மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்! அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு

நாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எ°., அய்.பி.எ°. போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வு களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம்.

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் - இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப் படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தை யும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. (பார்க்க - தலையங்கம் - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மார்ச் 27)இந்த நிலையில் மத்திய தேர்வாணையத்தின் அதிர்ச்சியான பார்ப்பன மோசடிகள் மேலும் வெளிவந்துள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் - அதிகார வலிமை கொண்டது என்றும், தங்களது செயல் பாடுகளை எவரும் கேள்வி கேட்க முடியாது என்றும் ‘பூணுலை’ இழுத்து விட்டுக் கொண்டிருந்த இந்த ஆணையத்தின் ‘சிண்டை’ இப்போது நாடாளுமன்ற நிலைக்குழு (31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது), அழுத்தமாகப் பிடித்து உலுக்கத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக் குழுத் தலைவர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன்.

வேலைவாய்ப்பு, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகங்களுக்கான இந்த நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய தேர் வாணையத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து, விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஆணையத்தின் பார்ப்பன மோசடிகள் தொடராமல் இருக்க, சில புரட்சிகரமான சீர்திருத்தங்களையும், நாடாளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அய்.ஏ.எ°. தேர்வுகளுக்கு முதலில் தொடக்க நிலை தேர்வு எழுதி, அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் முதன்மை தேர்வு எழுத முடியும். தொடக்க நிலை தேர்வின் முடிவுகள் வெளிவர ஆறுமாத காலத்தை தேர்வாணையம் எடுத்துக் கொள்கிறது. தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் போகிறவர்கள் இந்த 6 மாத காலத்தில் அடுத்த கட்ட பயிற்சிக்குப் போக முடிவதில்லை. தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முற்றுப் புள்ளி வைத்து, கம்ப்யூட்டரின் ‘ஆன்லைன்’ முறையில் மாணவர்கள் தொடக்க நிலை தேர்வு எழுதலாம். ஒரு சில வாரங்களிலே முடிவு தெரிந்துவிடும் என்ற பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன் வைத்துள்ளது. இதன் மூலம் தேர்வாணையத்தின் தில்லுமுல்லுகளுக்கு கடிவாளம் போடப்படும். மத்திய தேர்வாணையம் வெளிப்படையாக செயல்படுவ தில்லை. தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண், நேர்முகப் பேட்டிக்குப் பிறகு அவர்கள் பெறும் ‘கட்-ஆப்’ மதிப்பெண் ஆகிய விவரங்களை தேர்வாணையம் தெரிவிக்க மறுத்து வருவது ஏன்? இதில் என்ன ரகசியம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார், சுதர்சன நாச்சியப்பன்.

அதே போல் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், தேர்வுக்குரிய பாடங்கள் - எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகிறது? இதற்கான அளவுகோல் என்ன என்பதும் ‘மர்மமாக’வே உள்ளது.2006 ஆம் ஆண்டு சிவில் சர்வீ° தேர்வு எழுதிய மாணவர்கள், தொடக்க நிலை தேர்வில் தங்களுக்கான மதிப்பெண் விவரத்தைக் கேட்டபோது, ஆணையம் தகவல் தர மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் ‘உண்மை வேண்டுவோர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, தேர் வாணையத்தின் பார்ப்பன அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தங்களின் தொடக்க தேர்வு மதிப்பெண், ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்கு மாறு தேர்வாணையத் திடம் மனு செய்தனர். ஆணையம், தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு மனு செய்தனர். உடனே மத்திய தகவல் ஆணையம் (ஊநவேசயட ஐகேடிசஅயவiடிn ஊடிஅஅளைளiடிn) - மூன்று வாரத்துக்குள் மாணவர் களுக்கு தொடக்க தேர்வு மதிப்பெண் மற்றும் ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்குமாறு தேர்வாணயத்திற்கு 13.11.2006 இல் பணித்தது. தாங்கள் பின்பற்றும் தேர்வு முறை விஞ்ஞான பூர்வமானது என்றும், அந்த ரகசி யத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய தேர்வாணையம் பதில்தர, அதை ஏற்க மத்திய தகவல் ஆணையம் மறுத்து விட்டது.

உடனே தேர்வாணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில், மாணவர் கள் பெறும் மதிப்பெண்கள் ரகசியத்தை வெளியிட்டு விட்டால், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அதை முறைகேடாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால், மதிப்பெண்ணை வெளியிட முடியாது. எனவே மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தேர்வாணையம் வழக்கு தொடர்ந்தது.தேர்வாணையத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.அகமது நிரா கரித்து, ஏப்.17, 2007 இல் தீர்ப்பளித்தார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உடனே வெளியிடுவதோடு, மாதிரி விடைத்தாளையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போதும் தேர் வாணையம் விடவில்லை. மே 3, 2007 இல் வழக்கை மேல் முறையீடு செய்து, ஒவ்வொருவரும் பெறும் மதிப் பெண்ணையும், ‘கட்-ஆப்’ மதிப் பெண்ணையும் வெளியிட்டு விட்டால், ஆணையத்தின் ரகசியமான தேர்வு முறை மிக மோசமாக பாதித்துவிடும், கடுமையான விளைவுகளை உருவாக்கி விடும்” என்று மேல் முறையீட்டு மனு வில் கூறியது. டெல்லி உயர்நீதிமன்றத் தில் - நீதிபதிகள் எம்.கே.சர்மா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது மே 22, 2007 இல் - நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதித்ததோடு, தேர்வாணையம் தன்னிடமுள்ள இது தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் போட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டனர். மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு - அது முதல் கிடப்பில் உள்ளது. மத்திய தேர் வாணையமும் மதிப்பெண்களை வெளி யிடாமல் இருந்து வருகிறது.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமல்ல, மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகமே, இதை பற்றிய தகவலைக் கேட்டபோதும், தேர்வாணையம் தகவல் தர மறுத்து வந்திருக்கிறது.

தேர் வாணையம் நடத்தும் நேர்முகத் தேர் வில், விருப்பு வெறுப்பு பாகுபாடுகள் காட்டப்படுவதாக, பிரதமர் அலுவல கத்துக்கு புகார் வரவே, பிரதமர் அலு வலகம் வேலை வாய்ப்புத் துறை அமைச் சகத்தின் வழியாக, இடஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’, பொதுப் போட்டியில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’ மதிப் பெண்களைக் கேட்டது. பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதியும், இதுவரை, தேர்வாணையம் அசைந்து கொடுக்கவில்லை.கடந்த காலங்களிலும் நாடாளு மன்றக் குழுவினரை, தேர்வாணையம் புறக்கணித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குழு கருத்து கேட்க அழைத்தபோது, மத்திய தேர்வாணையம் கருத்து தெரிவிக்கவே வர மறுத்துவிட்டது. குழு தனது பரிந்துரையில் இதை குறிப்பிட்டு தேர்வாணையத்துக்கான நிதி ஒதுக் கீட்டை நிறுத்துமாறு பரிந்துரைத் திருந்தது. “அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆணையம் என்று கூறிக் கொண்டு இந்த ஆணையம் தன்னுடைய மோசமான நிர்வாகத்தை மறைக்க முயலுகிறது.

இந்தத் தேர் வாணையத்திலேயே செயலாளர் என்ற தலைமைப் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. பல அரசு நிறுவனங்களிலும் ஆணையத்தின் அலட்சியத்தால் தலைமைப் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாகவே கிடக் கின்றன. ஆணையத்தின் செயலற்ற போக்கே இதற்குக் காரணம். தேர் வாணையம், சில நேரங்களில், சிலரின் பெயர்களைப் பரிந்துரைக்க, அவர் களுக்கான நியமனம் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, பரிந்துரையை ஆணையம் திரும்பப் பெற்றதும் உண்டு. “சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த நிறுவனமும் செயல்பட முடியாது. ஆணையத்தின் இந்த செயல்பாடுகள், நாடாளுன்றத்தின் உரிமை மீறல்களுக்கு உட்பட்டதாகும்.” என்றும் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளு மன்ற குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.“நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்; மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த நிறுவனத்தை யும், நாங்கள் அனுமதிக்க முடியாது; நாங்கள் அரசுக்கு சமர்பித்துள்ள பரிந்துரைகளை செயல்பட வைப் போம்” என்று உறுதியாகக் கூறுகிறார், சுதர்சன நாச்சியப்பன். பரிந்துரை மீது உரிய நேரத்தில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, மத்திய வேலை வாய்ப்புத் துறை செயலாளரும் உறுதி கூறியுள்ளார்.

பார்ப்பன ஆதிக்கம் - எப்படி, நாட்டை ஆட்டிப் படைக்கிறது என்ப தற்கு இது அசைக்க முடியாத சான்று.(ஆதாரம்: மார்ச் 28, ‘பிரன்ட்லைன்’ வெளியிட்ட கட்டுரை)

உதைபட்ட சிங்கள இயக்குனர் ‘பிரபாகரன்’ படத்தின் பின்னணி என்ன?

