்ப்பன மாணவர்களின் வன்முறை; வடமாநிலங்களில் உண்மையையறியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களே. பார்ப்பன மாணவர்களோடு சேர்ந்து போராடிய அவலம். பா.ஜ.க., காங்கிர° கட்சியின் கடுமையான எதிர்ப்புகள். இவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையிலும் கொள்கைக் குன்றாய் நிமிர்ந்து நின்ற மாமனிதன் தான் வி.பி.சிங். (கைதட்டல்) அதற்கு முன் 10 ஆண்டுகாலமாக காங்கிர° ஆட்சியால் முடக்கப் பட்டுக் கிடந்த அறிக்கையை வெளியே கொண்டு வந்து ஆணை பிறப்பித்து, சுழன்றடிக்கும் பார்ப்பன எதிர்ப்புச் சூறாவளிகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்ட அந்த மாமனிதரின் இந்த வரலாற்று சாதனையை நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எடுத்துக் காட்டினோம்.
இப்படி ஒரு அரசியல்வாதியை, தந்தை பெரியார் போல் நெஞ்சுரம் கொண்ட ஒரு லட்சியவாதியை நாம் எங்கே தேடினாலும் கிடைப்பார்களா?
பெரியார் நூல்கள் நாட்டுடைமை: குரல் கொடுக்கிறது த.மு.எ.ச.
கரவொலியில் அதிர்ந்தது அரங்கம்
பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாடு சென்னையில்டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் சுமார் 2000 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாடு கலை இலக்கிய பண்பாடுகள் குறித்த விவாதங்கள் கருத்தரங்குகளை நடத்தியது. சமூகம், கலை, இலக்கியம், தீண்டாமை, பெண்ணியம் தொடர்பான ஆழமான கருத்துகள் முன் வைக்கப்பட்டன. சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ‘பத்மராம் ஹால் ராம் தியேட்டரில்’ நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான 21 ஆம் தேதி காலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான கலைப் பேரணியும், அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் லிபர்ட்டிஅரங்கில் விடிய விடிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் முதல் தீர்மானமாக பெரியார் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்குவதோடு, அவற்றை தமிழக அரசே கால முறைப்படி தொகுத்து வெளியிட வேண்டும் என்ற தீர்மானம் முன் மொழியப்பட்டபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.தமிழ்நாட்டில் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகியுள்ள இப்பிரச்சினை குறித்து அமைப்புகள், கட்சிகள் பலவும் மவுனமாகிவிட்ட நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழுத்தமான குரலை தீர்மானத்தின் வழியாக எழுப்பியுள்ளதை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது.தமிழகத்தின் வரலாற்றுப்போக்கைத் திருப்பிய ஒரு தலைவரின் நூல்களை பெரியார், அண்ணா வழி வந்த தி.மு.க. ஆட்சி, தி.க. தலைவர் வீரமணியை மகிழ்விக்கும் நோக்கத்தோடு நாட்டுடைமையாக்கத் தயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சிற்பி ராசன் 55வது பிறந்த நாள் கழக ஏட்டுக்கு நன்கொடை
மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தம்மை முழுமையாக ஒப்படைத்துப் பணியாற்றி வருபவரும், தலை சிறந்த சிற்பிகளில் ஒருவரும், கழகத்தின் பிரச்சாரப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பவருமான தோழர் சிற்பி. இராசன் அவர்களுக்கு 25.12.2008 அன்று 55வது பிறந்த நாளாகும். பிறந்த நாள் நினைவாக கழக ஏட்டுக்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)
கோவை, திருப்பூர் செய்திகள் அடுத்த இதழில்

திருப்பூரில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

'எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி' கண்டன தலையங்கம்பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது

(சமூக பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் - இந்தியாவின் தலைசிறந்த ஆங்கில ஆய்வு வார ஏடு - 'எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி' ஆகும். நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்களை வாசகர்களாகக் கொண்டிருக்கும் அந்த ஏடு பெரியார் நூல்கள் தேசவுடைமை யாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யுள்ளது. திராவிடர் இயக் கத்தின் சீரிய ஆய்வாளரும், சர்வதேச நாடுகளில் திராவிடர் இயக்க ஆய்வாளர்களில் முதன்மையானவராகக் கருதப்படு பவருமான முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய கட்டுரையை அந்த வார ஏடு தலையங்கமாகவே வெளி யிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம், இங்கே தரப்படுகிறது)

பெரியாருடைய எழுத்தும் பேச்சும் அறிவுசார் சொத்துடைமை என்றும், அவை தனது தலைமையின் கீழ் உள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறு வனத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உரிமை கோரியுள்ளார். பெரியார் எழுத்து - பேச்சுகளை வேறு எவராவது வெளி யிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந் தார். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், தமிழ்நாட்டில் வெகு மக்களின் பொதுப் புத்தியில் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கிய பெரியாரின் அரை நூற்றாண்டு கால சிந்தனைகளையும் அதை பரப்பிட பெரியார் மேற்கொண்ட கடினமான உழைப்பையும், தமக்கே உரித்தானது என்று 'ஏகபோக' உரிமை கோருகிறார் கி.வீரமணி.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஒரு மரபு உண்டு. பெரியாருடைய கருத்து களை ஏற்றுக் கொண்ட பல வெளி யீட்டாளர்கள். பெரியார் நூல்களை எந்தத் தடையுமின்றி, வெளியிட்டு பரப்பி வந்திருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகள்தான் பெரியாரின் எழுத்தும், பேச்சும், நிலையாக தொடர்ந்து தமிழக மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தின. அப்படி பெரியார் நூல்களை வெளி யிட்டவர்களில் பெரும்பா லோர் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல. அவர்களே தங்களிடமுள்ள மிகக் குறைந்த நிதி வாய்ப்புகளைக் கொண்டு வெளியிட்ட சிறு வெளியீட் டாளர்கள் தான். அவர்களின் அரசியல் ஈடுபாடு தந்த உந்துதல் காரணமாகவே இந்த வெளியீடுகளைக் கொண்டு வந்தார்கள். அதே நேரத்தில், கடந்த காலங்களில் பெரியார் சிந்தனைகளை தொகுக்கும் பெரிய முயற்சிகளும் நடந்துள்ளன. திருச்சி சிந்தனையாளர் கழகம் 1974 ம் ஆண்டில் வே. ஆனைமுத்து அவர்களை பதிப்பாசிரியராக கொண்டு பெரியார் சிந்தனைகள் - 3 தொகுதிகளை வெளி யிட்டது. அந்த தொகுதிகள் தான். பெரியாரின் சமூகம் மற்றும் அரசியல் குறித்த - பல்வேறு தமிழ் ஆங்கில ஆய்வுகள் உருவாகக் காரணமாக இருந்தன. இந்த 3 தொகுதிகளையும் சுதந்திரமாக பயன்படுத்தி எத்தனையோ ஆய்வுகள் வெளிவந்து விட்டன. அப்போதெல்லாம், இதை எதிர்த்து எவரும் கேள்வி கேட்டதில்லை.
தமிழ்நாட்டில் வாசிப்பாளர் களிடையே பெரியார் நூல்களுக்கான தேவை அதிகமாக இருந்தும்கூட, திராவிடர் கழகமோ அல்லது பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமோ, இந்தத் தேவைகளை நிறைவேற்ற - பெரிய முயற்சிகள் ஏதும் எடுக்க வில்லை. இத்தனைக்கும் திராவிடர் கழகத்திடம் ஏராளமான சொத்துகளும் பொருள் வசதியும் உண்டு. அவர்களுக்கு நிதிப் பற்றாக்குறை என்ற பிரச்சினை ஏதுமில்லை. 1983 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழக செயல்பாட்டாளர்கள் கடுமையாக உழைத்து, பெரியாரின் எழுத்து பேச்சுகளை தொகுத்து கைப்பட எழுதி, கி.வீரமணியிடம் கையளித்தார்கள். அப்படி தரப்பட்டு, கால் நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. 'குடிஅரசு' 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கி நடத்தப்பட்ட வார ஏடு ஆகும். 'குடிஅரசு' தொகுப்பு களோடு 1928 இல் பெரியார் நடத்திய ஆங்கில ஏடான 'ரிவோல்ட்'டிலிருந்து முக்கிய கட்டுரை களைத் தொகுத்து 800 பக்கம் கொண்ட நூலை வெளியிடு வதாகவும் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. திராவிடர் கழகத்தைப் போல் பெரியார் திராவிடர் கழகம் பொருள் வசதி கொண்ட அமைப்பு அல்ல. ஆனாலும் கூட, பெரியாரின் எழுத்து-பேச்சுகளை மக்களின் கரங்களில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்தப் பெரிய திட்டத்தை அந்த அமைப்பு தேர்வு செய்தது. தமிழ்நாட்டின் வாசகர் களிடையே இந்த திட்டம், மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி யுள்ளது. தாங்களாகவே முன் வந்து நன்கொடைகளை வழங்குகிறார்கள். முன் பதிவுத் திட்டத்தின் கீழ் - இதற்காக நிதி திரட்டப்படுகிறது.
இந்த நிலையில், பெரியார் எழுத்து களை ஏகபோகமாக்கிக் கொண்டு, மக்கள் மன்றத்துக்கு சென்று அடை யாது தடுத்து நிறுத்தும் வீரமணியின் முயற்சிகள், பெரியார் கொள்கை களுக்கே நேர்எதிரான தாகும். திராவிடர் கழகத்தின் அடிப்படையான வேலைத் திட்டமே, பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரப்புவதுதான் என்று பெரியார் கருதினார். நூல்கள் வெளியிடு வதில், பெரியார் எப்போதும் லாபக் கணக்குப் பார்த்ததில்லை. தனது சகாவும், சைவருமான ஈ.எம்.சுப்ர மணிய பிள்ளைக்கு பெரியார் 1947 இல் எழுதிய கடிதத்தில், "நான் மிகவும் குறைந்த விலையிலேயே நூல்களை வெளியிடுகிறேன். இதில் வர்த்தக நோக்கம் இல்லை. பெரும்பாலான நூல்கள், இலவசமாகவே வழங்கப்படு கின்றன. எனவே, வர்த்தக எல்லைக்குள் நின்று இந்த வேலையை செய்வது மிகக் கடினம்" என்று எழுதினார். பெரி யாரைப் பொறுத்தவரை எல்லாவற் றையும்விட, பகுத்தறிவு கருத்துகள் பரவ வேண்டும் என்பதே மிகவும் முக்கிய மானது. பெரியாரின் அந்த பகுத்தறிவுக் கருத்துகள் தாராளமாக பரவுதலை, முடக்கிப் போடும் முயற்சிகளில் தான் வீரமணி, இறங்கியுள்ளார். ஆளும் கட்சியான தி.மு.கழகம், இதில் வீரமணியை ஆதரிப்பதுதான், வருத்தத்துக்கு உரியதாகும்.
தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான 'முரசொலி' வீரமணியின் அறிக்கைக்கு முக்கியத்து வம் தந்து வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் 'குடிஅரசு' தொகுப்புகளை தி.மு.க. தொண்டர்கள் வாங்கி விடாமல், ஒதுங்கிக் கொள்ளச் செய்வதுதான். வீரமணி, அ.இ.அ.தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, இப்போது, தி.மு.க.வின் அரவணைப்புக்கு வந்துள் ளார். எனவே புதிதாக கிடைத்துள்ள நண்பரை, கைவிட வேண்டாம் என்று தி.மு.க. கருதுகிறது போலும். தான் ஒரு 'பெரியாரிஸ்ட்' என்றும், 'பகுத்தறிவுவாதி' என்றும், அவ்வப் போது வாய்ப்பு கிடைக்கும் போதெல் லாம் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறி வருகிறார். அது உண்மையானால், உடனடியாக பெரியார் நூல்களை அவர் நாட்டுடைமையாக்க வேண்டும். அதன் பிறகு எவர்வேண்டுமானாலும் பெரியார் நூல்களை வெளியிடலாம். ஏற்கனவே, புதுமைப் பித்தன், கல்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்பு கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், பதிப்புத்துறை ஜனநாயகப்படுத்தப் பட்டு, சிலர் மட்டுமே 'லாபம்' குவித்து வந்த ஏகபோகம் தகர்க்கப்பட்டிருக் கிறது.
இந்த நிலையில், இந்துக்கள் உரிமை என்ற பெயரால் தமிழ்நாட்டில் மதவாத அமைப்புகள் காலூன்ற இடம் தேடும் சூழ்நிலையில் பெரி யாரியல் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திருப்பூரில் பெரியார் கைத்தடி ஊர்வலம்
திருப்பூரில் பெரியார், அண்ணா சிலைகளை அகற்றக் கோரி இந்து மக்கள் கட்சி போராட்டம் அறிவித்த அக்.5 ஆம் தேதியன்று பெரியார் கைத் தடியுடன் திருப்பூர் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மதவெறி சக்திகளை எதிர்கொள்ள ஊர்வலமாகப் புறப் பட்டனர்.
காவல்துறை, கழகத் தோழர்கள் 90 பேரை கைது செய்து, திருமண மண்ட பத்தில் வைத்தது. கழக செயற்குழு உறுப்பினர் அங்ககுமார் தலைமை யில் மாவட்ட தலைவர் துரைசாமி முன்னிலையில் போராட்டம் நடந்தது. திருமண மண்டபத்தில் வைக்கப்பட் டிருந்த தோழர்களை பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் சந்தித்துப் பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராசு திருமண மண்டபம் வந்து தோழர்களைப் பாராட்டிப் பேசி னார். பா.ம.க. பொறுப்பாளர்களும் தோழர் களை நேரில் சந்தித்து பாராட்டினர்.ஒரே நாளில் 90 தோழர்களை திரட்டி, எதிர் போராட்டம் நடத்திய கழகத்தை முற்போக்கு அமைப்பினர் பலரும் பாராட்டினர்.

பெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி!


இந்திய அரசே - சிங்களருக்கு வழங்கிய படைக் கருவிகளைதிருப்பிப் பெறு!
இந்திய அரசு - சிங்களருக்கு வழங்கிய ஆயுதத்தைத் திரும்பப் பெறக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் - பல்வேறு நகரங்களில் அக்.13 அன்று நடந்தன. ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் பலவும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் பங்கேற்றது.

13.10.2008 திங்கள் மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில், "சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?" என்ற முழக்கத் தோடு இந்திய அரசைக் கண்டித்து த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ. மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக துணைப் பொதுச் செயலாளர்), கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, புலவர் புலமைப்பித்தன், இயக்குனர் சீமான், வழக்கறிஞர் அஜீதா, ஓவியா, கவிஞர் இன்குலாப், ஓவியர் புகழேந்தி, தமிழ்ப் படைப் பாளிகள் முன்னணி ஜெயப்பிரகாசம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அனைத்து அமைப்புகளை யும் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.

தமிழர்கள் படுகொலையை சித்தரிக்கும் வகையில் கழகத்தினர் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும், ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் மக்களின் பேராதரவு இருக்கிறது என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு வெளியிட்ட கருத்துக் கணிப்பை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு, கழக சார்பில் அனைவருக்கும் வழங்கப் பட்டது.

சேலம்
ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 13.10.2008 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சேலம் தீயணைப்பு நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு கழகத் தலைவர் தா.செ. மணி தலைமையேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜீவானந்தம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈழத் தமிழரின் விடுதலைப் புலிகளைப் பற்றி தம் கட்சி ஆதரவான கருத்தை வெளிப்படுத்தி பேசினார். ஊர்வலத்தில் பெரியாரின் பிஞ்சுகள் தலையிலும், கைகளிலும் காயக்கட்டுகளுடனும், தோழர்கள் வயிற்றைக் கிழித்து குடல் வெளியே தெரிவது போலவும், கன்னத்திலே காயமடைந்தது போலவும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத் தினரால் சித்ரவதை செய்யப்படுவதை வெளிப்படுத்து கின்ற வகையிலே ஒப்பனை செய்து ஊர்வலத்தில் வந்தனர். ஊர்வலம் மதியம் 12.30 மணிக்கு மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு வந்தது. அப்பொழுது கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமை உரையாற்றினார்.

தலைவரின் உரைக்குப் பின்னால், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை சார்ந்த தமிழ் தேசியன் கண்டன உரையாற்றினார். தமிழக இளைஞர் இயக்கத்தின் இளமாறன், தமிழர் தேசிய இயக்கம் வ. தம்பி, பழனிச்சாமி, ஸ்பீடோ அமைப்பு சார்ப் அ.முரளி, மனித உரிமை பாதுகாப்பு மைத்தின் வழக்குரைஞர் மாயன், குடியுரிமை பாது காப்பு நடுவத்தைச் சார்ந்த தமயந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் வை.செல்வக் குமார், தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சியின் ச.பிந்துசாரன் ஆகி யோர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர். ஊர் வலத்தில் அனைத்து அமைப்பின் சார்பிலும் 400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தை சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய் திருந்தது.

கோவை
கோவையில் 13.10.2008 திங்கள் மாலை 4 மணியளவில் செஞ்சிலுவைச் சங்கம் அருகில், இந்திய அரசு சிங்கள இராணுவத் திற்கு அளித்த ஆயுதங் களைத் திரும்பப் பெறக் கோரி கழகம் சார்பில் ஒத்த கருத் துடைய அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து ஈழத்தில் போரில் காயம்படுகின்ற தமிழர்களின் நிலையை உணர்த்தும் வகையில் காயக்கட்டுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நகர செயலாளர் அனுபவ் ரவி, ஆதித் தமிழர் பேரவையின் மாணவரணி செயலாளர் வெண்மணி, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் மாநகர செயலாளர் தென்னரசு, பு.இ.மு. தமிழரசன், த.தே.பொ.க. பா. தமிழரசன், கழக செயற்குழு உறுப்பினர் வெ.ஆறுச் சாமி, பு.ஜ.தொ.மு. விளவை இராமசாமி, த.ஒ.வி. அறிவுடை நம்பி, த.தே.வி.இ.தேவேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டன உரையைப் பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்ளுக்கு ஈழத்தில் போரில் காயம்பட்டு கிடக்கின்ற தமிழர் களின் நிலையை உணர்த்துவதுபோல தோழர்களுக்கு காயக்கட்டுகள் போடப்பட்டு இருந்தன. பத்திரிகை யாளர்களும், பொது மக்களும் ஆர்வத்துடன் காயம்பட்ட தோழர்களை வந்து பார்த்துச் சென்றனர். மேலும் அவர்கள் தோழர்களின் காயக்கட்டுகளை உண்மைக் காயங்கள் என்று நம்புகின்ற வகையில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள்

• சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக் கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு!
• சிங்களப் படைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத் துறையினர் அனைவரையும் திரும்ப அழை!
• இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப் படையினருக்கும் காவல்துறையினருக் கும் பயிற்சி கொடுக்காதே!
• நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படை வகை உதவி எதுவும் செய்யாதே!

'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'

ஆரியர் - திராவிடர் போராட்டத்தை சித்தரிப்பதே இராமாயணம் என்பது ஜவகர்லால் நேரு உட்பட பல ஆய்வாளர்களின் கருத்து. பெரியார் இந்தக் கருத்தை நாடு முழுதும் பரப்பினார். திராவிடர்களை வீழ்த்துவதற்கு ஆரியர்கள் பின்பற்ற வேண்டிய 'சூழ்ச்சி - சூது' முறைகளை - இராமன் என்ற கதாபாத்திரம் வழியாக ராமாயணம் விளக்குகிறது. 'சக்கரவர்த்தி திருமகன்' என்று இராமாயணத்துக்கு விரிவுரை எழுதிய ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் 'இராமாயணத்தைப் படியுங்கள்' என்று அறிவுரை கூறினார். இராவணன் கற்பனைப் பாத்திரம் என்றாலும், அவர் திராவிட இனத்தின் குறியீடாக உயர்ந்து நிற்கிறான். அத்தகைய இராவணனையும், அவனது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த திராவிட மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கொளுத்தும் 'இராமலீலா'வை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாகக் கொண்டாடி தென்னாட்டு மக்களை, திராவிடர்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.

திராவிட மாவீரன் இராவணனை 'தீமையின் சின்னமாக' இழிவுபடுத்தும் இந்த ஆரியக் கூத்தில், கடந்த 'விஜயதசமி' நாளன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்றுள்ளது, தென்னாட்டு மக்களை - திராவிடர்களை இழிவுபடுத்தும் மாபெரும் அவமதிப்பாகும். கடந்த சில ஆண்டுகளாகவே சோனியாவும், அவரது பரிவாரங்களும், இந்த ஆரியக் கூத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

"டெல்லியிலே நடக்கும் ராமலீலாக்களை எதிர்த்து தென்னாட்டிலும், ராமனை எரிக்கும் ராவண லீலாக்கள் நடத்தும் காலம் வந்தே தீரும்" என்று அன்று கலைஞர், தனது 'முரசொலி' நாளேட்டில் 1954 ஆம் ஆண்டில் எச்சரித்தார்! (8.10.1954) பெரியார் மறைந்த - முதலாண்டு நினைவு நாளில் மணியம்மையார், திராவிடர் கழகத் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், பெரியார் திடலில் 'இராமலீலா'வுக்கு பதிலடி தரும் வகையில், 'இராமன்' உருவ பொம்மைகளை தீயிட்டு பொசுக்கும் இராவணலீலாவை நடத்தினார். அவருக்குப் பிறகு கி.வீரமணி தலைமை ஏற்ற பிறகு, 'இராவண லீலா' நடத்தப் போகும் அறிவிப்புகள் வந்தனவே தவிர, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறி, பின் வாங்கிக் கொண்டார்கள்.

1996 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் தோற்றம் கொண்ட பிறகுதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அரசின் தடைகளை மீறி 'இராமன்' உருவ பொம்மைகளை எரித்து, 'இராமலீலாவுக்கு' பதிலடி தரப்பட்டது. அதற்காக தோழர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகளை சந்தித்தனர். அண்மையில், ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்கள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரன், இராவணனை இழிவுபடுத்தும் நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று மறுத்துவிட்டார். இப்போதும் பல பழங்குடியினர், 'இராவணனை' தங்கள் மூதாதையராகக் கருதி வழிபட்டு வரும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் விதிசா மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் பெயரே 'ராவண கிராம்' என்பதாகும். இக் கிராமத்தில் வாழும் 1100 மக்களும், இராவணனை தங்கள் மூதாதையர் என்று கூறி வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின் போது இராவணன் சிலை முன் கூடி, வழிபாடு நடத்துகிறார்கள். அதேபோல் போபாலிலிருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டாசூர் எனும் கிராம மக்கள் - ராவணனின் மனைவியான மண்டோதரி பிறந்தது தங்களது கிராமத்தில்தான் என்று நம்பி, இராவணனை தங்கள் கிராமத்தில் மருமகனாகக் கருதி, இராவணனைப் போற்றுகிறார்கள். இவற்றிற்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும், 'ராமனை' பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிப்பது போல் - 'இராவணனை' போற்றும் நம்பிக்கையும் நாட்டில் நிலவுகிறது. இந்த உணர்வுகளை கிஞ்சித்தும் மதியாமல், 'இராவணனை' தீமையின் உருவமாக்கி, தீயிட்டுப் பொசுக்குவது என்ன நியாயம் என்பதே நமது கேள்வி?

இப்படி தென்னிலங்கை வேந்தன் 'இராவணனை' தீயிடும் ஆரியக் கூத்தில் பங்கெடுக்கும் மன்மோகன் சிங் ஆட்சி தான், ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்களர்களுக்கு ஆயுதங்க ளையும், ராணுவப் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

இராவணன் - திராவிட மாவீரன் என்ற கருத்தை முன் வைத்து, தமிழ் ஈழத்தில் 'விடுதலை புலிகள்' நடத்தும் 'புலிகளின் குரல்' வானொலி 'இலங்கை மண்' எனும் தொடர் நாடகத்தை 53 வாரங்கள் ஒலி பரப்பியது. அந்நாடகத்தை விடுதலைப்புலிகள் நூலாகவும் வெளியிட்டுள்ளனர். அந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய தமிழ் ஈழ மக்களின் தேசிய தலைவர் பிரபாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

"போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ்மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டது. தலைகீழாகத் திரித்து விடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இராவணனுக்கு தீ வைத்து மகிழ்ச்சிக் கூத்தாடும் ஆரியர்களும், அவர்களது வலையில் சிக்கிக் கிடப்போரும், இராவணனை அழித்த முறையைப் போலவே தமிழ் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தமிழ் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கை ஒளி பிரபாகரனையும் அழித்திட 'சூழ்ச்சி வலை' விரிக்கிறார்கள். எம்.கே.நாராயணன்களும், சிவசங்கரமேனன்களும், 'இந்து' ராம்களும், 'துக்ளக்' சோக்களும், சுப்ரமணிய சாமிகளும், உளவு நிறுவனங்களும் மரத்தின் பின்னால் பதுங்கி 'விபிஷணர்களைப் பிடி; அவர்களை அமைச்சராக்கு; இதோ ரகசிய ஆயுதங்களைப் பிடி; வெளியில் சொல்லாதே' என்று 'ராமாயணம்' காட்டிய வழியில் இராவணனை வீழ்த்தும் படலத்துக்கு திட்டங்களைத் தயாரிக்கிறார்கள்.

தாய்த் தமிழ்நாட்டின் குடிமக்களை 'பயங்கரவாதம்', 'தீவிரவாதம்', 'ஆயுதக் கலாச்சாரம்' என்ற சொல்லாடல்களுக்குள் சிக்க வைத்து, மூளைச் சலவை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், இது 'இராமாயணயுகம்' அல்ல. 'இராவணயுகம்' என்பதை எதிரிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும்.

இனி வரும் காலத்தில் இராமலீலாவுக்கு பதிலடியாக 'இராவண லீலா'வுக்கு தயாராக வேண்டிய நிலையை பார்ப்பனர்களே உருவாக்கி வருகிறார்கள். இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு மாவீரன் பிரபாகரன் வாழ்க என்று சேர்த்து முழக்குவோம்! இராமனுக்கு எதிராக தீ மூட்டுவோம்; அதில் இந்திய தேசிய பார்ப்பன வர்க்கத்தையும், துரோகத்தையும் சேர்த்துப் பொசுக்குவோம்!

கோவையில் 'இந்து' ஏட்டுக்கு தீ


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் - தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் 'இந்து' பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். மாலினி பார்த்தசாரதியின் 'மலநாற்றம்' வீசும் கட்டுரை வெளியிட்ட 'இந்து' ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.

பெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த, கி.வீரமணி!திரிபுவாத திம்மன்கள் - யார்? (5)

அவ்வப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகளுக்கு 'ஆலவட்டம் வீசி' அதிகார மய்யத்தின் அரவணைப்பைத் தேடிக் கொண்டிருப்பவர் கி.வீரமணி. இந்த அரவணைப்புக்காக அவர் மேற்கொள்ளும் 'யுக்திகளுக் கும்', அதனடிப்படையில் வெளியிடும் சந்தர்ப்பவாத அறிக்கைகளுக்கும் கொள்கை முலாம் பூசிக் கொள்கிறார்கள்.


ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிப்பதற்கும், நாடு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே கல்வி வெளிச்சம் பரவுவதற்கும், காமராசர் ஆட்சியை தீவிரமாக ஆதரித்தார் பெரியார். அதற்காக அவர் அதிகார மய்யத்திடம் சரணடைந்துவிடவில்லை. அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியின் போதுதான் நடத்தினார். தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை காமராசர் ஆட்சியில் தான் அறிவித்தார். அதேபோல், இப்போது நடந்தால் ஆட்சிக்கு தொல்லைதரவே இத்தகைய போராட்டங்களை பெரியார் நடத்துகிறார் என்று, கி.வீரமணி அறிக்கைகளை வெளியிட்டிருப்பார்.
பார்ப்பனர் ஜெயலலிதா ஆட்சிக்கு ஆதரவும், பாராட்டுகளையும் குவித்துக் கொண்டிருந்தபோது, அந்த 'யுக்திக்காக' பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும், கடவுள் எதிர்ப்பும், அவரது லட்சியமல்ல. ஒரு வழிமுறைதான் என்ற 'வியாக்யானத்தை' வீரமணி முன் மொழிந்ததை கடந்த இதழில் சுட்டிக்காட்டியி ருந்தோம். மற்றொரு கொள்கை புரட்டை இங்கே எழுதுகிறோம்.