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் திரைப்படம் ஒன்றை சிங்கள இயக்குனர் பிரீ° என்வர் தயாரித்து, அதை பிரதி எடுப்பதற்காக (பிரிண்ட்) அந்த இயக்குனர் சென்னை ஜெமினி கலையகத்துக்கு வந்தார். செய்தி வெளியானவுடன், தமிழின உணர்வாளர்கள் கலையகம் விரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர் சீமான், சுப. வீரபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரோடு பெரியார் திராவிடர் கழகத் தோழர் களும் விரைந்தனர். படத்தின் உள்ளடக்கம் பொதுவானது என்று கூறி, சிங்கள இயக்குனர் எதிர்ப் பாளர்களை ஏளனப்படுத்தியபோது, அவர்தாக்குதலுக்கு உள்ளானார்.

படத்தை திரையிட்டு பார்த்தப் பிறகு பிரதி எடுக்கலாம் என்று ஜெமினி கலையகத்துடன் பேசி முடிவெடுக் கப்பட்டது. இதற்கு சிங்கள இயக்குனரும் ஒப்புக் கொண்டார். மார்ச் 27 ஆம் தேதி அப்படம் வட பழனியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இராம. நாராயணன், நடிகர் சத்திய ராஜ், தங்கர்பச்சான், இயக்குனர் சீமான் உள்ளிட்ட கலை உலகப் பிரமுகர்களும், தொல். திருமா வளவன், பேராசிரியர் சுப.வீரபாண் டியன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பா.ம.க. துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் தோழர்களும் படத்தைப் பார்த்தனர்.சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் அத்திரைப்படம் இலங்கை ராணுவ அமைச்சகத்துக்கும், ராணுவ தளபதி களுக்கும் நன்றி கூறி தொடங்குகிறது. பிரபாகரன் என்ற பெயரில் ஒரு சிறுவன், விடுதலைப்புலிகள் அமைப்பில் விருப்ப மின்றி கட்டாயப்படுத்தி சேர்க்கப்படு வதாகவும், புலிகள் அமைப்பு பள்ளிக் கூடத்தில் நுழைந்து சிறுவர்களை கடத்திச் சென்று ராணுவத்தில் சேர்ப்பதாகவும் காட்சிகள் வைக்கப்பட் டுள்ளன.

பிரபாகரன் சகோதரியான தமிழ்ப் பெண், ஒரு சிங்களரை காதல் திருமணம் செய்து கொண்டு, நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்தப் பெண்ணை தற் கொலைப் போராளியாக மாறுமாறு, விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்து வதாகவும், அந்தப் பெண் மறுத்து, கடைசியில் புலிகளையே வெடிகுண்டு வீசி கொல்வதாகவும் கதை சொல்லி யிருக்கிறார்கள். பிரபாகரன் என்ற சிறுவன் விடுதலைப் புலிகள் படையிட மிருந்து சிறுவர் களோடு தப்பும் போது, அனைவரும் புலிகளால் கொல்லப் படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில் எந்த ஒரு இடத்திலும், ஒரு சிங்கள ராணுவமோ, சிங்கள ராணுவ தளபதியோ தலைகாட்டும் காட்சியே கிடையாது. அந்நிய நாடுகள் சதி செய்து - போலி சமாதான முயற்சிகளை மேற்கொள் வதாகவும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சிங்களர்களை எதிர்த்து செயல்படுவதாகவும், புலிகள் தாக்கு தலால், அகதிகள் முகாம்களில் சிங்களர்கள் உண வின்றி தவிப்பதாக வும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக பொய்யைப் பரப்பும் படத்தைப் பார்த்து கொதித்துப் போன தமிழர்கள் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியான அம்சா என்பவரே இத் திரைப்படத்தை தமிழில் பிரதி எடுத்து, தமிழகத்தில் திரையிடும் முயற்சி களை மேற்கொண்டுள்ளதால், சிங்கள இயக்குனர் சென்னை வந்துள்ளார். எதிர்ப்பு வலுத்தவுடன், தமிழக காங்கிர° கட்சியிடம் சிங்கள தூதரகம் சரணடைந்துள்ளது. காங்கிர° தலைவர்களில் ஒருவரான எ°.ஆர். பாலசுப்பிரமணியம், சிங்கள தூதரகத் துடன் நெருக்கமாக இருப்பவர்; அவர் பத்திரிகையாளர்களைக் கூட்டி, சிங்கள இயக்குனர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை சிங்களப் படைகள் தாக்கும் போதெல்லாம் ஒரு முறைகூட கண்டனம் தெரிவிக்காத எ°.ஆர்.பாலசுப்பிரமணியம் என்ற மனிதர், இப்போது சிங்கள இயக்கு நருக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ளார். சிங்கள இயக்குனரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு காங்கிர° கட்சியைச் சார்ந்த சென்னை பிரமுகர் சபீர் அலி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.

இதற்கிடையே ‘பிரபாகரன்’ படம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத் துள்ளன. இந்தப் படத்தில் துரோகக் குழுவைச் சார்ந்த பிள்ளையான் என்பவரின் ஆட்களே, நடிக்க வைக்கப் பட்டுள்ளனர். துணை ராணுவக் குழுக்கள் அதிகம் நடமாடும் வெலிக்கந்த எனும் பகுதியில் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தில் உயர் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மற்றும் கேணல் பெரேரா ஆகியோர் படத் தயாரிப்புக்கு முழுமையாக உதவிகளை செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இந்த எழுச்சி சென்னை இலங்கை தூதக ரத்தை மட்டுமல்ல, தமிழக காங்கிரசா ரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.- நமது செய்தியாளர்

கருத்துரிமைக்கு தடையா?

முதலீடு இல்லாத தலைசிறந்த வர்த்தகமாக அதிகார அரசியல் மாறி நிற்கிறது என்பது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த அதிகார அரசியலுக்குள் இடம் பிடித்து, செல்வாக்குப் பெற்று, அதை மூலதனமாக்குவதே ‘கவுரவமான பிழைப்பு’ என்ற கலாச்சாரம் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

இந்தச் சூழலில், சமூக அக்கறையோடு, தங்களுக்கான லட்சியங்கள், குறிக்கோள்களோடு ஆர்ப்பாட்ட வர்த்தக அதிகார அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாமல், செயல்பட முன்வருவது என்பது மிகவும் அபூர்வமாகும். இத்தகைய ஆரோக்கியமான அரசியல் புரிதலோடு, சுயநலமற்று செயல்படுகிற அமைப்புகளும், இயக்கங்களும் தான் தமிழகத்தின் வலிமையான கருத்துருவாக்க சக்திகள், பொது வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கு முழுமையான சமாதி கட்டிவிடாமல் தடுத்து வரும், மக்களின் உண்மையான பிரதிநிதிகள்.

ஆனால், இத்தகைய அமைப்புகளும், குழுக்களும், தமிழகத்தில் காவல்துறை யினரால் குறி வைத்து நசுக்கப்படுகின்றன. இந்த அமைப்புகளின் கருத்துரிமை முற்றாக தடைப்படுத்தப்படுகிறது. காவல்துறை தங்குதடையற்ற அதிகாரத்தை தன்வசம் எடுத்துக் கொண்டு, இந்த அமைப்புகளும், இயக்கங்களும் மக்களிடம் கருத்துக்களைச் சொல்வதற்கான கூட்டங்களுக்கு தடை போட்டு வருகின்றன.சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், கடந்த வாரம் சென்னை மாநகரில், மூடநம்பிக்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற துடிப்போடு தன்னை அர்ப்பணித்து, அரும் தொண்டு ஆற்றி வரும் தோழர் சிற்பி ராசன், தனது ‘மாஜிக் கலை’யின் வழியாக, மக்களிடம் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தக் கூட்டங்களுக்கே கூட, சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம் பகுதியில் காவல்துறை தடைவிதித்துவிட்டது. கடும் போராட்டம் நடத்திய பிறகே, அனுமதி பெற வேண்டியிருந்தது.

குறிப்பாக - வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் எழுத்து மூலமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி பிறப்பித்த தடை ஆணையில், “தோழர் சிற்பிராசன் அவர்கள் நடத்தும் ‘மந்திரமா தந்திரமா’ என்ற நிகழ்ச்சி மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்பகரமான தகவல் உள்ளதால் அந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.மக்களிடையே மூடநம்பிக்கைகள் வேகமாகப் பரவி வருவதைப் பற்றி முதல்வர் கலைஞர் அவ்வப்போது பேசியும் எழுதியும் வருகிறார். ஆனால், அவரது ஆட்சியின் காவல்துறை, பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையில் நியாயம்?‘புரட்சிகர பெண்கள் விடுதலை மய்யம்’ என்ற பெண்கள் அமைப்பு சென்னையில் காமராசர் அரங்கில் சர்வதேச மகளிர் நாள் கூட்டத்தை நடத்தி, அதில் புரட்சிப் பாடகர் கத்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ‘நக்சலைட் தத்துவங்கள் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும்’ என்று கூறி காவல்துறை, அதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது.