1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், பெரியாருக்கு உடன்பாடானது அல்ல. கட்டாய இந்தியைக் கொண்டு வந்த பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி, 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கினார். தி.மு.க.வும் அப்போது ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சியை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருந்தது. பெரியார் இந்தப் போராட்டத்தை பார்ப்பனர் நடத்தும் கலவரம் என்று கூறினார். பெரியாரின் எதிர்ப்புக்கு உள்ளான அந்தப் போராட்டத்தை கி. வீரமணி, பெரியாருக்குப் பிறகு அங்கீகரித்தார். அதற்கான பின்னணியும் 'யுக்தி' தான்! ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தபோது, பெரியார் திடலில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு தியாகிகளுக்கு ஒரு பாராட்டுக் கூட்டத்தை கி.வீரமணி ஏற்பாடு செய்தார். ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியான சசிகலாவின் கணவரும், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான நடராசன் - 1965 ம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். அவருக்கு விருது வழங்கி மகிழ்விக்க, நடராசன் ஆலோசனைப்படி கி.வீரமணி நடத்திய பாராட்டுக் கூட்டமே அது. அந்த 'விருது வழங்கும்' நிகழ்ச்சியின் விளம்பரம் 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத்தின் பெயரால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தில் திராவிடர் கழகக் கொடிக்கு பதிலாக, அ.இ.அ.தி.மு.க. கொடிகளோடு விளம்பரம் வெளி வந்தது. பெரியாரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு போராட்டத்தை பெரியார் மறைவுக்குப் பிறகு, அதை அங்கீகரித்து போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு விருது வழங்கியது - பெரியாரைத் திரிப்பது அல்லவா? அதிகாரத்தில் உள்ளவர்களை மகிழ்விப்பதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய - இந்த வீரமணிதான், பெரியார் நூல்களை, மற்றவர்கள் வெளியிட்டால், திரித்து விடுவார்கள் என்கிறார். பெரியார் திராவிடர் கழகத்தை 'திரிபுவாத திம்மன்கள்' என்கிறார்! பெரியாரைத் திரிப்பது யார்? பதில் வருமா?
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

விடுதலைப் புலிகளுக்கும் - ஈழ விடுதலைக்கும் தமிழகத்தில் பேராதரவு'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் கருத்து கணிப்பு

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம் அம்பலமாகி யுள்ளது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல. ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு - 'சிஃபோர்' எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை அக்.12, 2008 அன்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி தந்து, ஆயுதங்கள் வழங்குவதை தமிழ் நாட் டில் கணிசமான மக்கள் விரும்பவில்லை. இதனால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி யுடன் தி.மு.க. உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே - கணிசமான தமிழர்களின் கருத்து.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு, அவர் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால், இந்திய ராணுவம் உடனடியாக, பிரபாகரனை மீட்க, இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பெரும்பாலோர் கூறுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும், ஈழத் தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் தான் என்றும் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள்.
40 சதவீத தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு நிதி உதவியும், பொருள் உதவியும் வழங்க விருப்பமுடன் உள்ளனர்.
சென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 1031 பேர் பல்வேறு தரப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்டனர். பேட்டி காணப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப் பட்டது என்பதால், இதுவே தற்போதைய தமிழர்களின் உணர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
• தமிழ் ஈழம் அமைய - பணமும் பொருளும் அளிக்கத் தயார் என்று 40 சதவீதம் பேர் கூறு கிறார்கள். தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்று 10 சதவீதம் பேர் மட்டுமே கூறுகிறார்கள். ஈழத் தமிழர்களுக்காக முழு அடைப்பு நடந்தால், அதில் பங்கேற்போம் என்று 10 சதவீதம் பேரும், தமிழ் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவோம் என்று 22 சதவீதம் பேரும், நியாயமான பிரச்னை தான், ஆனால், தங்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்று 14 சதவீதம் பேரும் கூறுகிறார்கள்.
• பிரபாகரனுக்கு ஏதேனும் இலங்கை ராணுவத்தால் ஆபத்து நேருமானால், இந்திய ராணுவத்தை உடன் அனுப்பி பிரபாகரனை பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டில் பெரும் பான்மையோர் கருத்து. இப்படி கருத்து கூறியவர்கள் 31 சதவீதம்.
• அதேபோல், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் கருத்து. 51 சதவீதத்தினரின் கருத்து இதுவேயாகும். தடையை நீடிக்க வேண்டும் என்போர் 8 சதவீதம் மட்டுமே.
• விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்று தான் ஈழத் தமிழர்களின் உண்மையான ஒரே பிரதிநிதி என்பதும், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. விடுதலைப் போராளிகள் என்பதும் பெரும் பான்மைத் தமிழர்களின் கருத்தாக உள்ளது.
36 சதவீதத்தினர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளனர். பயங்கரவாதிகள் என்று கருத்துடையோர் 12 சதவீதம் மட்டுமே. மற்றவர்களுடன் இணைந்து தமிழர்களுக்காகப் போராடும் அமைப்பு என்று 22 சதவீதம் பேரும், சுதந்திரத்துக்காகப் போராடு வோர் என்று 30 சதவீதம் பேரும் கருத்து கூறி யுள்ளனர்.
• இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள் விக்கு - இலங்கைக்கு ஆயுதமும், ராணுவப் பயிற்சி யும் வழங்கி வரும் மன்மோகன்சிங் ஆட்சியிடம் தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர் களின் கருத்தாக உள்ளது. 34 சதவீதம் பேர் இந்தக் கருத்தை தெரி வித்துள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடத்தலாம் என்று 10 சதவீதத் தினரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று 12 சதவீதத்தினரும், ஈழத் தமிழர் பிரச் சினைக்காக சிறப்பு வரி விதித்து, தமிழர்களுக்கு உதவ முன்வந்தால், வரி கட்டத் தயார் என்று 10 சதவீதத்தினரும், பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று 2 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளனர்.
• ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபாடு காட்டுவதில் போட்டி போட் டுக் கொண்டிருப்பது சரி தானா என்ற கேள்விக்கு அது நியாயமானதே என்று பெரும்பான்மையான 44 சதவீதத்தினர் கருத்து கூறியுள்ளனர்.

சிற்பி ராசனின் மகத்தான சமூகப் புரட்சி!

பெரியார் திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டு, மூடநம்பிக்கைக்கு

எதிராக மக்களிடம் பகுத்தறிவு பரப்புதலை லட்சியமாகக் கொண்டு செயல் பட்டு வரும் தோழர் சிற்பி ராசன் தலை சிறந்த சிற்பிகளில் ஒருவர். அவர் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட 'கடவுள்கள்' தலித் சிற்பிகளால் உருவாக்கப் பட்டவர்கள். சிற்பி ராசனின் இந்த மகத்தான சமூகப் புரட்சியை 'ஆனந்தவிகடன்' ஏடு 8/10/08 படம் பிடித்துக் காட்டியுள்ளது.
"பதினைந்து வருடங்களுக்கு முன்பு இசை ஞானி இளையராஜா எனது சிற்ப மையத்துக்கு வந்திருந்தார். அப்போது நான் செதுக்கிக் கொண்டு இருந்த விநாயகர் சிலையைத் தொட்டுப் பார்க்க லாமா என்று கேட்டார். 'இப்போதுதான் தொட முடியும். கோயில் கருவறைக்குள் சென்றுவிட்டால் பக்தனாகிய உங்களாலும் தொட முடியாது. சிலையைச் செய்த என்னாலும் தொட முடியாது' என்றேன். சிரித்துக் கொண்டார்!" தனது உளியைப் போலவே சிற்பி ராஜனின் வார்த்தைகளிலும் கூர்மை!

இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன். சுவாமிமலை அருகே திம்மக்குடியில் இருக்கும் 'ராஜன் சிற்ப மையத்'தில் ஏதோ ஒரு தாளகதியில் இசை மீட்டு கின்றன நூற்றுக்கணக்கான உளிகள். தாமரைப்பூ சரஸ்வதி, காசுகளை அள்ளி இறைக்கும் லட்சுமி, ரதி, மன்மதன், திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன், ஊழித் தாண்டவமாடும் நடராசர் என பஞ்சலோக மற்றும் வெண்கல வடிவங்களில் மினி தேவலோகச் சூழல்! இந்தியாவின் சார்பாக லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து சிற்பக் கண்காட்சிகளில் கலந்து கொள்ள மத்திய அரசு தேர்ந்தெடுப்பது இவரைத்தான். பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக சிற்பி ராஜனின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றிருக் கிறது.

இவற்றைத் தாண்டியும் ராஜனுக்கு இருக்கிறது சில தனிச் சிறப்புகள். சுவாமி சிலைகளைத் தெய்வாம்சமாக வடித்துத் தரும் ராஜன், ஒரு பழுத்த நாத்திகவாதி. பெரியார் கொள்கைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப் பணித்தவர். இவரது சிற்ப மையத்தின் இன்னொரு சிறப்பு தலித் சிற்பிகள்! தாழ்த்தப் பட்டவர்கள் என ஒதுக்கப்படும் தலித்களால் உருவாக்கப்பட்ட எண்ணி லடங்கா கடவுள் சிலைகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முக்கியக் கோயில்களில் அருள் பாலித்துக் கொண்டிருக் கின்றன. புரொஃபஷனல் கலைக்கூடம், லேப்-டாப் மூலம் வாடிக்கையாளர் களுடன் தகவல் பரி மாற்றம் என சிற்பக் கலையை அடுத்த நூற்றாண் டுக்குக் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் ராஜன். கலவையான உலோக மணம் நாசியைத் தீண்ட அங்கிருந்த வித்தி யாசமான 'பறை யடிக்கும் விநாயகர்' என்னோடு நின்றிருந்த வின்சென்ட்டின் கேமராவை ஈர்த்தது.

"அனைவருக்கும் பொதுவான கடவுள், தலித் மக்களின் கலா சாரத்தையும் பிரதி பலிக்க வேண்டும் இல்லையா? அதற் காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை! பதின் மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம் மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உரு வாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உடள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா? பெரியார் தொண்டனாக இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? மூலவர் சிலைகளையே தலித்துக்களைக் கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன். சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததைவிடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய்வதா?' என்று கேள்வி எழுப்பி யவர்கள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயம் மிக்க கடவுள் சிலைகளைப் பார்த்து அசந்து போனார்கள். ஆரம்ப காலங்களில் கோயில் நிர்வாகிகள் தலித்து களால் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகளை வாங்க மறுத்தார்கள். கடைசியில் அவர்களைக் கலை வென் றது. அந்த அளவுக்கு தலித் இளைஞர்களின் சிற்ப நுட்பம் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்டது.

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தலித்துகள். நமக்கான கலையை, நாகரிகத்தை உருவாக்கித் தந்தவர்கள். சாமி சிற்பங்கள் மட்டும் அந்தக் கலை குடிகளின் கரங்களி லிருந்து தப்ப முடியுமா? எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமி மலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும் தான் உருவாக்கினோம். அதன் பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட் டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பி வந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடி வந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தி னோம். அவ்வளவு ஏன்...? காஞ்சி சங்கரமடத்தி லுள்ள காமாட்சி அம்மனின் அவதார மாகிய மகாமேரு சிலையை உருவாக்கியவர்களும் என் தலித் மாணவர்கள்தான்" என்கிற ராஜனும், அவரது மாணவர்களும் இது வரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகளை உருவாக்கி உள்ளனர்.

சுவாமிமலையில் இயங்கும் சிற்ப மையத்தை அண்மையில் விற்றுவிட்டார் ராஜன். அதை வாங்கிய வர்கள், 'ராஜன் சிற்ப மையம்' என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள ஒரு பெரும் தொகையை ராயல்டியாக வழங்கியுள்ளனர். இப்போது கும்பகோணம் அருகே ஆலங்குடியில் பரந்து விரிந்த பிரமாண்ட சிற்ப மையத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். "அங்கும் தலித் இளைஞர்களுக்கே முன்னுரிமை" எனும் ராஜன், சிற்பக் கலையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாகத் திருமணமே செய்து கொள்ள வில்லை.

ராஜனின் சீடரான சிற்பி பாண்டுரங்கன், "ஒளிவு மறைவின்றி சிற்பக் கலையின் ரகசிய நுட்பங்கள் அனைத்தையும் ராஜன் ஐயா தான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். வருமானம், வெளிநாட்டுக்காரர் களின் பாராட்டுக்கள் பெரிய விஷயமில்லை. உள்ளூ ரிலேயே சாதியின் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கியவர்கள் கூட இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்." ஏழரை அடி உயரமும் நானூறு கிலோ எடையும் கொண்ட லட்சுமி சிலையை உயிரோட்டமாகச் செதுக்கியபடியே பேசுகிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி என்னும் கடும்பாறையின் மீது ராஜனின் உளி தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது! ட

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?

மதவன்முறை சக்திகள் அதிர்ச்சி

நாடு முழுதும் மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு வன்முறைகளை நடத்தி வரும் சங்பரிவார்களின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில பொதுக் குழு சேலத்தில் கூடியபோது மதவெறியை எதிர்க்கும் மனிதநேய உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பையும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். பெரியார் திராவிடர் கழகம், சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த 250 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

அண்மைக்காலமாக நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பா.ஜ.க. சங்பரிவாரங்கள், மதக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி வரு கிறார்கள். மதக் கலவரங்களை உருவாக்கி படுகொலை களை நடத்தி, மத அடிப்படையில் வாக்காளர்களை கூறு போடுவதே இவர்களின் நோக்கம். தமிழ் நாட்டிலும் பெரியார் கருத்துப் பரப்பும் கூட்டங்களில் கலவரம் விளைவித்து, அதற்கு ‘இந்துக்களின் தன்னெழுச்சி’ என்று பார்ப்பனர்கள் இல.கணேசன், ராம.கோபாலன் போன்றோர், அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சங். பரிவார்களின் அரசியல் அமைப்பான பா.ஜ.க. சேலத்தில் மாநில பொதுக் குழுவை கடந்த 27 ஆம் தேதி கூட்டியது. பா.ஜ.க.வின் - அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், இதில் பங்கேற்க வருகை தந்தார். அமைதிப் பூங்காவான தமிழகத்தை, மதவெறிக் களமாக மாற்றிட திட்டமிட்டு வன்முறை களை நடத்தி வரும், பா.ஜ.க.வின் செயற்குழு தமிழ்நாட்டில் சேலத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நடத்திடக் கூடாது என்று, எதிர்ப்பு தெரிவிக்க, மதச்சார்பற்ற மதவெறிக் கலவரங்களை எதிர்க்கும் அமைப்புகள் முடிவு செய்தன. பெரியார் திராவிடர் கழகம், ‘சேலமே குரல் கொடு’, குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் முதல் கட்டமாக சேலத்தில் 23 ஆம் தேதி பத்திரிகை யாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டி யில், “சங்பரிவாரின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில செயற்குழு சேலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த இடத்தி லும் நடத்தவிட மாட்டோம்; அமைதிப் பூங்காவான தமிழகத்தை வன்முறைக் களமாக்கிடும், எந்த சிறு நிகழ்வும், தமிழகத்தில் நடக்கக் கூடாது என்று அமைதி விரும்பிகளாகிய நாங்கள் அறிவிக்கிறோம்; பொதுக்குழு நடத்தப்படுமானால் நேரடி நடவடிக்கை யில் இறங்குவோம்” என்று அறிவித்தார்.

அடுத்த நாளே - ‘தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்ற விரும்பும் பா.ஜ.க.வின் பொதுக் குழுவை அனுமதிக்காதே’ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஏராளம் ஒட்டப்பட்டன. பத்திரிகை யாளர்கள் சுவரொட்டிகளை படம் பிடித்து, பத்திரிகைகளில் வெளியிடவே, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் செய்தி வேகமாகப் பரவியது. அதிர்ச்சியடைந்த மதவெறி சக்திகள் - கழகத்தின் சுவரொட்டிகள் மீது பா.ஜ.க. பொதுக்குழு சுவரொட்டிகளை ஒட்டியதோடு, கழக சுவரொட்டிகளை கிழிக்கத் தொடங்கினர். கழகத் தோழர்கள் சுவரொட்டி கிழிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக சுவரொட்டிகளை அடித்து, ஒட்டி, பதிலடி தந்தனர். சுற்றுச்சூழல்களை நாசப்படுத்தி, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் ‘கெம்பிளாஸ்ட்’ நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் ‘கோனூர் விவசாயிகள் சங்கம்’ மக்களின் வாழ்வுரிமையை பறித்து, நிலங்களை பெரும் தொழில் நிறுவனங் களுக்கு ‘தாரை’ வார்ப்பதை எதிர்த்துப் போராடி வரும் ‘கஞ்சமலை பாதுகாப்புக் குழு’வினரும், மனித உரிமைக்கும், சுற்றுச் சூழலுக்கும் எதிராக செயல்படும் மதவெறி சக்திகளை எதிர்த்து இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.

இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்த காரணத்தால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி, மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவர் விநாயக்சென் அவர்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. வங்காளியான விநாயக்சென் வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து - சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களிடம் மருத்துவப் பணியாற்றி வந்தவர். மனித உரிமைப் போராளி; மனித உரிமைக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர்; மருத்துவர் விநாயக்சென்னை கைது செய்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தோடும், ஒரிசா, கருநாடகம், தமிழ்நாட்டில் நடக்கும் மதவெறி வன்முறைகளைக் கண்டித்தும், பா.ஜ.க. பொதுக் குழு நடக்கும் மண்டபத்தின் முன், கறுப்புக்கொடிகளுடன் திரளுவது என முடிவு செய்யப்பட்டது.

‘மதத்தின் பெயரால் வன்முறைகளை அரங் கேற்றாதே’; ‘மருத்துவர் விநாயக்சென்னை விடுதலை செய்’; ‘அமைதியும் நல்லிணக்கமும் மலரட்டும்’ என்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப் பட்டு, மார்பிலும், முதுகிலும் தொங்கவிட்டு, தோழர்கள் வந்த காட்சி, பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமையாளர் பியுஸ் மானஷ் - இவைகளைத் தயாரித்து வழங்கினார்.

சேலம் இரும்பாலை சாலையிலுள்ள ஜகீர் ரெட்டிப்பட்டி எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில், பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இரும்பாலை பிரிவு சாலை அருகே திரண்ட தோழர்கள் மண்டபத்தை நோக்கி, மதவெறி சக்திகளுக்கு எதிராக முழக்கமிட்டு, அணிஅணியாகப் புறப்பட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் முதல் அணியில் வந்த 150 கழகத் தோழர்கள் மண்டபத்தை நெருங்கும் முன்பே காவல்துறை தடுத்து கைது செய்தது.

சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின் தலைமையில் இரண்டாவது அணியில் 50 தோழர்கள் கறுப்புக் கொடியுடன் புறப்பட்டு, வேறு வழியாக மண்டபத்தை அடைந்து, மண்டப வாயிலின்அருகே கறுப்புக் கொடிகளுடன் முழக்கமிட்டபோது அதிர்ச்சியடைந்த காவல்துறை கழகத்தினரை சுற்றி வளைத்து போலீஸ் வேனில் ஏற்றியது.

மூன்றாவது அணியில் 50 தோழர்கள் மாவட்டக் கழக அமைப்பாளர் பாலன் தலைமையில் மண்டபத்தை நெருங்கி வாயிலிலே கூடியபோது காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தது.

கோனூர் விவசாயிகள் சங்கத் தோழர்கள் 25 பேர் மாதேஷ் தலைமையில் - கழுத்தில், கோரிக்கைப் பதாகைகளை மாட்டிக் கொண்டு மண்டபத்தை நோக்கி வந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கஞ்சமலை பாதுகாப்புக் குழுவினர் தோழர் கண்ணன் தலைமையில் வந்தபோது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திருவாக்கவுண்டனூர் சாலை யிலுள்ள பி.என்.சி.ஜி. திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, 30 நிமிட நேரம் கழித்து, சேலம் இளம்பிள்ளையைச் சார்ந்த கழகத் தோழர் மணிமாறன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர். மணிமாறன் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். மண்டபத்தின் வழியாக வந்தபோது, மோட்டார் சைக்கிளை மெதுவாக நகர்த்தி, கழகத் தோழர்கள் நிற்கிறார்களா என்ற தேடிக் கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க.வினர் கூட்டமாக ஓடிவந்து, தனியாக சிக்கிய தோழரை தாக்கத் தொடங்கினர். ஆடிட்டர் ரமேஷ் என்ற பா.ஜ.க. பார்ப்பனர், ‘அவனைப் பிடித்து நொறுக்குங்கடா’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு முதலில் வெளியே ஓடிவந்தார். கும்பல் மோட்டார் சைக்கிளைப் பிடித்துத் தள்ளியது; கழகத் தோழர் மணிமாறனைத் தாக்கியபோது, காவல்துறை தோழரை மீட்டு, திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தது. வெறி பிடித்த மதவெறி சக்திகள் - சாய்ந்து கிடந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த தோடு, வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்தது. பெரியார் படம் போட்டு எழுதப்பட்டிருந்த வண்டி எண் அறிவிப்பு பலகையையும் உடைத்தது. கையில் தடி கற்களுடன் திரிந்த மதவெறி யர்கள் கழகத்தினரை கைது செய்து ஏற்றி சென்ற காவல்துறை வேன்கள் மீது கற்களை வீசினர். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு, அந்தப் பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர் களிடையே கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாதேஷ் (கோனூர் விவசாயிகள் சங்கம்), செந்தில் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), கண்ணன் (கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் பேசினர்.பா.ஜ.க. சங்பரிவார் கும்பலின் மதவெறி வன் முறைகள் மற்றும் டாக்டர் விநாயக் சென்னின் மக்கள் நலப்பணிகள் பற்றி விரிவாக பேசப்பட்டு கருத்தரங்கம் போல் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜ.க. செயற்குழு மாலை 6.45 மணிக்கு முடியும் வரை, தோழர்கள் திருமண மண்டபத்திலேயே வைக்கப் பட்டு, பிறகு, விடுவிக்கப்பட்டனர். தோழர்கள் அனைவரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் சூரமங்கலம் காவல்நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர். கழகத் தோழர் தாக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தந்த பிறகே கலைந்து செல்வோம் என்று கழகத்தினர் காவல்நிலைய வாயிலேயே நின்று விட்டனர். இரவு 8.30 மணி வரை காவல் நிலையத்திலே இருந்து முதல் தகவல் அறிக்கையின் பிரதியைப் பெற்ற பிறகே - தோழர்கள், கலைந்து சென்றனர். மதவெறி சக்திகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்த்து - பாராட்டுகள் குவிகின்றன

அண்மைக் காலமாக வன்முறைகளை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் கலவரங்களை நடத்தி வந்த சங்பரிவார் - பா.ஜ.க. வன்முறைகளுக்கு எதிராக சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் - சுற்றுச் சூழல், மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பு மதச்சார்பின்மையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அமைப் பினரும் தங்கள் மகிழ்ச்சியை நேரிலும், பேசிகள் வழியாகவும் பகிர்ந்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்களை விடுதலை சிறத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உஞ்சை அரசன், அரங்க செல்லத் துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிய பெரியாரிய பொது வுடைமை கட்சித் தோழர்கள், கவிஞர் தமிழேந்தி, திருச்சி கலிய பெருமாள், த.தே.பொ.க. தோழர் பிந்துசாரன் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து, பாராட்டுகளைத் தெரிவித்தனர். சூரமங்கலம் காவல் நிலையத்தில் தோழர்கள் திரண்டிருக்கும் செய்தி கிடைத்தவுடன், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், உணர் வாளர்களும் தங்கள் மகிழ்ச்சி, வாழ்த்துகளைத் தெரிவித்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.
- நமது செய்தியாளர்

நளினியை விடுதலை செய்க!

17 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி வழங்கியுள்ள ‘பொது மன்னிப்பின்’ கீழ், விடுதலை செய்வதில் தமிழக அரசு முறைகேடாக செயல்பட்டிருப்பதை, உயர்நீதிமன்றம் திட்டவட்ட மாகக் கூறியிருக்கிறது. இவர்களை விடுதலை செய்யவே கூடாது என்று ஏற்கனவே முடிவெடுத் துக்கொண்டு கலைஞர் ஆட்சி செயல்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


முதலில் - இந்த வழக்கில் தம்மையும் இணைத் துக் கொள்ளுமாறு, சுப்ரமணியசாமி மனுதாக்கல் செய்தபோது, தமிழக அரசு அம்மனுவை நிராகரிக் கக் கோரியது. அதற்கான காரணம் - சுப்ரமணிய சாமி கோரிக்கையில் அரசுக்கு உடன்பாடு இல்லை என்பது அல்ல; சுப்ரமணியசாமியின் கோரிக்கையை தி.மு.க. அரசே தீவிரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, அவர் தனியாக ஏன் மனு செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கருத்தாக அமைந்துள்ளது.

இவர்களின் மீதான வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்ததால் - இதில் முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு தான் என்று ‘பந்தை’ மத்திய அரசின் மைதானத்துக்குள், தள்ளிவிட, கலைஞர் ஆட்சி முயற்சித்தது. இதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது.

நளினியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எஸ். துரைசாமி முன் வைத்த வாதங்கள் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வாதங்களை நீதிபதி அப்படியே ஏற்று, தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். நளினியின் விடுதலைகோரும் மனுவை பரிசீலிக்கக்கூடிய சிறை ஆலோசனைக் குழுவின் கூட்டம் - சிறை விதிகளின்படி நடக்கவில்லை என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி வி.எஸ். நாகமுத்து, எட்டு குறைபாடுகளை பட்டியலிட் டுள்ளனர். இந்த சட்ட நுணுக்கங்களுக்குள் நாம் நுழைய விரும்பவில்லை. தார்மீகப்படியும் நியாயப்படியும் சில கேள்விகளை தமிழக அரசின் முன் வைக்கிறோம்.

ராஜீவ் கொலையில் தொடர்புபடுத்தப் பட்டவர்கள் என்பதற்காகவே அவர்கள் வாழ்நாள் முழுதும் சிறையிலே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்று அரசு கருதுகிறதா? ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து, மனித உரிமையில் மகத்தான சாதனை புரிந்துள்ள கலைஞர் ஆட்சி, 17 ஆண்டு காலம் சிறையில் - அதுவும் தனிமைச் சிறையில் வதைப்பட்டுள்ளவர்களை விதிகளுக்கு புறம்பான வழிகளைப் பின்பற்றி சிறையிலேயே அடைத்து வைக்க முடிவெடுப்பது நியாயம் தானா? அரசியல் கூட்டணிப் பார்வை மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளிலும் முடிவெடுப்பதற்கான அடிப்படையான காரணமாக இருக்க வேண்டுமா? இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சுமார் 1400 சிறைக் கைதிகளில் பெரும்பாலோர் கொலைக் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் தானே! நளினியும் - அதேபோல் ஒரு குற்றத்தில் அதுவும் நேரடியாக தொடர்பு இல்லாத ‘குற்றச் சாட்டில்’ அதுவும், தி.மு.க. எதிர்த்து வந்த கருப்புச் சட்டமான ‘தடா’ சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பட்டவர் தானே!

சோனியாகாந்தி அம்மையாரும், அவரது மகள் பிரியங்காவும் கருணையோடு இந்தப் பிரச் சினையை அணுக விரும்பும்போது, கலைஞர் மட்டும், இதில் தயக்கம் காட்டுவதில் நியாய மிருக்கிறதா? அதிகாரத்தை உறுதியாக - கொள்கை முடிவுகள் எடுப்பதற்குப் பயன்படுத்துவதில் கலைஞர் தயக்கம் காட்டலாமா? பார்ப்பனர்களும், பா.ஜ.க.வினரும், தங்களது அதிகாரத்தைத் துணிவோடு பயன்படுத்துகிறார்களே?

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு - ஒரு நல்ல வாய்ப்பாகும்; இதைப் பயன்படுத்தி நளினியை விடுதலை செய்யும் முடிவை எடுப்பதே விவேக மானது; கலைஞர் செய்வாரா?

தலித் மாணவி படுகொலை காவல்துறை அலட்சியத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சத்திய மங்கலம் - கிச்சரகம்பாளையத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 14 வயது மாணவி புனிதா, பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஆக°டு மாதம் 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. ஆனால், காவல்துறை, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடய சோதனைகளைக்கூட மேற்கொள்ளாமல், காவல்துறை காட்டும் அலட்சியத்தைக் கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முன் 29.6.2008 வெள்ளி காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது.

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கூட் டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட் டத்தில் இந்த வழக்கு சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர்மணி, பாலசுந்தரி (பா.ம.க. பொதுச்செயலாளர்), வி.பி.குண சேகரன் (ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்), வழக்கறிஞர் பாப்பா மோகன், மக்கள் உரிமைக் கழக மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் நிலவன் உள்ளிட்ட பல் வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். ‘ஆம்னெஸ்டி இன்டர் நேஷனல்’ என்ற சர்வதேச பொது மன்னிப்பு சபை - இவ்வாண்டை மாணவிகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, தலித் மாணவியின் படு கொலையில் காவல்துறை அலட்சியத்தைக் கண்டித்தனர்.

மவுனம் சாதிக்கிறார். ‘இளவல்’ வீரமணி, இதை விரும்ப மாட்டார் என்பதற்காக, நியாயமான ஒரு செயலை அரசு முடக்குவது சரியாகுமா என்பதே நமது கேள்வி! பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க ‘தி.க.சி.’ கோரிக்கை“எழுத்தாளர் தி.க.சி. ‘தீக்கதிர்’ நாளேட்டில் எழுதி வெளிவந்த கடிதம். (26.9.2008)

சமூக அநீதியை - பொருளாதார அநீதிகளை முறியடிப்போம்” எனும் பி.சம்பத் கட்டுரை (‘தீக்கதிர்’ 17.9.08) படித்தேன்.கட்டுரை, தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் சான்று காட்டி, எழுச்சியூட்டும் வண்ணம் கச்சிதமாக எழுதப் பெற்றுள்ளது. பாராட்டுக்கள்.

கட்டுரையின் தொடக்கத்தில், “1929 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாநாட்டில் பெரியாரின் முழக்கம் இது” என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு குறிப்பிடப்படும் கருத்துக்களும், பெரியாரின் புரட்சிகர முழக்கங்களும், எழுத்துக்களும், சிந்தனை களும், தமிழக மக்களிடையே - குறிப்பாக ஏழை - எளிய அடித்தட்டு மக்களிடையே, பெரி யாரின் 130 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில் அதிகம் பரவவில்லை என்பது கசப்பான உண்மை.
இந்த இழிநிலையை மாற்ற, பெரியாரின் படைப்புக்கள் (எழுத்துக்கள், தலையங்க உரைகள் முதலியன) நாட்டுடைமை ஆக்கப் பெற வேண்டும். இதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தலைவர்களும், ஏடுகளும், தமுஎச போன்ற கலை இலக்கிய அமைப்புகளும் முயற்சியெடுக்க வேண்டும்.
- தி.க.சி., நெல்லை.

சென்னை கரு.அண்ணாமலை இல்லத் திருமண விழா

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கரு. அண்ணாமலையின் மைத்துனியும், வேலு - அம்மா கண்ணு ஆகியோர் மகளுமான வே. பாக்கியா, குஞ்சிதபாதம்-வசந்தா ஆகியோரின் மகன் கு. சரவணன் இவர்களுடைய திருமணம் 14.9.2008 அன்று காலை 9 மணியளவில் கலைஞர் கருணாநிதி நகர் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்தது. கழகத் துணைத்தலைவர் ஆனூர் கோ. செகதீசன், வழக்கறிஞர் செ. துரைசாமி, வழக்கறிஞர் சு. குமாரதேவன், வழக்கறிஞர் இளங்கோவன், அன்பு தனசேகர் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர். கழகப் பொறுப்பாளர்களுக்கு ‘பெரியார்’ படம் போட்ட சுவர் கடிகாரத்தை கரு. அண்ணாமலை திருமண வரவேற்பாக வழங்கினார். மணமக்கள் சார்பாக ‘புரட்சி பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.

கழகம் எடுத்த பெரியார் விழாக்கள்!

ஈரோடு மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் 130 வது பிறந்த நாள் விழா. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டது.
கோபி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு. வேலுச் சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் சதுமுகை பழனிச் சாமி, புதுரோடு சிதம்பரம், இளைஞரணி அமைப்பாளர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பெருந்துறை ஒன்றியம் கூதாம்பி - வெள்ளாங் கோவில் பிரிவில் மாக்கானாங்கோம்பை பாலசுப்பிரமணி முதல் கொடியை ஏற்றி வைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

தந்தை பெரியாரின் உருவப்படம் பெரிய அளவில் தயாரித்து, மாலைளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப் பட்ட வேன் முன் செல்ல, பேண்டு வாத்தியங்கள், மத்தளங்கள், இசைக் கருவிகள் ஒலி முழங்கத் தொடங்கிய ஊர்வலம், 30-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க பல்வேறு ஊர்களின் வழியாகச் செல்லத் தொடங்கியது.