தத்துவங்களுக்கே தமிழ்நாட்டில் தடை போடப்பட்டு விட்டதா!? என்று கேட்கிறோம்.அதேபோல் - தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசியல் காரணங்களுக்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் பொழிலன் விடுதலை கோரி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும், காவல்துறை தடை விதித்துள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள கருத்துரிமைகள் - தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா என்ற கேள்வியைத்தான் வேதனையுடன் கேட்க வேண்டியிருக்கிறது.தேர்தல் அரசியலில் - கூட்டணி அரசியலில் உள்ள கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் செயல்படலாம்; கூட்டம் போடலாம்; ஆனால் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏற்றுள்ள இயக்கங்களுக்கு தமிழகத்தில் அடிப்படை உரிமைகளே கிடையாது என்ற முடிவுக்கு தமிழக காவல்துறை வந்து விட்டதா? இதற்கு தமிழக அரசும் பச்சைக் கொடி காட்டி விட்டதா என்று கேட்க விரும்புகிறோம்.

தொடக்க காலத்தில், தத்துவத் தளங்களில் ஆழமாக தடம் பதித்து நின்ற கழகம் தான் தி.மு.க. அன்றைக்கே இப்படி முடக்கப்பட்டிருந்தால், மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்க முடியுமா? இந்தியாவிலேயே தமிழ் மண் சிந்தனைகளும், தத்துவங்களும் விதைக்கப்பட்ட மண் அல்லவா?பெரியார் இயக்கங்களும், பொதுவுடைமை அமைப்புகளும் தங்கள் கருத்துகளையும், தத்துவங்களையும், விவாதங்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து சேர்த்தது இந்த மண்ணில் தான். அந்த வரலாற்றுப் பெருமைகளுக்குரிய மேடைச் சிந்தனைகளையும், மக்கள் சந்திப்பையும், பிரிட்டிஷ்காரன் 1886 ஆம் ஆண்டு கொண்டு வந்த 120 ஆண்டு காலத்துக்கு முந்தைய சட்டங்களைக் காட்டி காவல்துறையின் ஆய்வாளர்களும், துணை ஆய்வாளர்களும் முடக்குவதற்கு இடம் அளிக்கலாமா? கூட்டங்களில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று, காவல்துறையினரே கருத்தாளர்களாக அவதாரம் எடுக்கும் நிலை தமிழகத்தில் வந்துவிட்டது, மிகப் பெரும் சோகம்! வாதங்கள் - விவாதங்கள் - தடைபடுத்தப்படும்போதுதான் அது ‘தீவிரவாதமாக’ உருவெடுக்கிறது என்ற அடிப்படை உண்மையை நினைவூட்டுவது நமது கடமையாகிறது.தமிழக முதல்வர் கலைஞர் இதில் அவசரமாக தலையிட்டு காவல்துறைக்கு கடிவாளம் போட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.அதிகார மோகத்தில் சிக்கி விடாமல் தமிழகத்தில் இன்னும் எஞ்சி நிற்கும் ஆரோக்கியமான இலக்கு நோக்கிய மக்களுக்கான இயக்கங்களை செயல்பட அனுமதியுங்கள்!

135 நாடுகளில் மடிந்து போன மரண தண்டனை

உலகில் 135 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. 62 நாடுகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அதில், இந்தியாவும், பாகி°தானும் அடங்கும். 2006 ஆம்ஆண்டில் 25 நாடுகளில் 1591 பேருக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதில் 91 சதவீத தூக்கு, 6 நாடுகளில் மட்டும் போடப்பட்டுள்ளது. சீனா, ஈரான், ஈராக், சூடான், அமெரிக்கா, பாகி°தான் ஆகியவைகளே இந்த 6 நாடுகள். சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. தூக்குத் தண்டனை அமுலில் உள்ளதாலேயே குற்றங்கள் குறைந்து விடவில்லை. அதே நேரத்தில் 1976 இல் கனடா தூக்கு தண்டனையை ஒழித்த பிறகு அந்நாட்டில் கொலைக் குற்றங்கள் 40 சதவீதம் குறைந்துள்ளன. உலகம் முழுதும் அனைத்து நாடுகளும், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று, டிசம்பர் 18, 2007 இல் அய்.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்போது, அவர்கள் உயிர் மீண்டும் வந்துவிடுமா? நிச்சயம் வராது. அமெரிக்காவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 126 பேர் - பிறகு குற்றமற்றவர்கள் என்று, விஞ்ஞான பூர்வமாகக் கண்டறியப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.

பாகி°தான், இந்தியா போன்ற நாடுகளில் வழக்குகளும், விசாரணைகளும், எந்த நிலையில் நடக்கிறது என்பது தெரிந்ததுதான். இதனால் தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை எதிர்க்கிறார்கள். மறைந்த பாகி°தான் உச்சநீதிமன்ற நீதிபதி தோரப்பட்டேல் என்பவர், தாம் மீண்டும் நீதிபதியானால், ஒருவருக்கும் தூக்குத் தண்டனை தரமாட்டேன் என்று கூறினார். அவர் கூறும் காரணம் - சட்டமும் நீதியும், ஏழைகளுக்கு எதிராகவே இருக்கின்றன என்பதுதான்.ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹக் - பாகி°தானில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்தபோது, அதை எதிர்த்து 1981 இல் தனது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியைத் தூக்கி எறிந்தார் இந்த நீதிபதி. பாகி°தான் மனித உரிமை ஆணையம் என்ற மனித உரிமை அமைப்பை அவர்தான் தொடங்கினார். பாகி°தானில் அவர் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது வாழ் நாள் முழுவதும் குரல் கொடுத்தவர்.பாகி°தானைப் போல் இந்தியாவும் தூக்குத் தண்டனையை ஒழிப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்தியாவும் இந்த மனித உரிமைக்கு எதிரான தண்டனையை ரத்து செய்ய தயங்குகிறது. பாகி°தானில் தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சார்ந்த சுராப்ஜித் சிங், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இந்தியா, தனது நாட்டில், தூக்குத் தண் டனையை ஒழிக்க வேண்டாமா? அதற்கு முன் நிபந்தனையாக, தூக்குத் தண் டனைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்காகவாவது, அதை ரத்து செய்ய வேண்டாமா?

நன்கொடை• ஹாங்காங் தோழர் என்.அப்துல் ரகுமான் ரூ.1000-மும்

• ‘நாளை விடியும்’ ஆசிரியர் தோழர் அரசெழிலன் ரூ.250-ம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ ஏட்டுக்கு நன்கொடை வழங்கி யுள்ளனர். நன்றி. (ஆர்.)

எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு:

தோழர்கள் கைதுநாமக்கல் மாவட்டம், ப. குமார பாளைத்தில் 19.3.2008 அன்று மாலை 6 மணி அளவில் சரவண திரை அரங்கம் முன் துவக்கி வைத்து தி.மு.க. அவைத் தலைவர் தி.கு. சண்முகம் பேசினார். ஒகேனக்கல்லில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க துடிக்கும் கர்நாடக பி.ஜே.பி. எடியுரப்பாவை கண்டித்தும் கூட்டு குடிநீர்த் திட்டம் பல ஆண்டு களாக தருமபுரி, கிருட்டிணகிரி மக்களின் கனவு. அது நம் தமிழ்நாடு அரசு திட்டம். இதை நடைமுறைப் படுத்த கூடாது என்று கர்நாடக கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டல் நாகராஜை கண்டித்தும் பேசினார்.

தோழர் கலைமதி பேசும்போது தான்தோன்றிதனமாக அத்துமீறி நுழைந்த கர்நாடக வெறியர்களை கண்டித்தும், நம் பாரம்பரிய நிலப் பகுதியான பெங்களூரையும், கோளார் தங்க வயலையும் மீட்டெடுக்க தமிழர்களே அணி திரண்டு வாருங்கள் என்றார். நுழையாதே, நுழையாதே, அத்துமீறி நுழையாதே, பி.ஜே.பி.யின் இரட்டை வேடத்தை பாரீர் என்றும், மீட்போம் மீட்போம் பெங்களூரையும், கோலார் தங்க வயலையும் மீட்போம். கைது செய், கைது செய் பி.ஜே.பி. எடியுரப்பாவை கைது செய். இன வெறியை தூண்டும் எடியுரப்பாவை கைது செய். அடக்கி வை, அடக்கி வை. பி.ஜே.பி. அத்வானியே எடியுரப்பாவை அடக்கி வை. அடக்க உன்னால் முடியா விட்டால் அடக்கி காட்டும் பெரியார் தி.க. விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டு வந்தனர்.

பேருந்து நிலையம் அருகில் தோழர்கள் எடியூரப்பா உருவ பொம்மையை எரிக்க மு7யலும் போது காவல் துறையினர் பிடுங்க, தடுக்க முயன்றனர். உருவ பொம்மையை தோழர்கள் செருப்பால் அடித்தனர். காவல் துறையிடம் சண்டையிட்டு பிடுங்கி தீயிட்டு கொளுத்தினார்கள். பின்னர் அனை வரையும் கைது செய்வதாக சொன்னார்கள். போராட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்டத் தலைவர் தி.க. கைலாசம், முன்னிலை வகித்த மாதுராசு, மாவட்ட செயலாளர் மு. சாமிநாதன், கழக சொற்பொழிவாளர் கீசகன், ஈ°வரன், அ. கலைமணி, தி.மு.க., தி.கு.ச. மணிமாறன், குமார், அசோக், சின்னகுமார், ரமேசு, தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் ந. ஆறுமுகம், சமர்ப்பா கலைக்குழு குமரேசன், இந்திய இளைஞர் இயக்கம் பகலவன், இலக்கிய தல ந. அன்பழகன், மனித உரிமைக் கழகம் செல்வராசு, தமிழன் ஓவியர் பழனிச்சாமி பவானி, தோழர் விடுதலை வலையல் சண்முகம் உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். போராட்ட வேலைகளையும், தோழர் களை திரட்டியும் அசோக் மா. கலைமதி ஆகியோர் மிக சிறப்பாக செயல்பட்ட னர். அனைவருக்கும் தி.மு.க. கலைமணி தேனீர் விருந்து அளித்தார்.