சிறுவலூர் பேருந்து நிறுத்தத்தில் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருந்துறை ஒன்றியச் செயலாளர் அர்ச்சுனன் இங்கு கொடியேற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து கொளப்பளூர் நகரை அடைந்தது ஊர்வலம். மூப்பன் சாலைப் பிரிவில் பெரியார் பஞ்சாலைத் தொழிலாளர் கழகத் தலைவர் து.ஜெயக்குமார், கிழக்குத் தோட்டம் பெரியார் நகரில் நேதா ஆசை, புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளி நிறுத்தத்தில் சரவணன், அருவங்கொரையில் ம. நிவாசு, குருமந்தூர் பிரிவில் சுப்பிரமணி, அம்மன் கோவில் பதியில் க. மூர்த்தி, கும்மிக்கருக்கில் செல்வராஜ் ஆகியோர் கழகக் கொடியேற்றி வைத்தனர்.


கொளப்பளூர் பேருந்து நிறுத்தக் கொடிக் கம்பத்தில் தோழியர் த. ரஞ்சிதமணி கொடியேற்றினார். கழக நகைச்சுவைப் பேச்சாளர் வேலுச்சாமி சமூகநீதிக்காக தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினை எளிமையாக எடுத்துக் கூறி உரை நிகழ்த்தினார்.காமராஜ் நகர் அருகில் பகுத்தறிவு நெறியாளரும், தி.மு.க. பிரமுகருமான அருள்மணி, மளிகைக் கடை கணேஷ் ஆகியோர் அன்புடன் வரவேற்று அனைவருக் கும் இனிப்புகள் வழங்கியதுடன் ஆர்வத்துடன் ஊர் வலத்திலும் பங்கு கொண்டனர். பெரியார் படத்திற்கு மலர் தூவி மாலையணிவிக்கப்பட்டது. அருகிலுள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வேட்டைக்காரன் கோயிலில் கொடிவேரி கிளைத் தலைவர் கோவிந்தன், மொடச்சூரில் காசி பாளையம் சுப்பிரமணி, ஜோதி நகரில் சு. வேலுச்சாமி, நாய்க்கன்காட்டில் கூடக்கரை அருளானந்தம், ஜீவா பணிமனை அருகில் கோபி நகரத் தலைவர் நாகப்பன் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

கோபி - ஈரோடு முதன்மைச் சாலையில் அமைந் துள்ள பா. வெள்ளாளபாளையம், பொலவக்காளி பாளையம் ஆகிய ஊர்களில் புதியதாக கழகக் கொடிக் கம்பங்கள், ஆசிரியர் சோமசுந்தரம், நேதா ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. அருள்மணி, தி.மு.க. பிரமுகர் பெருமாள் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர். ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி நேதாஜி முன்னிலை வகித்தார். பின்பு, தாசம்பாளையத்தில் தோழர் பழனிச்சாமி கொடியேற்றிய பின்பு கோபி நகருக்குள் ஊர்வலம் நுழைந்தது. ஒரே சீராக அழகுற நீண்ட வரிசையில் வந்த கருஞ்சட்டைப் படை ஊர்வலம், பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.

கோபி கடைவீதிகள், முக்கியச் சாலைகள் வழியாக வாகன ஊர்வலம் பெரும் ஒலி முழக்கங்களுடன் வந்த போது அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் இருந்தோர் பெருமளவில் பார்த்து வியந்தனர். ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

கோபி பேருந்து நிலையத்தில் கற்பகம், மூன்று முக்கு அரசமரத்தடியில் சித்ரா தையலர், நாராயணன், வாய்க்கால் விதியில் கனகராஜ், கச்சேரி மேட்டில் பி.சிவராஜ், கரட்டடிபாளையத்தில் மாவட்ட அமைப்பாளர் ரகுநாதன், ல.கள்ளிப்பட்டிப் பிரிவில் சித்தா பழனிச்சாமி, கள்ளிப்பட்டியில் மூர்த்தி ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

செப்டம்பர் 17 அன்று காலையில் தொடங் கிய ஊர்வலம் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. கோபி நகரத் தலைவர் நாகப்பன் இல்லத்தில் அனைத்து தோழர்களுக்கும் சிறப்பான புலால் உணவு வழங்கப்பட்டது.
கூடக்கரை

நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை கிராமத்தில் பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.புதிய கழகப் பெயர்ப் பலகையை நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எ°.சென்னி மலை திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றி வைத்தார். அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பித்தார்.தி.மு.க. பிரமுகர்கள் சுப்பிரமணி, தனுஷ்கோடி, பொன்னுசாமி மற்றும் கழகத் தோழர்கள் அருளானந்தம், கலைச் செல்வன், சிவராசு, சண்முகம், செல்வன், சசி, மனோஜ், முருகேசன், சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

காவேரிப்பட்டினம்
செப்டம்பர் 15 ஆம் நாள் திங்கள் கிழமை பேரறிஞர் அண்ணா 100வது பிறந்த நாளையொட்டி காவேரிப் பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தின் முன்புள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு காலை 9 மணி யளவில் காவேரிப்பட்டினம் ஒன்றிய அமைப்பபாளர் பையூர் தி.க. இளையராசா தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.கணணன், மாவட்ட துணை அமைப்பாளர் தி.குமார், கோ. பிரேம்குமார், நகர அமைப்பாளர் கோ. ஆனந்தன், மா. சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.செப்டம்பர் 17 , பெரியாரின் 130வது பிறந்த நாளை யொட்டி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத் தின் முன்பு பெரியார் உருவ படத்திற்கு காலை 10 மணியளவில் ஒன்றிய அமைப்பாளர் பையூர் தி.க. இளையராசா தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட அமைப்பாளர் ஆர். கண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் தி.குமார். கோ. பிரேம்குமார், நகர அமைப்பாளர் கோ. ஆனந்தன், மனோஜ்குமார், மா. சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்கோ, ம.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ருத்ரன், மாதையன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கழக தோழர்கள் அனைத்து கட்சி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் பையூரிலுள்ள பெரியார் உருவ சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சீர்காழி17.9.2008 அன்று காலை 10 மணி அளவில் சீர்காழி புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு நகர செயலாளர் பா. பிரபாகரன் தலைமையில் சீர்காழி ஒன்றிய துணைத் தலைவர் பொன். தேவேந் திரன் மாலை அணிவித்தார். கொள்ளிட ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கொடியேற்றி வைத்தார். சீர்காழி ஒன்றியத் தலைவர் இரா.ச.விசயகுமார் வரவேற்புரை யாற்றினார். நகர தலைவர் சீர்காழி பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார். மாணவரணி அமைப்பாளர் இன்பசேகரன், ரகுநாத், மாவட்ட துணைத்தலைவர் சோம. ராசராசன், புரட்சி கலை இலக்கிய மன்ற செய லாளர் அன்பு, ராசப்பா, வழக்கறிஞர்சோமசுந்தரம் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கொள்ளிட ஒன்றியத் தலைவர் நந்த. ராசேந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். சீர்காழி ஒன்றிய துணை செயலாளர் இரா. மே. இராமமூர்த்தி நன்றி கூறினார்.

கொள்ளிடம் ஒன்றியம்கொள்ளிட ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நகர தலைவர் பெரியார் செல்வம் , சீர்காழி ஒன்றிய துணை செயலாளர் இரா.மே. இராமமூர்த்தி ஆகியோர் கொள்ளிட ஒன்றிய பகுதிகளில் கழக கொடி யேற்றி இனிப்புகள் வழங்கினர். கொடியேற்று விழாவில் கொள்ளிட ஒன்றிய பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை17.9.2008 அன்று பெரியார் 130வது பிறந்த நாள் விழா காலை 8.30 மணியளவில் சென்னை பட்டாளத்திலுள்ள பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தோழர்களுடன் சென்று மாலை அணி வித்தார். 9 மணியளவில் அண்ணா சாலை யிலுள்ள பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் மாலை அணி வித்தனர். பின்னர் இரண்டு சக்கர வாகனம், ஆட்டோக்கள் என 100க்கும் மேற்பட்ட தோழர்களுடன் ஊர்வலமாக சேத்துப்பட்டு, தியாகராயர் நகர் ஆகிய இடங்களிலுள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, ஆயிரம் விளக்கு, ஆல்தோட்டம் பகுதியில் தோழர்கள் லியாஸ், வேழவேந்தன் ஏற்பாடு செய்திருந்த பெரியார் கருத்துக்கள் அடங்கிய கழகப் பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றினர். பின்னர் இராயப்பேட்டையிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். 11 மணி அளவில் இராயப் பேட்டை சைவ முத்தையா 5வது தெருவில் கழகக் களப்பணியில் உயிர் நீத்த கண்ணன். குமார் நினை வாக பெரியார் இரவு பாடசாலையை திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அன்பு தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். மாணவ மணி களுக்கு நோட்டு பென்சில், பேனா வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கு. சபரி தலைமை தாங்க சு. பிரகாசு வரவேற்க கோ. சீனு முன்னிலை வகித்தார். ச. சர வணன் நன்றி கூறினார்.பகல் 12.30 மணியளவில் திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியில் பெரியார் 130வது பிறந்த நாள் விழா அம்பேத்கர் இரவு பாட சாலை மற்றும் நூலகம் சார்பாக தோழர்கள் செல்வம், தம்பித்துரை, பாபு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பெரியார் 130வது பிறந்த நாள் கேக்கை வெட்டி உரை நிகழ்த்தினார் கழக வழக்கறிஞர் சு. குமாரதேவன். அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது.

பெரியார் 130வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் 18.9.2008 வியாழன் மாலை 6.30 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் சிலை அருகில் சமர்ப்பா குமரன் குழுவினரின் இன எழுச்சிப் பாடலோடு துவங்கியது. கி. முருகன் வரவேற்க, தபசி. குமரன், கரு. அண்ணாமலை முன்னிலை வகிக்க ச. குமரன் தலைமையேற்றக் கூட்டத்தில் இயக்குனர் சீமான் சிறப்புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், இளைஞர் இயக்கம் டாக்டர் எழிலன், எ. கேசவன், அன்பு தனசேகர் ஆகியோர் உரையாற்றினர். சு. ஆனந்தன் நன்றி கூற கூட்டம் 10.30 மணியளவில் முடிவுற்றது. மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நிகழ்ச்சியை தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?

திரிபுவாத திம்மன்கள் - யார்? (3)

பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்.”- மீ.கி.வீரமணி, ‘விடுதலை’ (30.8.2008)
மேலே எடுத்துக்காட்டிய “24 காரட் பொன் மொழிகளுக்கு” முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் ‘திரிபுவாத திம்மன்’ ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ எடுத்துக்காட்டியிருக்கிறது. ஆனால் ‘விடுதலை’யின் ‘அதிர்ச்சி’ எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்.பெரியாரியலையே புரட்டிக் கொண்டிருக்கிற இவர்கள் - அவற்றை கடந்தகால வரலாறுகளில் செய்தால்கூட பலருக்கும் தெரியாது போக வாய்ப்பு உண்டு. நடப்பு நிகழ்வுகளிலேயே - இந்தப் புரட்டுகளை வெட்க மின்றி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இதோ, ஒரு புரட்டு.

கலைஞர் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆட்சி, அனைத்துசாதி யினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமியற்றிய பிறகு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டது. என்ன காரணத்தினாலோ, தமிழக அரசு சட்டப்படியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. கலைஞர் மிகவும் சாதுர்யத்தோடு செயல்படுவதாக கி.வீரமணி அதை பாராட்டினார். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாட்டின் 6 முக்கிய கோயில்களில் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகளும் தரப்பட்டன. பயிற்சி முடித்து வெளியே வந்த மாணவர்கள் இப்போது அர்ச்சகராக முடியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது என்று ‘இந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“அர்ச்சகருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்தவர்கள், இப்போது தாங்கள் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தக்கூடிய வேறு ஏதாவது மாற்று வேலைகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அர்ச்சகர் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது, நீண்டு கொண்டே போகிறது. காரணம் - உச்சநீதிமன்றத்தில், வழக்கு இருப்பதால், அரசாங்கம், சாதி வேறுபாடற்ற அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தி வைத்துவிட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது ‘இந்து’ ஏடு.

இதை ‘விடுதலை’ நாளேடு எப்படி வெளியிட்டிருக்கிறது? “அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டதன் பலன்கள்; அரசுப் பணிக்கு முன்பே அர்ச்சகராகப் பணி புரிகிறார்கள்; ‘தி இந்து’ ஏட்டின் படப்பிடிப்பு” என்று புரட்டி செய்தி போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதையோ, வழக்கின் காரணமாக - அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆகமக் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதை அரசு நிறுத்திவிட்டது பற்றியோ, ‘இந்து’ வெளியிட்டதை இருட்டடித்து விட்டு, ‘விடுதலை’, ‘இந்து’ ஏட்டின் செய்தியை திரித்து மொழி பெயர்க்கிறது.

ஆகமங்களுக்கு உட்படாத கிராமக் கோயில்களில், தனியார் கோயில்களில் அர்ச்சகர்களாக ஏற்கனவே பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்கள். பெரியார் எழுப்பிய பிரச்சினையே ‘பார்ப்பனருக்கு மட்டுமே அர்ச்சகர் உரிமை உண்டு’ என்பதை நிலைநாட்டும் ஆகமக் கோயில்களில் அதைத் தகர்த்து, அதன் மூலம் ‘கர்ப்பகிரகத்துக்குள்’ நிலைநாட்டப்பட்டுள்ள ‘சூத்திர’ இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவேண்டும் என்பது தானே! அந்த மாற்றம் இப்போது வந்துவிட்டதா? இந்தக்கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில்.உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கிய அரசின் முடிவு தோல்வியில் முடிந்துவிட்டது. இது யார் தந்த ஆலோசனை? கலைஞர் எடுத்த ‘சாதுர்யமான’ முடிவு என்று, கி.வீரமணி பாராட்டியதற்கான காரணம் என்ன?

(‘31சி’ புகழ் !) வீரமணிதான் ஆலோசனை வழங்கினாரா? மீண்டும் தோல்வியில் முடிந்து விட்டதா? - இந்தக் கேள்விகள் - மக்கள் மன்றத்தில் எழத்தானே செய்யும்?

அதற்காக - மக்களை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு குழப்பலாமா? செய்திகளையே திரித்து வெளியிடலாமா? ‘முரசொலி’ நாளேடுகூட இப்படி திரித்துப் போட்டு வெளியிட முன் வராத நிலையில் ‘விடுதலை’ ஏன், இப்படி புரட்டல் வேலை செய்கிறது?

ஏதோ, வேலை வாய்ப்புக்காக - அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது போலவும், அந்த நோக்கம் வெற்றிப் பெற்றது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி பெரியார் கொள்கையை திரிப்பது புரட்டு அல்ல! மகா புரட்டு!திரிபுவாத திம்மன்கள் பதில் கூறுவார்களா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

ரங்கநாதபுரத்தில் கழகக் கிளை

7.9.2008 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள ‘ரங்கநாதபுரம்’ என்ற பகுதியில் புதிய கிளை துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நம்பியூர் பேருந்து நிலையம் அருகில் “தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்?” விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவதாக ரங்கநாதபுரத்தில் கழகக் கொடியை பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் ஏற்றி வைத்தார். அடுத்து ரங்கநாதபுரம் பிரிவில் பெயர் பலகையை திறந்து வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கழகக் கொடியையும் தோழர்களின் கரவொலி, முழக்கத்திற்கிடையே ஏற்றி வைத்தார். பின்னர் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடிக் கம்பத்தில் பொதுச்செயலாளர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

இருசக்கர வாகனங்களின் அணி வகுப்புக்கு பின்னர் கழகத் தலைவரும், பொதுச் செயலாளரும் ஜீப்பில் வந்து ஒவ்வொரு இடங்களிலும் கொடியினை ஏற்றி வைத்தது மிகுந்த எழுச்சியுடன் இருந்தது. பொதுமக்கள் ஆங்காங்கே நின்று கொண்டு இருளையும் பாராது வேடிக்கை பாhத்தனர்.

சரியாக 6 மணிக்கு பொதுக் கூட்ட மேடையில் குமாரபாளையம் “சமர்ப்பா குமரனின்” இசை நிகழ்ச்சி துவங்கியது. பாடல்கள் உணர்ச்சிகரமாக இருந்தது. எலத்தூர் செல்வக்குமார் தலைமையில் நாத்திகசோதி, ப. முருகன், சாமிநாதன், ப. அழகிரி ஆகியோர் முன்னிலையில் “தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்?” விளக்கப் பொதுக்கூட்டம் துவங்கியது.

மாவட்ட துணைத் தலைவர் கா.சு.வேலுச்சாமி மிகுந்த நகைச்சுவையுடன் உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இராம.இளங்கோவின் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் நீண்ட நேரம் மிக நேர்த்தியாக தமிழினத்திற்கு எதிரிகள் ‘பார்ப்பனர்களே’! என்பதை பல்வேறு ஆதாரங்களை, சான்றுகளைக் கூறி உரை நிகழ்த்தினார். தலைவர் உரையாற்றும்போது மேடையில் நம்பியூர் பகுதியைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் மாரியப்பன், தங்கவேலு ஆகியோர் மாலை அணிவித்து தலைவருக்கு தங்கள் அன்பை, ஆதரவை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ரங்கநாதபுரம் செயலாளர் இரமேசு நன்றி கூறினார். கூட்டத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி நின்று பேச்சைக் கேட்டனர். தோழர்கள் செல்வக் குமார், அழகிரி, ரமேசு, முருகன், கூடக்கரை அருளானந்தம், கலைச்செல்வன், சாமிநாதன் ஆகியோர் மிகுந்த ஆர்வத்துடன் கடுமையாகப் பணியாற்றி, கொடித் தோரணங்கள், சுவரெழுத்து, சுவரொட்டி என பல்வேறு வகையில் விளம்பரம் நன்கு செய்திருந்தனர். நம்பியூர் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது.

எல்லை மீறும் புகழ்ச்சி வியாபாரிகளிடம், எச்சரிக்கை தேவை!

கலைஞர் பார்வைக்கு...

அண்ணா நூற்றாண்டில் திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை கலைஞருக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்திருப்பது மிகச் சிறப்பான - மகிழ்ச்சியான முடிவு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. நீண்ட நெடிய திராவிடர் இயக்க வரலாற்றில் பயணித்த மூத்த தலைவர் கலைஞர்; பள்ளிப் பருவத்திலே அவர் தொடங்கிய கொள்கைப் பயணம் - பேச்சாளராக, எழுத்தாளராக, நாடக நடிகராக, போராளியாக தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு விதித்திட்டு, வளர்த்த உழைப்பாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, தி.மு.க. தலைவராக இந்த முதுமையிலும் தொடர்கிறது. தமிழகத்தின் சமூக வரலாற்றோடு இணைந்து நிற்கும்; பெரியார் விருது பெறும் முழுத் தகுதியும் பெற்ற முதன்மையான தலைவர்.
பெரியார் எனும் பெரும் புரட்சியாளர் தமிழகத்தின் வரலாற்றுப் போக்கைத் திருப்பியவர்; சுயமரியாதைப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர் அவர் தான்; அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினம் அவரால் தலை நிமிர்ந்தது. உரிமைக்குப் போர்க்கொடி உயர்த்தியது. ஆனாலும் பெரியார் தொடங்கிய அந்த சுயமரியாதை புரட்சிப் பயணம் - இன்னும் நெடுந்தூரம் கடக்க வேண்டி யுள்ளது என்பது உண்மை. இடையூறுகளும், முட்டுக்கட்டைகளும் பின்னடைவுகளும் சவால் களாக வந்து நிற்கின்றன.
இந்த நிலையில் சிலைகளும், விருதுகளும், பாராட்டுகளும், பெயர் சூட்டல்களும், பெரியாரின் சுயமரியாதை உணர்வுகளை ஊட்டக் கூடிய குறியீடுகளே தவிர, அவைகளே சமூக மாற்றங்களைக் கொண்டு வந்துவிடாது. இவை எல்லாம் கலைஞர் அறியாதவை அல்ல.
பெரியார் உருவாக்கிய சுயமரியாதைப் புரட்சி தமிழகத்தில் உருவாக்கியுள்ள தாக்கம் எத்தகையது என்ற கேள்விக்கு சரியான சமூகத்தைப் பற்றிய மதிப்பீடும், மாற்றங்களைப் பற்றிய புரிதலும் அவசியமாகிறது. சென்னையில் பெரியார் திடலில் கி.வீரமணி, சமூகநீதி வழங்கும் விழாவில் பேசிய கலைஞர் - பெரியார் உருவாக்கிய மாற்றத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.
“இன்றைக்கு உங்களால் போற்றப்படுகிற தலை வனாக இருக்கிறேன்; உங்களால் அன்பு பாராட்டப்படுகிற தலைவனாக இருக்கிறேன்; ஆனால் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த நிலைமைக்கு நான் வருவதற்கு காரணம், நம்முடைய கருத்துகள், பகுத்தறிவு எண்ணங்கள், பெரியாரால் போதிக்கப்பட்ட அந்தச் சுயமரியாதைச் சுடரொளி. அதுதான் இன்றைக்கு என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கின்றது.”
பார்ப்பனிய வர்ணாஸ்ரம சதியின் கொட்டத்தை அடக்கி, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போர் வேர் பிடிக்கக்கூடிய அளவுக்கு, மண்ணை பக்குவப்படுத்தியதுதான், பெரியாரின் மகத்தான சாதனை; இது சாதாரணமான புரட்சி அல்ல. இந்தப் பின்னணியில் சில கசப்பான உண்மை களையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. திருச்சியில் நடைபெற்ற விருது வாங்கும் விழாவில், பெரியார் விருது பெற்ற கலைஞருக்குப் புகழாரம் சூட்டுவதில் சில தலைவர்கள் கடுமையான போட்டிக் களத்தில் நின்றதை நாட்டு மக்கள் பலரும் தொலைக் காட்சியில் பார்த்தனர். அந்தப் புகழரையாளர்கள் உதிர்த்த மொழிகள் சமூகத்தைப் பற்றிய புரிதலோ, கவலையோ இல்லாமல் புகழ்ச்சியையே கேலிக்குரிய தாக்குவதாக இருந்தன என்பதை நாம் சுட்டிக்காட்ட விழைகிறோம்.
ஒரு தலைவர் தனது புகழுரையில், பெரியாரைவிட கலைஞர் உயர்ந்து நிற்கிறார் என்றும்; பெரியார் உயர்சாதிக்காரர், கலைஞரோ மிகவும் பின் தங்கிய சாதிக்காரர். எனவே பெரியாரைவிட கலைஞர் மிஞ்சி நிற்கிறார் என்றும்; இலக்கியப் படைப்புகளில் அண்ணாவையும் கலைஞர் மிஞ்சியவர் என்றும் பேசினார். மற்றொரு தலைவரோ, கலைஞருக்கு விருது வழங்கக்கூடிய போதுமான தகுதி பெரியாருக்கு இல்லை என்ற பொருளில் - பெரியார் விருது கலைஞருக்கு போதுமானது அல்ல; பெரியார் விருதையும் தாண்டி நிற்கும் விருது கலைஞர் விருதாகவே இருக்கும் என்றும் , கலைஞருக்கு தகுதியான விருது கலைஞர் விருதாக மட்டுமே இருக்க முடியும் என்றும் அவர் பங்குக்கு பேசினார். பெரியார் நூல்களை அரசுடைமையாக்கி விடக் கூடாது என்ற ஒரே கவலையோடு கலைஞரைப் பாராட்டத் துடித்த கருஞ்சட்டைத்தலைவர் - அண்ணாவைவிட, சிறந்த தலைவர் கலைஞர் என்றும், இதை பெரியாரே கூறி யுள்ளார் என்றும், இன்னும் ஒரு படி மேலே போனார்.
இப்படி எதார்த்தங்களுக்கு மாறாக - கலைஞரை சங்கடத்துக்கு உள்ளாக்கும் புகழ்ச்சி வியாபாரிகள் - ஏற்கனவே கலைஞரை வசைமாறி பொழிவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர்கள் தான் என்பதும் கலைஞர் அறியாதது அல்ல! இந்த அதீத புகழுரைகளால் கலைஞர் மனம் குளிர்வார் என்று, இவர்கள் கருதுவதே - கலைஞரைப் பற்றி இவர்கள் மிக பலவீனமான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளார்கள் என்பதை உணர்த்தி நிற்கிறது.
இவற்றுக்கும் கலைஞரின் பெரியார் திடல் உரையிலேயே பதில் இருக்கிறது. “நானே வளர்ந்தேன் - இவைகளையெல்லாம் நானே கற்றுக் கொண்டேன் - நானை இவைகளையெல்லாம் சிந்தித்தேன் - நானே புதிய ஞானோதயம் பெற்றேன் - எனவே இவைகளை யெல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்வது சுலபம்... ஆனால் எதிர்காலத்திலே வரலாறு எழுதுகின்றவர்கள் உண்மைகளைத்தான் எழுதுவார்கள். அந்த உண்மைகளை எழுதும் போது, அதிலே ஒரு பொய்யனாக நான் இருக்க விரும்பவில்லை” என்று கலைஞர் அருமையாக படம் பிடித்துள்ளார்.மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்கள் காங்கிர° கட்சியிலே இருந்தாலும்கூட - தமிழ் நாட்டில் இன்று கிராமங்களில் தலைவிரித்தாடும் சாதி, மூடநம்பிக்கைகள், கட்டை பஞ்சாயத்துகளுக்கு எதிரான சமூகப் புரட்சியை கலைஞர் நடத்திட வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைக்கிறார்கள். தங்கபாலு போன்றவர்கள் - சமூகநீதிக்கு நேர்ந்துள்ள ஆபத்துகளை பட்டிய லிட்டுக் காட்டுகிறார்கள்.
ஆனால், பெரியார் இயக்கத் தலைவர்களோ, பாராட்டுப் பத்திரங்களை வாசிப்பதற்கு மட்டுமே துடித்துக் கொண்டு நிற்கிறார்கள். பெரியாரையும் - அண்ணாவையும் மிஞ்சிய சாதனையாளர்கள் எவருமே இருக்கக் கூடாது என்று நாம் கூறவரவில்லை; அத்தகைய சாதனையாளர், புரட்சியாளர் வருவதுதான் பெரியார்-அண்ணா கொள்கைக்கான வெற்றியாக இருக்க முடியும். ஆனால், சமூகத்தில் அந்த நிலை வந்து விட்டதா என்பதே பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வி. பெரியார் விருது பெற்றுள்ள கலைஞரின் பார்வைக்கு நாம் கவலையுடன் சில பிரச்சினைகளை அவரது கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
• தமிழக கிராமங்களில் - சாதி வெறியும் தீண்டாமை யும் தலை விரித்தாடுகிறது. இரட்டைக் குவளைகள், இரட்டைச் சுடுகாடுகள் தொடருகின்றன; தீண்டப் படாத மக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்படுகிறது; சாதி மறுப்புத் திருமணங் களுக்கு பாதுகாப்பு இல்லை; சாதி வெறிக்கு கட்சித் தடைகள் ஏதுமில்லை; ஆதிக்கசாதியினர் வாழும் ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சாதி வெறியில் ஒரே அணி தான். சாதி வெறிக்கோ, தீண்டாமைக்கோ, துணை போகும் கழகத்தினர் மீது - சாதி ஒழிப்பு பேசும் கழகங்கள் நடவடிக்கை எடுத்தாலே கிராமங்களில் பாதி சாதிக் கலவரங்கள் நின்று போகும் வாய்ப்பு உண்டு! தி.மு.கழகம், இதை ஏன் கண்டிப்பாக பின்பற்றக் கூடாது என்பதே நமது கேள்வி.
• தமிழ்நாட்டில் - மதவெறி சக்திகள் தலைவிரித்தாடு கின்றன. பெரியாரைப் பற்றி இந்து முன்னணி - பா.ஜ.க. - மேடைகளில் எச். இராஜா போன்ற பார்ப்பனர்கள் கீழ்த்தரமாக பேசுகிறார்கள். பெரியார் இயக்கங்களின் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். கோவையில் - இயக்குனர் சீமான் பேசிய பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டத்தில் இந்து முன்னணியினர் பெரும் கலவரத்தை நடத்தினர். சென்னைக்கு அருகே உள்ள போரூரில் தொடர்ந்து பெரியார் பிரச்சாரக் கூட்டங்கள் மதவெறியர்களால் குலைக்கப்படுகின்றன; மத வெறி சக்திகளுக்கு காவல்துறை ஆதரவாகவே செயல்படுகிறது.
• பெரியார் திராவிடர் கழகம் - மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது. திராவிட இயக்க தமிழர் பேரவை - தி.மு.க.வின் ஆதரவு அமைப்பு தான். அந்த அமைப்பின் சார்பில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, காவல்துறை மறுத்து விட்டது; அதற்கு காவல்துறை கூறிய காரணம் தான் விசித்திரமானது.
சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகம் இருப்பதாலும், அதே பகுதியில் இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தங்கியிருப்பதாலும், அனுமதி மறுக்கப்படுகிறது என்று காவல்துறை எழுத்து மூலம் பதில் தந்துள்ளது. மீண்டும் அண்ணா நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டும், காவல் துறை எழுத்துப்பூர்வமாக அண்ணா நூற்றாண்டு விழாவுக்கும் அனுமதி மறுத்துள்ளது.
• அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றுமாறு - அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த அரசாணை இன்னும் உயிரோடு இருக்கிறது. ஆனால், அரசு அலுவலகங்களும், காவல் நிலையங்களும் - பஜனை மடங்களாகவே காட்சி அளிக்கின்றன.
• தமிழ் நாட்டில் அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினருக்கான 20000 பதவிகள் பூர்த்தி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், இப்படி ஒரு அவலம் தொடருகிறது.
• இப்போது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் வேலை வாய்ப்புகளை - தனியார் துறையில் மட்டும் தான் பெற முடியும். பொதுத் துறை நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாடுகளில் தனியார் துறைகளில் இடஒதுக் கீட்டை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதற்காகவே அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழு தனியார் துறை இடஒதுக்கீட்டையே கைகழுவ முடிவு செய்துவிட்டது. அறிவிப்பு வந்து 15 நாட்கள் ஓடி விட்டன. அரசு சார்பில் - எந்த எதிர்ப்பும் வரவில்லை. பார்ப்பனர்களுக்கு ஆதரவாக உ.பி.யில் ஆட்சி நடத்தும் முதல்வர் மாயாவதி கூட மாநிலத்தின் தனியார் தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை, சட்டப்பூர்வமாக்கியிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
• 17 ஆண்டுகாலமாக சிறையில் வாடிவரும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர், தங்களின் விடுதலையை கோரி நிற்கிறார்கள். ராஜிவ் கொலையில் நேரடி தொடர்புடைய பலரும் மரணமடைந்துவிட்டனர். வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு சட்டரீதியான நியாயங்களும், மாநில அரசுக்கு உரிமைகளும் இருந்தும்கூட கலைஞர் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்ற கேள்வியை வேதனையுடன் எழுப்புகிறோம்; கலைஞர் ஆட்சியிலே இவர்களுக்கு விடிவு கிடைக்காவிடில் - வேறு எந்த ஆட்சியில் கிடைக்க முடியும்? இதைப் பரிசீலிப்பதற்கு - தகுதியுள்ள ஒரே ஆட்சி கலைஞர் ஆட்சி தானே? அன்று தூக்கில் தொங்கிய மலேசியா கணபதிக்கு குரல் கொடுத்த கலைஞர், தோழர் தியாகு - புலவர் கலிய பெருமாள் உள்ளிட்டோரை, தூக்குத் தண்டனையிலிருந்து, காப்பாற்றிய கலைஞர், இன்று, பெரியார் குடும்பத்தின் பிள்ளை பேரறிவாளனுக்கு, நளினிக்கு - தோழர்களுக்கு பரிவு காட்ட வேண்டாமா?
• தமிழ்ச் செல்வன் - படுகொலைக்கு கண்ணீர் கவிதை வடித்து, உள்ளத்தின் உணர்வுகளை வெளிக்கொட்டினார் கலைஞர். பார்ப்பன சக்தி கள் உடனே மிரட்டின. அவர்கள் எதைச் செய் தாலும் மிரட்டவே செய்வார்கள். எந்தச் சூழலி லும் அவர்களின் ஆதரவுக் கரம் கலைஞரை நோக்கி நீளப் போவது இல்லை. ஈழத் தமிழர் களைக் கொன்று குவிக்கும் இலங்கை இராணு வத்துக்கு ஆயுதங்களை வழங்கி வரும் இந்திய அரசு - அவர்களின் ராணுவத்துக்கு உதவிட - இந்தியாவின் பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ள செய்தி அம்பலமாகியுள்ளது. எம்.கே. நாராயணன் - ‘இந்து’ ராம் - சுப்ரமணியசாமி - ஜெயலலிதா - இல.கணேசன் - இராம. கோபாலன் என்ற பார்ப்பன வட்டம், ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு எதிராக, தங்கள் முழு செல் வாக்கையும் பயன்படுத்தி வரும் நிலையில், கலைஞர் ஆட்சி, மவுனம் காக்கலாமா? உண்மை யான வன்மையான கண்டனத்தை எழுப்ப வேண்டாமா?
• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் மகத்தான சமூகப் புரட்சியை தமிழக முதல்வர் கலைஞர் செய்து காட்டினார். பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றம் போனார்கள். கோயில்களில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது. ஏற்கனவே கலைஞர் மிகவும் சாதுர்யமாக காய் நகர்த்துகிறார் என்று என்ன காரணத்தினாலோ கி.வீரமணிகள் எழுதினார்கள். அதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கை களை அரசு மேற்கொள்ளவில்லை.
• அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு 6 கோயில்களில் தொடங்கியது. அதில் அனைத்து சாதியையும் சார்ந்த 207 பயிற்சியாளர்கள் ஓராண்டு பயிற்சியையும் முடித்தனர். இப்போது என்ன நிலைமை? பயிற்சி முடித்து வெளிவந்து,. எந்த கோயிலிலும் அர்ச்சகராக நியமிக்க முடியாத நிலைக்கு, அவர்கள் உள்ளாகி விட்டனர். உச்சநீதிமன்றத்தில் தடையாணை இருப்பதால், நியமனம் செய்ய முடியாது என்று இந்து அறநிலையத் துறை கை விரித்து விட்டது. அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆகும் திட்டம் - மீண்டும் பெரியார் ‘இதயத்தில் தைத்த முள்ளாகவே’ மாறிவிட்டது.
• எல்லாவற்றிற்கும் மேலாக பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் பெரியார் விருது பெற்ற பிறகும் - கலைஞர் - பெரியார் நூல்களை நாட்டின் பொதுச் சொத்தாக அறிவிக்கத் தயங்கலாமா?
பெரியாரை - தனி உரிமையாக்கும் சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த வரலாற்றுக் கடமையை ஆற்றத் தவறலாமா? என்று கேட்கிறோம்.- இப்படி எத்தனையோ சமூகப் பிரச்சினைகள் சூழ்ந்து நிற்கின்றன. சிலவற்றை மட்டுமே பட்டிய லிட்டோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சியின் கொள்கை முடிவாலும், நிர்வாக முடிவாலும் செயல்படுத்தக் கூடியவைகள் தான்.
மக்கள் நலத் திட்டங்களில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது இந்த ஆட்சி; அதை எவரும் மறுக்க முடியாது. அதையும் தாண்டிய ஆழமான சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது முன்னுரிமைக்குரிய செயல்பாடு அல்லவா?இந்தப் பிரச்சினைகளில் கலைஞர் உரிய கவனம் செலுத்தி செயல்படும்போது, கலைஞருக்கு கிடைத்த பெரியார் விருது பெருமையுறும், கலைஞர் மேலும் பெருமை பெறுவார். கலைஞரின் புகழ் வரலாற்றில் பதிந்து நிற்கும்.
நிலைத்த புகழ் செயல்களில் தான் அடங்கியிருக் கிறது. மேடைப் புகழ்ச்சியாளர்களின் புகழாரங்களில் அல்ல என்பது கலைஞருக்கு தெரியாத ஒன்றா?
- ‘இரா’