செய்தி: மு. சாமிநாதன்

ராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா?

சொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளி யில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

மீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை.மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா? யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை.மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும்? பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்?தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை? என்றார் கொளத்தூர் மணி.

தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி: கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.

புதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.

ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா?சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை.ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.

தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

மன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்

தமிழர்களின் பாரம்பர்யப் பிரதேசம் மன்னார்! இங்கே கடலோர வாணிகம் செழித்திருந்த காலம் ஒன்று உண்டு. மன்னார் கடல் பரப்பில் அரபுக் கப்பல்கள் குதிரைகளைக் கொண்டு வந்து, மன்னார் சந்தையில் விற்பதும், மன்னார் கடல்பரப்பில் கிடைக்கும் விலை மதிப்புள்ள முத்துக்களை வாங்கிச் சென்றதும் உண்டு. அந்த மன்னார் பகுதியில்தான் - இப்போது ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலி களுக்கும், சிங்கள ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்களப் படைகள் மன்னாரை தம் வசமாக்கிட அங்கே குவியத் தொடங்கின. அதற்கு முன் 1999 இல் இதே மன்னார் பகுதியை ஆக்கிரமிக்க ‘ரணகோச’ என்று (போர் முழக்கம்) பெயர் சூட்டி, பெரும் தாக்குதலைத் தொடர்ந்தது சிங்கள ராணுவம். அதை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். அதே மன்னாரில் இன்று ஒவ்வொரு நாளும் தொடர் யுத்தம்.

மன்னார், ஒரு சதுப்பு வெளி, மண்ணைத் தோண்டுவதற்கு மண்வெட்டியைப் போட்டு வெட்டினால், மண் தெறிக்காது. மண் வெட்டிதான் உடையும். அத்தகைய சதுப்பு நிலப் பகுதியானாலும், எதிரியின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட முடியுமா?மன்னார் பிரதேசத்தைக் காப்பாற்ற, காவல் அரண்களை அமைத்தனர் விடுதலைப் புலிகள். அகழிகளை வெட்டி, எல்லைப் பகுதி முழுதும் காப்பரண்களை அமைத்தனர். (காப்பரண் என்றால் எல்லைப் பகுதி நெடுக பல மைல் தூரத்துக்கு 10 அடிக்கு ஒரு அரண் அமைத்து, அதில், 24 மணி நேரமும் துப்பாக்கியோடு கண்விழித்து எதிரிகளின் ஊடுருவல் நிகழ்ந்து விடாமல் காப்பது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கே குவிந்த சிங்களப் படை 6 மாதம் முழுமையாக தன்னை தயார்படுததிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் (24.9.2007) தனது முதல் தாக்குதலை காப்பரண்கள் மீது தொடங்கியது. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் அமைத்தது ஒற்றைக் காப்பரண்தான். பெரும்படையாக குவிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவராக எல்லைப் பாதை நெடுக காவல் காப்பார்கள். 75 மைல் தூரம் விரிந்து நிற்கும் இந்த ஒற்றைக் காப்பரண் மீது சிங்கள ராணுவத்தின் பெரும் படை தாக்குதல் தொடுத்து வருகிறது.

ஆனால் - ஒரு அங்குலம்கூட காப்பரணைத் தகர்த்து, சிங்கள ராணுவத்தால், ஊடுருவ முடியவில்லை என்பதுதான் முக்கியம்.2007 செப்டம்பர் 24 ஆம் தேதி, ராணுவத்தின் முதல் தாக்குதல் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. பெண் புலி லெப். அருமலர் காப்பரண் தாக்கப்பட்டது. காப்பரணில் அப்போது இருந்த பெண் புலிகள் 5 பேர் மட்டுமே. பெரும் படையுடன் தாக்க வந்த சிங்களத்தை - இந்த 5 பெண் புலிகளும் எதிர் கொண்டனர். மாலை 5.30 மணி வரை தாக்குதல் நீடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காயப்படுவதும், பிறகு காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து, மீண்டும் திருப்பி சுடுவதுமாக அந்தப் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந் தனர். ஊடுருவ முயன்ற சிங்களப் படை திரும்பி ஓட்டமெடுத்த நிலையில், அந்த 5 பெண் புலிகளும் உடல் முழுதும் ஏந்திய குண்டு காயங்களோடு வீர மரணத்தைத் தழுவினர். இந்த வீர காவியம் படைத்த போர் நடந்த பகுதி ‘கட்டுக்கரை குளக்கட்டு’.

தோற்றோடிய சிங்களப் படை மீண்டும் அதே காப்பரணைத் தாக்கி ஊடுருவ - தாக்குதலைத் தொடங்கியது. இப்போது பெண் புலி காப்டன் கோதை தலைமையிலான புலிகள் தாக்குதலை எதிர் கொண்டனர். முதற் சண்டையில் விதையாகிய தோழியரின் ரத்தமும், சதையும் ஊறி வீரத்தோடு எழுந்து நின்று, கடுமையாக மோதியது. சிங்களப் படையினரிடம் பலியாகாமல், வெளி யேறுவதற்கு வாய்ப்பிருந்த நிலையிலுங் கூட, பெண்புலி கோதை, படையை எதிர்த்துப் போரிட்டு, வீரமரணத்தைத் தழுவி, ஊடுருவலைத் தடுத்தார்.கட்டுக்கரையில் தொடங்கிய தாக்குதலை எல்லைப்பகுதி முழுதும் ஒரே நேரத்தில் ராணுவம் விரிவாக்கியது. அந்த யுத்தம் ஒவ்வொரு நாளும், இப்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மாதம் ஒரு முறை யுத்தம் என்ற நிலை மாறி, ஒவ்வொரு நாளும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுவதாக சிங்களம் பொய்ச் செய்திகளைப் பரப்பு கிறது. பிரபாகரன் மீதும் குண்டு வீசப் பட்டு, படுகாயமடைந்ததாக பொய்ச் செய்திகளைப் பரப்பியது. பொய் முகத்திரை கிழிந்து போனது. இப்போது மன்னாரில் என்னதான் நடக்கிறது?‘வீட்டுக்கு ஒரு போர் வீரன்’ என்ற முழக்கத்தோடு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போர் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். நேருக்கு நேர் மோதும் மரபு வழி யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. உலக வல்லரசுகள் வழங்கியுள்ள ராணுவ பலத்துடன் சிங்களம் படை முகாமை நிறுத்தியிருக்கிறது. புலிகளின் ஒற்றைக் காப்பரணை ஊடுருவி நகர முடியாமல் சிங்களத்தின் பெரும்படை ஒவ்வொரு நாளும் பெரும் இழப்பு களை சந்தித்து வருகிறது.