‘பெரும் குழு’வின் ‘ஜால்ரா’ புரட்சி!

“ஏண்டா தம்பி, மலம் கழிக்கும்போது வெள்ளரிக்காய் தின்கிறாயே” என்று ஒரு பெரியவர் கேட்டதற்கு, “அது பற்றி உனக்கு என்ன? நான் இப்படியும் சாப்பிடுவேன்; அதில் தொட்டுக் கொண்டும் சாப்பிடுவேன்” என்று வீரத்துடன் பதிலளித்தானாம்! வீரமணியின் ‘விடுதலை’ ஏடு அந்த நிலைக்கு வந்துவிட்டது. ‘தினமணி’, ‘தினமலர்’ போன்ற பார்ப்பன ஏடுகள் பெரியாருக்கு எதிராக எழுதும்போதுதான் பெரியாரிய ஏடுகள் சீறி எழுந்து பதிலடி தருவது வழக்கம். இப்போது ‘விடுதலை’ ஏடு பெரியாருக்கு ஆதரவாக எழுதியதற்காக சீறிப் பாய்கிறது. பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று ‘தினமணி’ எழுதியிருப்பது - அதன் பார்ப்பன விஷமத்தைக் காட்டுகிறது என்கிறார், ஆஸ்தானப் புலவர் ‘மின்சாரம்!’
‘தினமணி’யின் கட்டுரையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கட்டுரையைத் தொடங்கியவர் முடிக்கும் போது, “இவை எல்லாம் திராவிடர் கழகத்துக்கு அத்துப்படியானவையே என்பதை இலேசான புன்னகை யோடு இந்த அக்கப் போர்களை நிராகரிக்கிறோம்” என்று முக்கால் பக்கம் மாங்கு மாங்கு என்று எழுதி நிரப்பியப் பிறகு நிராகரிக்கும் முடிவுக்கு வருகிறார்.
அவர்கள் லேசான புன்னகையை தாராளமாக சிந்தட்டும். ஆனால், “பெரியார் நூல்களை பரப்பாமல் தடுப்பதற்கு தி.க. கடுமையாக களத்தில் இறங்கிப் போராடி வருகிறது. அம்பேத்கரின் ராமன் - கிருஷ்ணன் புதிர் நூலை அரசு வெளியிடக்கூடாது என்று மகாராஷ்டிராவில் - பா.ஜ.க., பெரும் கலவரத்தில் இறங்கியது. இங்கே, பெரியாருக்கு சொந்தம் கொண்டாடும் கட்சியே, அதைப் போன்ற பெரியார் நூல்களையெல்லாம், அரசு நாட்டுடைமை யாக்க அனுமதிக்க மாட்டோம். ரத்தம் சிந்தி தடுப்போம். தமிழ்நாட்டில் எவன் வெளியிடுவான் பெரியார் நூல்களை? பார்த்து விடுகிறோம் ஒரு கை; என்று மீசையை முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டது. அப்பாடா! இனி நமக்கு தமிழ்நாட்டில் வேலையே இருக்காது போலிருக்கே” என்று லேசாகப் புன்னகைக்கும் புன்னகை நாயர்களைப் பார்த்து - பா.ஜ.க. பரிவாரங்கள் வாய்விட்டு சிரித்து - கும்மாளம் போடும்.
‘சிரியுங்கள்; சிரியுங்கள்; நீங்கள் என்னதான் சிரித்தாலும் - எங்களின் பெரியார் நூல்களை முடக்கும் பணியிலிருந்து திசை திருப்பவே முடியாது. நாங்கள் அடையாறு ஆலமரமாக நிற்கும் தமிழர் தலைவரின் நிழலில் வந்தவர்கள்!’ என்று அப்போதும் மின்சாரங்கள் பேனாவைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள்!
“ராமனை செருப்பாலடிக்க வேண்டும்; சூத்திரன் என்று சொல்லும் குழவிக்கல் சாமியை குப்புறத் தள்ளி துணி துவைக்கவேண்டும்” என்ற பெரியார் கருத்தை எல்லாம் அரசு வெளியிடுமா - இப்படி ஒரு கேள்வி! ஏன் வெளியிட்டால் என்ன, பிரளயம் அழிந்து விடுமா? அம்பேத்கர் பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை மகாராஷ்டிர அரசு வெளியிடவில்லையா? அதுகூட இருக்கட்டும். நாட்டுடைமையாக்குவது என்றால் அரசு மட்டுமே வெளியிட வேண்டும் என்பது அதன் பொருள் அல்ல. வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் அனைவரும் வெளியிடலாம் என்பதுதான் அதன் பொருள்! இந்த அரிச்சுவடியைப் புரிந்து கொண்டு, அந்த லேசான புன்னகையை வீசுங்கள் அய்யா! “பார்ப்பன ஜெயலலிதாவிடம் எங்கள் தமிழர் தலைவர்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி - வேலை வாங்கினார்” என்று அன்றைக்கு ‘மாஞ்சி மாஞ்சி’ எழுதிய மின்சாரங்கள், இன்று ‘தினமணி’ பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கு என்று கேட்கும்போது மட்டும், குரலை மாற்றிக் கொள்வது ஏன்? தலைவர் சுருதி பேத புரட்டல்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் மின்சாரங்கள் பதில் சொல்வார்களா?
பெரியார் திராவிடர் கழகம் சிறு குழுவாம்! “இந்தச் சிறுகுழுவை பாராட்டுவதாலோ, அந்தக் குழுவுக்காக வக்காலத்து வாங்குவதாலோ எவ்வித இழப்பும் பார்ப்பனர்களுக்கு கிடையாது” என்று எழுதுகிறது மின்சாரம்! ஸ்ரீரங்கத்தில் இவர்களே வைத்த பெரியர் சிலையை மதவெறி சக்திகள் உடைத்தபோது - இந்த “சிறு குழு”வின் வலிமையை பார்ப்பனர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அப்போது மூலையில் முக்காடு போட்டு, பதுங்கிக் கொண்ட “தமிழர் தலைவர் தலைமையில் அணி வகுக்கும் பெரும்சேனை”யின் வீரமும், பார்ப்பனர்களுக்கு நன்றாக தெரியும்! இவர்களின் ‘பெரும் குழுவும்’, பெரும் பட்டாளமும் பார்ப்பனர்களை நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கும் “ஜால்ரா” புரட்சிகளை நாடு பார்த்து நகைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
பெரியார் நூல்கள் நாடு முழுவதும் மக்களிடையே பரவிடக் கூடாது என்பதற்காகவே பெரியார் இயக்கத்தை நடத்தி வரும் “கொள்கைக் குன்றுகள்” நாட்டு மக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிப்பதை புரிந்து கொண்டு இந்த “இலசான புன்னகையாளர்கள்” பேனாவை தூக்குவது நல்லது!


72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு
திரிபுவாத திம்மன்கள் - யார்? (2)

“பெரியாரைப் பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும், சுயநல துரோகிக் கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்” - என்று கடந்த 2008, செப்.30 ஆம் தேதி ‘விடுதலை’ ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு கி.வீரமணி பதிலளித்திருக்கிறார். திரிபுவாதிகளுக்கு அவர் அழகான சொற்றொடரை பட்டமாக வழங்கியுள்ளார்! அதற்கு நன்றி தெரிவித்து, “திரிபுவாதி திம்மன்கள்” பற்றிய இந்தத் தொடரைத் தொடருகிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்யும் சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் பெரியார் உயிருடன் இருக்கும்போதே கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்கு தொடரவே உச்சநீதிமன்றம் சட்டத்தை முடக்கும் தீர்ப்பை 14.3.1972 இல் வழங்கியது.
சூத்திர இழிவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதால் பொங்கி எழுந்த பெரியார் 1972 முதல் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 19 வரை தனது பேருரைகளிலும், தலையங்கங்களிலும், கட்டுரைகளிலும் உச்சநீதிமன்றத்தைக் கடுமையாக சாடினார். 28.5.1972 இல் சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டினார். உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அரசியல் சட்டத்தைத் திருத்தி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே பெரியார் வலியுறுத்தி வந்தார்.
“இந்திய அரசியல் சட்டம் என்பது சமுதாயத் தன்மையைப் பொறுத்தவரை மனுதர்மம் என்னும் பார்ப்பன உயர் வாழ்வுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் சட்டமாகவே பார்ப்பனராலேயே உண்டாக்கப்பட்ட சட்டமாகையால் அதை மாற்றியமைக்க வேண்டியது மிக மிக அவசியமானது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது” என்று அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் இழிவு ஒழிப்பு மாநாட்டு உரை, பெரியார் பேச்சு, தீர்மானங்கள், விடுதலை தலையங்கங்களையும் சேர்த்து ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் “கோயில் பகிஷ்காரம் ஏன்?” என்ற தலைப்பில் நூலாக 1972 இல் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1982 இல் வெளி வந்தது.
11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 1993 இல் “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்று சுயமரியாதை பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலில் - உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து பெரியார் கூறிய கருத்துகளும், பெரியார் காலத்தில் திராவிடர் கழகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன. இதற்குப் பெயர் என்ன?
அது மட்டுமல்ல, மேற்குறிப்பிட்ட அதே வெளியீட்டில் 5.4.1972 அன்று பெரியார் சென்னை கடற்கரைப் பேருரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதில் அரசியல் சட்டத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் நாம் நாதியற்றவர் களாக்கப்பட்டு விட்டோம் என்று பெரியார் பேசிய கீழ்க்கண்ட பகுதியை நீக்கிவிட்டு வெளியிட்டுள்ளார்கள். “இன்றுள்ள அரசியல் சட்டத்திடையே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினாலே நாம் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். இதற்கு நாம் பரிகாரம் காண வேண்டும். அதற்காகவே மே 7 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழக மாநில மாநாட்டினைக் கூட்டி, அதில் முடிவு செய்து, மக்கள் மத்தியில் நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.”
அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கண்டித்து, பெரியார் தெரிவித்த கருத்துகள் 1972 ஆம் ஆண்டில் “கோயில் பகிஷ்காரம் ஏன்?” என்ற தலைப்பில் நூலாக வெளி வந்தபோது இடம் பெற்ற பகுதிகள் வீரமணி காலத்தில் “அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்று தலைப்பிடப்பட்டு வரும்போது அதில் மட்டும் பெரியார் கருத்துகள் இருட்டடிக்கப்பட்டது ஏன்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடை ஏதும் விதிக்கவில்லை என்று, கி.வீரமணி தனது கருத்தை மாற்றிக் கொண்டதே இதற்குக் காரணம்.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கி.வீரமணி அவ்வப்போது வெவ்வேறு கருத்து வெளியிட்டு வந்திருக்கிறார்:
தந்தை பெரியார் வாழும் காலம் வரை அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பெரியார் கருத்தை வலியுறுத்தி வந்தார். அய்யாவுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமைக்கு வந்தபோதும் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தே திராவிடர் கழக சார்பில் முன்வைக்கப்பட்டது.
பிறகு எம்.ஜி.ஆர். முதல்வராக வந்த பிறகு இது பற்றி ஆராய நீதிபதி மகராசன் தலைமையில் 24.9.1979 இல் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரை 27.8.1982 இல் வெளியிடப்பட்டது. ஆகமப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தடை ஏதும் இல்லை என்று குழு கூறியது. ஆனாலும், இக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசியல் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி மகராசன் கூறியிருந்தார். அரசியலமைப்போடு மோதுதலைத் தவிர்த்து, “பாதுகாப்பு வளையத்துக்குள் பதுங்கிக் கொள்ளும் குணாம்சத்தைக் கொண்ட வீரமணி, அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பது மகராசனின் தனிப்பட்ட கருத்து என்று வியாக்யானம் செய்து, சட்டத்திருத்தம் செய்யாமலே மகராசன் .குழுவின் பரிந்துரையை அமுலாக்க முடியும் என்று பேச ஆரம்பித்து விட்டார். இவருக்கு வாதத்தை எடுத்துக் கொடுத்தவர் மறைந்த நீதிபதி கே. வேணுகோபால், வீரமணி தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டதால், ‘சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்று பெரியார் தெரிவித்த கருத்துகள் கி.வீரமணி வெளியிட்ட நூலில் இருட்டடிப்புக்குள்ளாக்கப் பட்டன. வீரமணி தனது கருத்துக்கு ஏற்ப பெரியார் கருத்தை இருட்டடித்தார்.
இதிலே இன்னுமொரு புரட்டையும் வீரமணி செய்தார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கி.வீரமணி, உச்சநீதிமன்றத்தின் சட்டத்துக்கு புதிய வியாக்யானம் தரத் தொடங்கினார். அதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக தடை விதிக்கவில்லை என்ற வியாக்யானம். தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!
அதன் பிறகு ‘கேரள தேவஸ்வம் போர்டு’ நிர்வாக உத்தரவின் மூலம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியிருக்கும் ஆணையை எடுத்துக்காட்டி, கி.வீரமணி, அரசே நேரடியாக ஆகமப் பள்ளிகளைத் தொடங்கும் யோசனையை முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் முன் வைத்தார். மகராசன் குழு பரிந்துரை செய்ததோ, ஆகமப்பாடசாலைகளை அமைக்க வேண்டும் என்பதாகும். ஆனால் ஜெயலலிதா அறிவித்ததோ வேத-ஆகமப் பாடசாலைகளை அமைக்கும் திட்டம். ஆகமப் பாடசாலையில் வேதம் எதற்கு என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய வீரமணி, அதற்கும் திரிபுவாதம் செய்தார்.
“வேத ஆகமம் படிக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே என்றால், அது புதிதாக இப்போது ஏற்படும் நிலை அல்ல. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு முன்பிருந்த நிலைதான்” (ஆதாரம்: ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?’ நூல்) என்று வீரமணி சமாதானம் கூறினார். பழுத்த ஆத்திகவாதியான நீதிபதி மகராசன், வீரமணியைவிட முற்போக்காளராகவே இருக்கிறார். ஆகமப் பயிற்சிப் பள்ளியில் வேதம் கற்பிக்கத் தேவையே இல்லை என்றார் மகராசன். “பூசையை சமஸ்கிருதத்தில் தான் செய்ய வேண்டும்; தமிழில் செய்யக் கூடாது என்று ஆகமத்தில் எங்கும் சொல்லவில்லை” (மகராசன் குழு பரிந்துரை; தமிழ் அர்ச்சனை பற்றிய குறிப்பு; பத்திகள் 12, 13) என்று மகாராசன் அடித்துக் கூறினார். ஆனால், சமஸ்கிருத வேதத்தைக் கற்பிப்பதற்கு ஆதரவாக வாதாடினார் கி.வீரமணி! ஏன்? பார்ப்பன ஜெயலலிதாவின் ‘வேத ஆகமப் பாடசாலை’ அறிவிப்பை நியாயப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு; ஜெயலலிதாவின் ஆதரவைப் பெறத் துடிக்கும் அவரது ‘யுக்தி’ கொள்கையை தோற்றோடச் செய்து விட்டது.
மீண்டும் சட்டத்திருத்தம் செய்யப்படாமலே இப்போது கலைஞர் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு வந்தது! மரபுகளை மாற்றக் கூடாது என்றது உச்சநீதிமன்றம். தமிழக அரசு எதிர் வழக்காடவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிப் பள்ளிகளை தி.மு.க. ஆட்சி திறந்தது. கி.வீரமணி - தஞ்சை வல்லத்தில் கலைஞருக்கு பாராட்டு விழாவை நடத்தி முடித்தார். பெரியார் லட்சியம் நிறைவடைந்துவிட்டது என்று அறிவித்தார். இனி - கலைஞர் ஆட்சி செய்வதற்கு ஏதுவுமில்லை. எல்லாமுமே முடிந்துவிட்டது என்றார். இப்போது என்ன நிலை?
கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சியை முடித்த அனைத்து சாதியைச் சார்ந்த மாணவர்கள் 207 பேரும் ஓராண்டு பயிற்சியை முடித்துவிட்டு, எந்தக் கோயிலிலும் பணி நியமனமின்றி தவிக்கின்றனர்; வேறு வேலைக்குப் போக வாய்ப்புகளைத் தேடுகிறார்கள்; காரணம் - உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை - இவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று அரசு கூறிவிட்டது.
கலைஞர் சாதுர்யமாக காயை நகர்த்தியதாக புகழாரம் சூட்டிய கி.வீரமணி, இப்போது வாய்திறக்கவில்லை. கலைஞரைப் பாராட்டுவதற்கான ‘யுக்திகளுக்காக’ கொள்கைகளைப் பலிகடாவாக்கும் வீரமணியின் மற்றொரு துரோகம் இது.
சூத்திர இழிவு ஒழிப்பை முன்னிறுத்தி சட்டத்தையே திருத்து; இல்லையேல் எங்கள் நாட்டை பிரித்துக் கொடு என்று பெரியார் முழங்கிய முழக்கம் - வீரமணியால் திரிபுபடுத்தப்பட்டதற்கு இவை சான்றுகளாகும்.
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


பெரியார் சிலைக்கு ஜப்பான் ஆய்வு மாணவி மாலை
ஜப்பானிலுள்ள ஒகாக்கா பல்கலைக் கழகத்தில் மானுடவியல் துறையில் ஆய்வு செய்து வரும் மாணவி அக்கிக்கோ, தமிழகத்தில் தாய்த் தமிழ்க் கல்வி பற்றி மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்.11 ஆம் தேதி மேட்டூர் வந்த அவர், அக்.11 ஆம் தேதி வரை மேட்டூரில் தங்கி ஆய்வு நடத்துகிறார். அக்.11 முதல் 14 ஆம் தேதி வரை கோபி உள்ளிட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ஆய்வு நடத்துகிறார். அக்டோபர் இறுதியில் ஜப்பான் திரும்புகிறார்.
பெரியார் பிறந்த நாளான செப். 17 ஆம் தேதி சேலத்தில் கழகத் தலைவர் மற்றும் தோழர்களுடன் ஜப்பான் மாணவி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அண்ணா உருவத்தில் கழகத்தினர் ஊர்வலம்

அண்ணா நூற்றாண்டு விழா தொடங்கிய நாளான செப். 15 திங்கள் கிழமை காலை 9 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகிலிருந்து நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் 100 பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாவை போல உடையணிந்து, அண்ணாவின் உருவத்திலேயே ஊர்வலமாக வந்தனர்.
ஒவ்வொரு அண்ணாவிற்கும் அண்ணாவின் கொள்கைகளையும், தொண்டையும் குறிக்கும் வகையில் தனித்தனி பெயர்கள் வைக்கப்பட் டிருந்தன. ஊர்வலத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச் சாமி, பொள்ளாச்சி பிரகாசு, மாண வரணி பன்னீர் செல்வம், கோவை மாநகர தலைவர் ம.ரே. இராசக் குமார், செயலாளர் வே. கோபால், பொருளாளர் மணிமாறன், அமைப் பாளர் இ.மு. சாஜித், அலுவலக பொறுப்பாளர் சா. கதிரவன், மேட்டு பாளையம் ப. இராமச்சந்திரன், நகர செயலாளர் சந்திரசேகர், அமரன், பொள்ளாச்சி நகர செயலாளர் வெள்ளியங்கிரி, வட்ட செயலாளர் கா.சு. நாகராசு, தெற்கு மாவட்ட செயலாளர் கருமலையப்பன், வடக்கு மாவட்ட செயலாளர் துரைசாமி, ஆனைமலை ஒன்றிய செயலாளர் ருக்குமணி, நகர செயலாளர் அரிதாசு, உடுமலை நகர செயலாளர் பாக்கிய நாதன் மற்றும் கோவை மாநகர தோழர் கள் உட்பட பல்வேறு தோழர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முடிவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்! கழகத் தலைவர்
கொளத்தூர் மணி கண்டனம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 10.9.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஈழத்தில் தமிழர்கள் வாழும் வவுனியாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி -
தமிழகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழர்கள் வாழும் வவுனியா பகுதியில் இலங்கையின் ராணுவ முகாம் மீது விடுதலைபுலிகள் நடத்திய தாக்குதலில் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் எனும் இரண்டு - இந்திய பொறியாளர்கள் காயமடைந்து, கொழும்பு மருத்துவமனையில் இலங்கை ராணுவத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியதோடு, பாதுகாப்புக் கருவிகளை மட்டுமே வழங்கி வருவதாகக் கூறி வந்தது. இந்திய அரசின் கூற்று அப்பட்டமான பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராடார் கருவியை இந்தியா வழங்கியிருப்பதோடு மட்டுமல்ல, அதைப் பராமரிக்க இந்திய பொறியாளர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ராடார் கருவிகள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகும். சிங்களர்கள் வாழும் பகுதியில் அல்ல.
2005 ஆம் ஆண்டில் இந்த ராடார் கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்திய அரசு - விடுதலைப் புலிகளின் விமானப்படை செயல்படத் தொடங்கிய பிறகு, மீண்டும் கடந்த 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகு ராடார் கருவியை மேலும் நவீனமாக்கி, பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமுக்கு, இத்தகைய பாதுகாப்புகளை இந்தியா வழங்குவது தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு துணை போவதோடு மட்டுமல்ல, தாக்குதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளேயாகும். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையிலிருந்து பல்வேறு சர்வதேசக் குழுக்களின் பிரதிநிதிகள் வெளியேறிவிட்ட நிலையில் - இந்தியாவின் பொறியாளர்கள் இலங்கையின் விமானப் படையில் ‘அங்கமாகி’ பணியாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே சக்தி வாய்ந்த போர்க் கப்பலை இலங்கை கப்பல் படைக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. இலங்கை விமானத்தின் குண்டு வீச்சிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா, அதற்கு கண்டனம் கூட தெரிவிக்க மனம் இல்லாதவர்கள், இலங்கை விமானப்படையைக் காப்பாற்ற துடிக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, கண் துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. கடந்த வாரம் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் - இனி, இலங்கை கப்பல் படை தாக்குதலே நடக்காது என்று உறுதிமொழி கூறினார். அடுத்த சில நாட்களிலே மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டது. தமிழக முதல்வரும் சடங்குப்படி பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதி விட்டார்.
இப்படி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்திய அரசு கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது, தமிழர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி வருகிறது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களை ஏமாளிகளாகக் கருதிவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு தமிழர்களின் வாக்குகளைக் கேட்டு வர வேண்டிய நிலை இருப்பதை மறந்து விட்டு செயல்பட வேண்டாம். இந்திய அரசின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கை தமிழக அரசு வன்மையாகக் கண்டித்து, தடுத்து நிறுத்த முன்வரா விட்டால், இந்த துரோகப் பழியை தமிழக அரசும் சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் வலிமையான கண்டனக் குரலை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சேலம் கே.ஆர்.தோப்பூரில் பகுத்தறிவுப் பிரச்சார பொதுக் கூட்டம்
18.8.2008 திங்கள் கிழமையன்று கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டம் கே.ஆர். தோப்பூர் பவர் கிரிட் அருகில் மோட்டூர்காடு என்னும் பகுதியில் 7 மணிக்கு பகுத்தறிவுப் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையேற்க, கண்ணன் வரவேற்புரையாற்ற, செழியன் முன்னிலை வகித்தார். கோபி வேலுச்சாமி, சாலை இளவரசன் ஆகியோர் மூடபழக்கங்களை யும், போலி சாமியார்களின் மோசடிகளையும் விளக்கி சிறப்புரையாற்றினர். சந்திரசேகரன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து இறங்கிய தோழர்களிடம் இளைஞர்கள் பலர் கடவுள் மறுப்பு பற்றிய பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். அவர்களுக்கு சக்திவேல், காவை இளவரசன் மற்றும் இளம்பிள்ளை முத்து மாணிக்கம் ஆகியோர் அறிவியல் ஆதாரங்களுடன் பதில் அளித்தனர். இந்த விவாதமானது சுமார் 30 நிமிடங் களுக்கும் மேலாக நடந்தது. இந்த பொதுக் கூட்டமானது கழகத்தைச் சாராத பல நண்பர்கள் தாமாக முன் வந்து பொருளுதவி செய்து எங்கள் பகுதியில் ஒரு நிகழ்ச்சி நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இது 16.5.2008 அன்று கே.ஆர். தோப்பூர் மூலக்கடை என்னும் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத் தின் தாக்கம் எனலாம். நிகழ்ச்சயில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த பல தோழர்களும் கலந்து கொண்டனர். பழனிச்சாமி நிகழ்ச்சியினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

சென்னை சிந்தனை வட்டம்

28.9.2008 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை வசந்த மண்டபத்தில் (செயின்ட் மேரீஸ் பாலம், விசாலாட்சித் தோட்டம், மயிலாப்பூர்), டாக்டர் எழிலன் (இளைஞர் இயக்கம்) “ஜாதகம் யாருக்கு சாதகம்” என்னும் தலைப்பில் பேசுகிறார். ஏற்பாடு : மொழிப் போர் தியாகிகள் பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டம்.