எல்லைப் பகுதியில் காப்பரணில் சண்டையில் நிற்கும் பெண் புலிகளை நேரில் சந்தித்து அளவளாவி படம் எடுத்து வரலாம் என்ற நோக்கத்தோடு போர் மேகம் சூழ்ந்த நிலையிலும், சாரதா என்ற பெண் புலி தலைமையிலான அணி மன்னார் பகுதிக்குச் சென்றது. ஒவ்வொரு காப் பரணாகச் சென்று பெண் புலிகளிடம் உசாவி விட்டு வரும் நிலையில் சிங்களப் படை திடீர்த் தாக்குதலைத் தொடங்கி யது. மிகவும் சக்தி வாய்ந்த பீரங்கியால் (50 கலிபர்) ராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. 50 அடி தூரத்திலுள்ள காப்பரண் மீது தாக்குதல் நடக்கும் போது, சாரதாவின் அணி, அடுத்த காப் பரணில் தோழிகளுடன் பேசிக் கொண் டிருந்தது. அந்த நிலையிலும் அரணில் இருந்த பெண் புலிகள், “வாங்கோ, வாங்கோ அக்கா” என்று அன்புடன் உபசரித்து, அடுப்பை மூட்டி, உணவு தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேனீர் பரிமாறப்பட்டது. ‘என்னடா இது? முன்னுக்குச் சண்டை நடக்கிறது? இவர்களை நோக்கி, எந்த நேரத்திலும் திரும்பலாம்; ஆனாலும், அதை வழமையாக எதிர்க் கொண்டு, அன்பான உபசரிப்புகளை வழங்கிக் கொண் டிருந்தது கண்டு சாரதா அணி வியந்தது.மன்னார் போர் அரங்கில் நிற்கும் படை அணியினர் அனைவருக்கும் உணவு வேளைகளுக்கு இடையே சாப்பிடக் கூடிய சத்தான உணவுப் பொருள்களை வாங்கித் தருமாறு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன், பெண் புலி கேணல் யாழினியிடம், ஒரு தொகைப் பணத்தைத் தந்திருந்தார். காப்பரண் முழுதும் படைவீரர்கள் அனைவருக்கும் இதை வழங்க 10 நாட்கள் ஆகிவிடும். அதற்குள் உணவு கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே யாழினி ஒவ்வொருவருக்கும் ‘சோன் பப்ளி’ எனும் இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொடுத்து விட் டார். அப்போது - ஒரு புதிய பெண் போராளி கேணல் யாழினியிடம் கேட்டார், “அக்கா, எங்களுக்குத்தான் மூன்றுவேளை சாப்பாடும் வந்து கொண்டிருக்கே, அதுவே போதும்; எதற்கு அண்ணன், இதை எல்லாம் தர வேண்டும்?” என்று கேட்டார். “சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளை யும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி. ‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடு வோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே!” என்றார், அந்தப் பெண் புலி.“அக்கா அண்ணனை நாங்கள் சந்திக்க வேண்டும்; கேட்டுச் சொல் லுங்க” என்று புதிய பெண் புலிகள் மரணத்தை எந்நேரமும் எதிர்கொள்ளக் கூடிய அந்த சூழலிலும் இதையே கோரிக்கையாக வைத்தனர்.போராட்டமே வாழ்க்கை; வாழ்க்கையே போராட்டமாய் - மன்னார் போர் அரங்கு மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மோதி மோதிப் பார்க்கும் சிங்களம் - பெண் புலிகளின் வீரத்தாலும், தியாகத்தாலும், தோல்வி களையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.- நமது செய்தியாளர்

நம்பியூர் போராட்டம் வெற்றி!

நம்பியூரில் திருமண மண்டபத் தில் அருந்ததியினருக்கு பணம் கட்டியும் இடம் வழங்க மறுத்த தீண்டாமையை எதிர்த்து, ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கி வைத்த கிளர்ச்சி விரிவடைந்து, சாதி ஒழிப்பு கூட்டியக்கமாக பரிணாமம் பெற்றது. தலித் அமைப்புகளும், பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து, தீண்டாமைக்கு எதிராக களமிறங்கின. மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிடும் நிர்ப்பந்தத்தை போராட்டக்களம் உருவாக்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண மண்டப நிர்வாகி களுடன் கலந்து பேசினார். சாதி வெறி பணிந்தது. கடந்த 19.3.2008 அன்று அனுமதி மறுக்கப்பட்ட அருந்ததி சமூக தோழர் மாரியப்பன் இல்ல நிகழ்ச்சியை நடத்த, திருமண மண்டப நிர்வாகிகள் அனுமதி வழங்கினர். ஆயிரம் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டக் கழக செயலாளர் கோபி. இளங்கோ மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமூக தீர்வை உருவாக்கிட முயன்ற மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், திருமண மண்டப நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

கழகத்துக்கு திருமாவளவன் பாராட்டு!

உடுமலையில் - சாளரப்பட்டி தீண்டாமை வெறியைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் - விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையிலிருந்து -“நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருமைத் தோழர் அதியமான் தலைமையில் நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது கண்டனத்தை தெரிவிப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாளரப்பட்டி மக்களுக்கு நேர்ந்த வன்கொடுமை களை எண்ணி ஒரு புறம் வேதனைப்பட்டாலும், அண்ணன் இராமகிருட்டிணன் சொன்னதைப்போல ஒரே களத்தில் நின்று போராடுவதற்கு உரிமைக் குரல் எழுப்புவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நாள் நமக்கு வழங்கி யிருக்கிறது.இன்றைக்கு சாதி ஒழிப்பு கூட்டியக்கம் என்கிற ஒரு தலைப்பின் கீழ் நாமெல்லாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையிலே நம்பியூர் பிரச்சனையை முன்னிறுத்தி, அண்ணன் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் கோவையிலே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வந்திருந்தபோது, ஒரு கூட்டியக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நம்பியூர் திருமண மண்டபம், ஒரு அருந்ததிய சகோதரன் தான் பெற்ற பிள்ளைக்கு காதணி விழா நடத்துவதற்காக பணம் கட்டி பதிவு செய்த நிலையில், அவன் தன்னுடைய நண்பனோடு தெலுங்கில் பேசினான் என்கிற ஒரே காரணத்திற்காக இவன் ரெட்டியாராகவோ, நாயுடுவாகவோ இருக்க முடியாது. இவன் அருந்ததியினராகத்தான் இருக்க முடியும் என்று அவன் யூகம் செய்து கொண்டு, உடனடியாகவே அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள், உனக்கு இடம் இல்லை என்று அவன் மறுதலிக்க, அந்த செய்தி விடுதலைச் சிறுத்தைகளின் கவனத்துக்கு வர அது சுசி கலையரசன் கவனத்துக்கு வர,அது என் கவனத்திற்கு வர அதை விடுதலைச் சிறுத்தைகள் போராட்டமாக முன்னெடுத்தபோது, எல்லோரும் சேர்ந்து செய்வோம் என்று கொளத்தூர் மணி, இராமகிருட்டிணனும் அந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டபோதுதான் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, நாம் இணைந்தே செய்வோம் என்று அன்றைக்கு ஒப்புதல் கொடுத்து ஒரே நேரத்தில் எல்லோரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து முறையிட்டோம். அன்றைக்கும் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆக, அந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் சார்பிலே நம்பியூரில் முதல் களத்தை அமைத்தோம். நம்முடைய கடுமையான கண்டனத்தை தெரிவித் தோம். உள்ளபடியே அரசு கடுமையாக அஞ்சியது, பின் வாங்கியது. சாதி வெறியர்களுக்கு துணை நிற்கிற நிலையில் இருந்து பின் வாங்கியிருக்கிறது. அதிலும் இன்னும் அடுத்தகட்ட பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.நாம் அரசாங்கத்திடமிருந்து மண்டியிட்டுக் கெஞ்சுகிற நிலையிலிருந்து நம்முடைய அணுகுமுறைகளை மாற்றியாக வேண்டும். காவல்துறை அதிகாரியிடம் மனு கொடுத்து பாதுகாப்பு கொடு என்று கெஞ்சுகிற இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். இதுதான் இன்றைக்கு இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். இங்கே அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். யார் யர் எந்தக் காலகட்டத்திலே எப்படி செயல்பட்டார்கள். மால்கம் எக்°, புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தலைவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். தோழர் சம்பத் அவர்கள்கூட சீனிவாசராவ் அவர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர் குடியால் பார்ப்பனராக இருந்தாலும்கூட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, விடுதலைக்காக ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியிலே களப்பணியாற்றியவர் என்கிற அந்த உணர்வோடு, நன்றி உணர்வோடு இங்கே சுட்டிக் காட்டினார்கள். ஆக, நாம் - எங்களைத் தாக்கி விட்டார்கள், காயப்படுத்தி விட்டார்கள், எங்கள் குடிசைகளை தீ வைத்து விட்டார்கள் என்று பாதிப்படைந்த பிறகு முறையிடுவது என்ற நிலையிலிருந்து மாறி பாதிப்படைந்த பிறகு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்கிற நிலையில் இருந்து மாறி எங்களை இனி தாக்கவே முடியாது என்கிற நிலைக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அத்தகைய துணிவை இத்தகைய ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தரும். இந்த ஆர்ப்பாட்டத்தால், பேரணியால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் ஒருபோதும் எண்ணக் கூடாது” என்றார் திருமாவளவன்.

செய்தி: கருமலையப்பன்

மீனவர் மீது துப்பாக்கிச் சூடு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகஸ்ட் 13 இல் ‘கண்டன நாள்’!

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 20 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:• தமிழக மீனவர்கள் மீது முதன் முதலாக 13.8.1983 ஆம் ஆண்டு சிங்கள கடற்படை தொடங்கிய துப்பாக்கிச் சூடு, 25 ஆண்டு களாகத் தொடர்ந்து இதுநாள் வரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகும் இதுவரை ஒருமுறை கூட சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்க முன்வராத இந்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பிரதமர் மன்மோகன்சிங், சிங்களக் கடற்பகுதியில்தான் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்று கூறி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி யிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சிங்களக் கடற்படையால் இதுவரை 1,000 படகுகளுக்கு மேல் சேதமடைந்து பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும் உபகரணங்களும் அழிந் துள்ள நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும்- பிறகு இந்திய தமிழக அரசின் தலை யீட்டில் விடுதலை செய்வதும் தொடர் கதையாகி தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் நிலை குலைந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர் களுக்கான மீன்பிடி உரிமையை மீட்டுத் தரும் உடனடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.

• பார்ப்பன இந்துத்துவா சக்திகளுக்கு மாற்றாக இருக்கும் ஒரே காரணத்தால் மதச்சார்பற்ற தமிழர்களால் ஆதரிக்கப் பட்ட இந்திய தேசிய காங்கிரஸ கட்சி, தமிழக மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான சிங்கள கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்கி துணை போவதை தமிழகத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியோ, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு இந்திய அரசின் அத்தகைய தமிழினத் துரோகத்துக்கு பச்சைக்கொடி காட்டி வருவதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பதிலடி தரத் தயாராக வேண்டும் என்று தமிழர்களுக்கு இக்கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.

• - தமிழக மீனவர்களுக்கு எதிராக- சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூடு தொடங்கி எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கண்டித்து-தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத இந்திய அரசைக் கண்டித்து சிங்களக் கடற்படைத் துப்பாக்கிகள்; சுடத் தொடங்கிய அதே ஓகஸ்ட் 13 ஆம் திகதி, தமிழகம் முழுவதும் தமிழர்கள் வீடுகளில்- பொது இடங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றி கண்டனக்கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தி இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தும் கண்டன நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன், தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு. பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கோ.சு.மணி ஆகியோர் உரையாற்றினார். இரா. உமாபதி நன்றி கூறினார். உரை அடுத்த இதழில்.

தோழர் டி.ராசாவுக்கு பாராட்டு!

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்தும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிராக கடலுக்கடியில் கண்ணிவெடிகளை புதைத்தும் வரும் சிங்கள அரசைக் கண்டித்தும் அத்தகைய அரசுக்கு இந்தியா ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கலாமா? என்ற நியாயமான கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பி - தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.ராசாவை கோடானுகோடி தமிழர்கள் சார்பில் பாராட்டி இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

இரு நெத்தியடி தீர்ப்புகள்!

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று - சமூக நீதியைப் புதைக் குழிக்கு அனுப்பி வந்த மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பனப் போக்குக்கு எதிரானது; (22.3.2008) மற்றொன்று - தமிழ்நாட்டுக் கோயில்களில் சம°கிருதத்தில் மட்டுமே வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற பார்ப்பன இறுமாப்புக்கு எதிரானது; இரண்டுமே வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்புகள்; பார்ப்பன ஆதிக்கத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டும் தீர்ப்புகள்.மத்திய அரசும், மத்திய அரசின் தேர்வாணையமும், அகில இந்திய சர்வீசுகளில் இழைத்து வந்த அநீதியை எதிர்த்து சமூகநீதி கோரும் பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்திருக்கின்றன. பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பார்ப்பன அதிகாரவர்க்கம் - நாட்டை எப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த வழக்கு, மிகச் சிறந்த சான்றாக நிற்கிறது.அய்.ஏஎஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளில் தகுதி அடிப்படையில் திறந்த போட்டியிலேயே தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை, திறந்த போட்டியிலிருந்து விலக்கி, இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நிரப்பும் தில்லுமுல்லுகளை மத்திய தேர்வாணையம் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, திறந்த போட்டியில், தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதியான பணி வாய்ப்புகள் கிடைப்பதும் மறுக்கப்பட்டு வந்தது. இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் - இப்படி மாணவர்களை தேர்வு செய்வது முறையற்றது என்று ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. (ஆர்.கே. சபர்வாலா வழக்கு மற்றும் சத்ய பிரகாஷ் வழக்கு) ஆனாலும் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகும், அதைத் தூக்கி, குப்பைக் கூடையில் வீசிவிட்டு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் சட்ட விரோதமாக, தனது விதிகளில் 16(2) என்ற திருத்தத்தைக் கொண்டு வந்து, இடஒதுக்கீட்டுக்குரிய வேட்பாளர்கள் - தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், இடஒதுக்கீடு கோட்டாவின் கீழே தான் நிரப்பப்படுவார்கள் என்று திமிரோடு அறிவித்தது.

மத்திய சமூக நீதித் துறை அமைச்சகங்கள் இந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து, முதுகெலும்புடன் தட்டிக் கேட்கத் தவறி விட்டன. இத் துறைகளின் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது அதிகாரச் செல்வாக்கினால் துறை அமைச்சர் களைக்கூட கண்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அகில இந்திய சிவில் சர்வீ° தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட 32 விண்ணப்பதாரர்கள் தகுதி போட்டியில் தேர்வு பெற்றிருந்தும்கூட, அவர்கள், இடஒதுக்கீடு கோட்டாவில் சேர்க்கப்பட்டு விட்டனர்.

இதனால், தகுதியான பணி வாய்ப்புகளை ஒதுக்குவதில் இவர்கள் புறந்தள்ளப் பட்டனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேர்வு பெறக்கூடிய 31 பேர் வாய்ப்பும் பறிக்கப்பட்டது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முறைகேடான 16(2) வது விதி திருத்தம் சட்டவிரோதமானது என்று, பாதிக்கப்பட்ட ஆர். அருளானந்தம் மற்றும் இரமேஷ்ராம் என்ற மாணவர்கள் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். பார்ப்பனத் திமிருடன், நிர்வாகத் தீர்ப்பாயம், அந்தக் கோரிக்கைகளை புறந் தள்ளியது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எலிப் தர்மாராவ், எ°.ஆர். சிங்காரவேலு ஆகியோர் ‘நெத்தியடி’ தீர்ப்பை வழங்கியுள்ளனர். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டு வந்த திருத்தம் சட்ட விரோதமானது. அது செல்லத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், 2004 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட தகுதியடிப்படையிலான பட்டியலை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கொண்டு வந்த திருத்தம் சமூக நீதியை முன்னெடுப்பதற்குப் பதிலாக, பின்னுக்குத் தள்ளி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான பயன்களைத் தடுப்பதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

என்னதான் சமூக நீதிக்கான சட்டங்கள் வந்தாலும், அதை அமுலாக்கும் அதிகாரத்தில் உட்கார்ந்துள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் நந்திகளாக மாறி ‘நங்கூரம்’ போட்டு நிற்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தின் ‘கடிவாளம்’ ‘அவாள்’களிடமே தங்கி நிற்கிறது.மற்றொரு முக்கிய தீர்ப்பு - தமிழில் அர்ச்சனை வழிபாடு நடத்துவது, ஆகமங்களுக்கு எதிரானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ், கே. சந்துரு ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பாகும் (20.3.2008) இந்து கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் வி.எஸ். சிவகுமார், முகவை மாவட்டம் உத்திரகோச மங்கை கோயில் அர்ச்சகர் பிச்சை பட்டர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இது. “பக்தர்கள் தங்கள் விருப்பத்தைக் கடவுளிடம் தெரிவிக்கும் போது, அவர்கள் விருப்பத்தில் குறுக்கிட்டு, சம°கிருதத்தில் மட்டுமே கூற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. தேவநாகரி (சம°கிருதம்) மட்டும் தான் கடவுளுக்கு தெரியும் என்றும், அந்த மொழிக்கு இணையாக தமிழ் இல்லை என்பது போல் மனுதாரர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.

இந்த வாதத்தை நிராகரிக்கிறோம். தமிழ் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப் பட்டால், இந்து மதம் மியூசியத்தில் அடங்கிப் போகும் நம்பிக்கையாகி விடும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணனே கூறியுள்ளார் என்று, நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்னர். எப்போதாவது, நீதிமன்றங்கள் இத்தகைய நம்பிக்கைகள் தரும் நல்ல தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறது என்பதைத் தான் இந்த இரு வழக்குகளும் உணர்த்துகின்றன.

மலையாளிகள் ஆதிக்கத்தைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்!

இந்திய அரசு அச்சகத்தின் பணி யாளர் தேர்வில் முறைகேடாக மலையாளி களை மட்டும் தேர்வு செய்ததைக் கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் கோவை யில் நடந்தது.கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் அமைந்துள்ள இந்திய அரசு அச்ச கத்திற்கு நர்ஸ், பியூன், கலாசி, வார்டுபாய், போர்மேன், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு மொத்தம் 144 பேரை தேர்ந்தெடுக்க தேர்வு நடந்து வருகிறது. தேர்வுக் குழுவில் இந்திய அரசு அச்சக மேலாளர் பி.ஆர்.இராமச்சந்திரன், துணை மேலாளர் ரவீந்திரன், உதவி மேலாளர் ஆப்ரகாம் ஆகிய மூன்று பேரும் மலையாளிகள். தேர்வுசெய்யும் குழுவினர் 3 பேரும் மலையாளிகளாக இருந்தால் மலையாளிகள் மட்டுமே அதிகமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

மூன்றாம் நிலை, நான்காம் நிலை பணிகளுக்கேகூட அச்சகம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகும். ஆகவே தேர்வுக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியும், பணியாளர்களாக தமிழர்களையே தேர்வு செய்ய வலியுறுத்தி யும் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமையில் கோவையில் கழகம் ஆர்ப்பாட்டமும் நடத்தியது.ஆனால், தற்போது பணியாளர் தேர்வு நடந்து வருகிற நிலையில் இயந்திரங்களை இயக்கும் தேர்வில் மலையாளிகளுக்கு புதிய இயந்திரங்களை இயக்கவும், தமிழர்களுக்கு பழைய இயந்திரங்களை இயக்கி காட்டச் செய்து பாராபட்சம் செய்துள்ளார்கள் தேர்வுக் குழுவினர்.

உடனடியாக அனைத் துக் கட்சியினரையும் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தொடர்பு கொண்டு, ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 18.3.2008 செவ்வாய் கிழமை இந்திய அரசு அச்சகத்தின் எதிரில் அனைத்துக் கட்சி யினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் இனஉணர் வோடு எழுச்சியாக நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்துப் பேசினார். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.சின்னராசு (அ.தி.மு.க.), இந்திய கம்யூனி°ட் கட்சி ஒன்றிய செய லாளர் குணசேகரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அ.அறிவரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலர் இரமேசு, லோக் ஜனசக்தி மாநில செயலர் வை. குப்புராசு, தமிழ் தேச விடுதலை இயக்க பொருளாளர் க. தேவேந்திரன், தே.மு.தி.க. பொதுக் குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி, கூடலூர் பேரூராட்சித் தலைவர் ரங்கசாமி (தி.மு.க.), தி.மு.க. மாநில பொதுக் குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் (அ.தி.மு.க.), ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர். ஊராட்சிமன்ற உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, களப்பணி ஒருங்கிணைப்பாளர் ந. பிரகாசு, மேட்டுப்பாளையம் - பா. ராமச் சந்திரன், நகரத் தலைவர் த. சந்திரசேகரன், செயலர் சு. அமரன், கோவை - மாநகரத் தலைவர் ம.ரே. ராசக்குமார், செயலாளர் வே. கோபால், அலுவலக பொறுப்பாளர் சா. கதிவரன், பகுதி கழக பொறுப்பாளர்கள் ம. சண்முக சுந்தரம், கி. சீனிவாசன், மாவீரன் மதியழகன், இ.மு.சாஜித், பா. சத்யா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு மாணவர் கழக ந. பன்னீர் செல்வம். மகளிர் விடுதலை இயக்கம் - பழனியம்மாள், பட்டியம்மாள், லட்சுமி. டி.பி. சுப்பிரமணி (தலைவர் துடியலூர் பஞ்சாயத்து ஒன்றிய செயலர், தி.மு.க.), மு. அப்துல் ரகுமான் (காரமடை பேரூர் கழக தி.மு.க), எ°. ராஜேந்திரன் (வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர், நகர செயலாளர் ம.தி.மு.க.), தா. ஆனந்த ராசு (ஒன்றிய தொண்டரணி செயலாளர் - ம.தி.மு.க.), ராஜேந்திரகுமார் (ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் - ம.தி.மு.க.), வி. யேசுதாசு (காரமடை பேரூர் கழக அமைப் பாளர்), பி.ஆர்.ஜி. அருண்குமார் (பெரிய நாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க.), என் கிருஷ்ணன், (பெரிய நாயக்கன் பாளையம் நகர செயலாளர் அ.தி.மு.க.), ஜெயராமன், (வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர் , சி.பி.அய்.(எம்)), இராமச்சந்திரன் (சி.பி.அய்.எம்.), லோக் ஜனசக்தி - காரமடை அ. அன்வர் ராஜா, ஜே. அருள்ராஜ், மாவட்ட செயலாளர் இரா. மனோகரன், மாவட்ட இளைஞரணி செய லாளர் ஆ. ஆனந்தன். விடுதலை சிறுத்தை கள் கட்சி - மாவட்ட துணைச் செயலாளர் சு. ரமேசுகுமார், செய்தி தொடர்பாளர் ஜீவானந்தம், தொண்டரணி துணைச் செயலாளர் மு. செல்வக்குமார், பொ.நா. பாளையம் ஒன்றிய செயலாளர் பெருமாள். தே.மு.தி.க. - வீரபாண்டி நகர செயலாளர் டி. தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர் பூமிதரன்.

பகத்சிங் பற்றி பெரியார் : ஆங்கில நாளேட்டின் கட்டுரை‘இந்து’ நாளேட்டில் (மார்ச். 22)

பெரியார் பார்வையில் பகத்சிங் என்ற கட்டுரையை புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர் எஸ். இன்ஃபான்ஹபீப் எழுதியுள்ளார். பகத்சிங் தூக்கிலிடப் பட்டபோது, பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தின் பகுதிகளை எடுத்துக்காட்டி, இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையைப் பாராட்டி ‘இந்து’ நாளேட்டில் (மார்ச் 24) புதுடில்லியிலிருந்து சேமன்லால் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் - பகத்சிங் பற்றி ‘குடிஅரசி’ல் பெரியார் எழுதிய கட்டுரை, 2006 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பகத்சிங்கின் ‘சிறைக் குறிப்புகள் மற்றும் சிந்தனைகள்’ என்ற நூலில், சேர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலை பதிவு செய்துள்ளார். ‘இது’ லெப்ட் ஃபார்வர்டு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலாகும். 1933 ஆம் ஆண்டு பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன்?” என்ற கட்டுரையை ப.ஜீவானந்தத்தின் மூலம் தமிழாக்கம் செய்து பெரியார் வெளியிட்டதையும், பகத்சிங் கருத்து முதன்முதலாக வேறு ஒரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் கட்டுரையே பெரியார் வெளியிட்டதுதான் என்றும் அந்தக் கடிதத்தில் சேமன்லால் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையில் இடம் பெற்றுள்ள தேதிப் பிழைகளை கடித;ம சுட்டிக்காட்டியுள்ளதோடு மற்றொரு முக்கிய தகவலையும் சுட்டிக் காட்டியுள்ளது. பகத்சிங் கரங்களில் விலங்கோடு, கட்டிலில் அமர்ந்துள்ள படத்தை ‘இந்து’ நாளேடு வெளியிட்டு, அது சிறைச்சாலைக்குள் இருந்தபோது எடுத்தப் படம் என்று குறிப்பிட்டுள்ளது. உண்மையில் அந்தப் படம் பகத்சிங் - லாகூர் காவல்நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டபோது எடுத்தப் படம். அந்தப் படத்தை லாகூர் காவல்நிலையத்திலிருந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் பதிவேடுகளிலிருந்து ரகசியமாக பாகி°தான் பிரிவினைக்கு முன்பு வெளியே கடத்தி வந்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகுதான், இந்தப் படம் வெளியே வந்தது என்ற தகவலையும், கடிதத்தில் சேமன்லால் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்


சீர்காழியில் பிரச்சாரப் பயண எழுச்சி

சீர்காழிப் பகுதிகளில் மார்ச் 15, 16 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்ற பிரச்சாரப் பயணம் பற்றிய செய்தி தொகுப்பு.15.3.2008 காலை 11 மணியளவில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியாரியல் பிரச்சாரப் பயணம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட தலைவர் இரா. பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத்தன் சீர்காழி ஒன்றிய தலைவர் இரா.மே.ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மா.பெ.பொ.க. மாவட்ட செயலாளர் முத்து அன்பழகன் புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் அன்பு ராசப்பா கருத்துரை வழங்கினர். கொள்ளிட ஒன்றிய அமைப்பாளர் பா. பாக்கியராசு, சீர்காழி நகர செயலாளர் பா. பிரபாகரன், ஒன்றிய தலைவர் இரா.விசயகுமார், ஒன்றிய துணைத் தலைவர் பொன். தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் தங்க பண்பரசன், நகர துணை செயலாளர்பி.தா. சந்தோசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிற்பிராசனின் ‘மந்திரமா, தந்திரமா’ மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரச்சார பயணத்தை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கு. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

அவர் உரை நிகழ்த்தும்போது, நான் முழுக்க முழுக்க சுயமரியாதைகாரன், என் தந்தை பெரியார் இயக்கத்தில் இன்று செயல்படுபவர் எனக்கு துளிக்கூட கடவுள் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் நான் கோவிலுக்கு செல்வேன். காரணம் நான் இருக்கிற பதவி. நான் கோவில் நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினராக செல்வேன். அங்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டு இருக்கிறேன் என்றார். மேலும் பெரியார் தத்துவத்தை விளக்கி உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஏராளமாக பொது மக்கள் திரண்டு இருந்தனர்.

அரசூர் : அடுத்ததாக அரசூர் கிராமத்திற்கு 12 மணிக்கு பிரச்சாரப் பயணம் சென்றடைந்தது. சிற்பிராசன், மந்திரமா தந்திரமா? மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்பகுதியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அறியாமையில் இருந்து தெளிவு பெற்றனர்.புத்தூர் கடை வீதி : அடுத்து புத்தூர் கடைவீதிக்கு 1.30 மணி பிரச்சார பயணம் சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன், புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மதிய உணவு த.மு.மு.க. தோழர் எருக்கூர் புகாரி பிரியாணி உணவு அளித்து சிறப்பு செய்தார்.கொள்ளிடம் கடை வீதி: கொள்ளிடம் கடைவீதிக்கு 4மணிக்கு பயணம் சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்துத்துவா பற்றி மிக சிறப்பாக எழுச்சியுரையாற்றினார். ஏராளமான பொது மக்களும், பெண்களும் நிகழ்ச்சியைக் கண்டு பகுத்தறிவு தெளிவு அடைந்தனர்.

ஆச்சாள்புரம்: ஆச்சாள்புரம் கடைவீதிக்கு 6.15-க்கு பயணம் சென்றடைந்தது. சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி பெரியார் செல்வம் கலைக் குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் நடைபெற்றது. நாகடத்தில் பிள்ளையார் மோசடியையும், பல்வேறு மத மூட நம்பிக்கையை விளக்கி நற்சுவையுடன் நாடகம் நடைபெற்றது. பெரும் வரவேற்பை பெற்றது.புதுப்பட்டினம்: முதல் நாள் இறுதி நிகழ்ச்சி மாலை 7.40க்கு புதுப்பட்டினம் கடைவீதியில் மாவட்ட தலைவர் பரசுராம் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி பெரியார் செல்வம் கலைக் குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் மிக சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். இரவு 10 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இரவு புதுப்பட்டினம் கடற்கரை அருகிலுள்ள மடவாமேடு கிராமத்தில் தி.மு.க. பேச்சாளர் தோழர் அண்ணாதுரை இல்லத்தில் கழகத் தோழர்கள் அனைவருக்கும் சிறப்பாக விருந்தளிக்கப்பட்டது.

16.3.2008 இரண்டாம் நாள் பயணம்திருவாலி : 16.3.2008 ஞாயிறு காலை 11.30 மணியளவில் திருவாலி கடைவீதியில் சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை உணவு நகர செயலாளர் பிரபாகரன் இல்லத்தில் கழகத் தோழர்களுக்கு வழங்கப்பட்டது.மங்கை மடம்: அடுத்தகட்டமாக பிரச்சாரப் பயணம் மங்கை மடம் கிராமத்திற்கு 12.20-க்கு சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் பரசுராமன் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மதிய உணவு திருவண்காடு ஆசிரியர் அன்பு செல்வம் அவர்களால் வழங்கப்பட்டது.

தர்மகுளம் : அடுத்த கட்டமாக தர்ம குளம் கடைவீதிக்கு பயணக் குழுவினர் சென்றடைந்தனர். மாலை 3.15க்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் உரையை அடுத்து, சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தி முடை நாற்றம் வீசூம் மூடபழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.பாகசாலை: மாலை 5.10 மணிக்கு பாகசாலை கிராமத்தில் பயணம் சென்றதும் மக்களே இல்லாத பகுதிபோல் இருக்கிறது. இப்பகுதியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்று தோழர்கள் முடிவு எடுத்தார்கள். ஆனால் சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், அவரின் மிகச் சிறந்த பேச்சால் மக்கள் அப்பகுதியில் ஏராளமாக கலந்துகொண்டனர்,.

கதிராமங்கலம்: பயணக்குழுவினர் மாலை 6 மணிக்கு கதிராமங்கலம் கிராமத்திற்குச் சென்றனர். மாவட்ட தலைவர் பரசுராமன் உரையைத் தொடர்ந்து, சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியாரியல் பயணம் சென்ற இடம் எல்லாம் கழகத் தோழர்களின் கொள்கை முழக்கம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு இருந்தது.வைத்தீ°வரன் கோவிலில் பொதுக் கூட்டம்பயணத்தின் இறுதி நிகழ்வாக வைத்தீ°வரன்கோவில் கடைவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் தலைமையேற்றார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் அமைப்பாளர் பா. அருண் அனைவரையும் வரவேற்றார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடி சோதிடத்திற்குப் புகழ் பெற்ற ஊர் வைத்தீ°வரன்கோவில். அவ்வூரில் நாடி சோதிடத்தையும் பார்ப்பன பித்தலாட்டத்தையும் சிற்பிராசன் அம்பலப்படுத்தி உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு மணி நேரம் எழுச்சியுரையாற்றினார். அவர் உரை கேட்க ஏராளமான பொது மக்கள் திரண்டனர். தலைவர் பேசும்போது, ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டதால் ஒலிபெருக்கி இல்லாமல் 20 நிமிடத்திற்கு மேல் உரையாற்றினார். பொது மக்கள் உற்சாகமாக உரையை கேட்டனர். தலைவரின் உரைக் கேட்டு கலியபெருமாள் (அப்பகுதி) மருத்துவமனை உரிமையாளர் தானாகவே முன் வந்து மின்சார இணைப்பு கொடுத்தார். இறுதியாக சீர்காழி பெரியார் செல்வம் கலைக்குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் நடைபெற்றது. நாடகம் மக்களை சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது. இறுதியாக நகர தலைவர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப.வ. பெரியார் செல்வம் நன்றி கூறினார்.பெரியாரியல் பிரச்சாரப் பயணம் சென்ற கிராமங்களில் எல்லாம் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுக தோழர்களின் கொள்கை முழக்கம் கேட்டு புதிதாக தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். தமிழர்களே ஏன் பெரியார் தி.க.வில் இணைய nண்டும் என்ற செய்தி அச்சிடப் பெற்ற துண்டறிக்கை பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. இரவு உணவு பஷருதீன் ஏற்பாடு செய்து இருந்தார். விடுதலை சிறுத்தை தோழர்களும் கலந்து கொண்டனர்.

பயணக் குழுவில் சென்றவர்கள் : சீர்காழி - பெரியார் செல்வம், ரகுநாத், அருண், இன்பசேகரன், ரமேசு, சந்தோசு, கான்ரமேடு - பண்பரசன், தேவேந்திரன். தென்னல்குடி - விஜயகுமார், ராமமூர்த்தி, திருவாலி ரவி, திருநீலகண்டம் பாக்கிராசு, கொப்பியம் கிருஷ்ணராஜ், மயிலாடுதுறை இளையராஜா, சங்கர்.

சாதி ஒழிப்பு வீரர் கே.பி.எஸ். மணி நினைவு நாள்

16.3.2008 காலை 10 மணியளவில் சீர்காழியில் சாதி ஒழிப்பு வீரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எ°. மணி அவர்கள் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தோழர் அன்பு ராசப்பா கருத்துரையை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத் தூர் மணி சிறப்புரையாற்றினார். எ°.சி./எ°.டி. அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஏ. ராமலிங்கம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி யில் கே.பி.எ°. மணியின் மகன் எம். கனிவண்ணன், மாவட்டத் தலைவர் பரசுராமன், எ°.சி./எ°.டி. சங்க தோழர்கள் மயிலை முத்துசாமி மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு : பெரியார் செல்வன்

சந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை-மேட்டூர் ஜஸ்டின் ராஜ்

-13.3.08 இதழ்த் தொடர்ச்சிபெண் தன்மைக்கு, ஈஸ்ட்ரோஜென் அதிக அளவிலும், ஆண்ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். அதன் காரணமாகவே பெண்ணிடம், குறைந்த அளவில் மட்டுமே ஆண் தன்மை காணப்படும்.ஆண் தன்மைக்கு, ஆண்ட்ரோஜென் அதிக அளவிலும், ஈ°ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். எனவே தான், ஆணிடம் குறைந்த அளவில் பெண் தன்மை காணப்படும். உடலியல் பண்புகளின் அடிப்பi டயில், முற்றிலும் பெண் தன்மையுடைய பெண்ணும் கிடையாது; முற்றிலும் ஆண் தன்மையுடைய ஆணும் கிடையாது.ஆனால், அரவாணி என்பவருக்கு ஆண்ட்ரோஜென், ஈ°ட்ரோஜென் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சம அளவில் சுரப்பதால் தான், அரவாணி என்பவர் ஆண், பெண் ஆகிய இருவரின் சரிவிகிதக் கலப்பாகத் தெரிகிறார். மேலும், அரவாணியிலும் ஆண் அரவாணி, பெண் அரவாணி என்ற கிளைகள் உண்டு. அரவாணி உடலில் ஏறத்தாழ சரிவிகிதத்தில் சுரக்கும் இரு ஹார்மோன்களிலும், எது சற்று அதிகமாக சுரக்கிறதோ அதுவே அரவாணி யின் ஆண் அல்லது பெண் தன்மையை நிர்ணயிக் கிறது.எனவே, உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்களின் விகித மாறுபாட்டால்தான் அரவாணி எனப்படுவோர் குறையுள்ளவராக கருதப்படுகிறார். இது இயற்கையாக ஏற்படும் ஊனம் என்பதைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை. ‘ஊனமுற்றோர்’ என்போரைப் பற்றிய நமது தவறான கடந்தகாலப் பார்வை முற்றிலும் அகற்றப்பட்டு, அவர்களை சமமாக மதிக்கின்ற மிகச் சரியான நோக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிது. இதே அணுகுமுறையை அரவாணி மீதும் நாம் திருப்ப வேண்டும்.ஊனமுற்றோர் என்ற சொல்கூட தற்போது மாற்றப்பட்டு, ‘உடல் ரீதியான சவாலை எதிர்கொள்பவர்’ (ஞாலளiஉயடடல உhயடடநபேநன) என்ற மிகச் சரியான சொல் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே, ஒரு காலத்தில் ‘அலி’ என்று மிக இழிவான பொருளில் பயன்படுத்தப்பட்டது மறைந்து, தற்போது அரவாணி என்றும், திருமங்கை என்றும் விளிக்கப்படுகிறது. வெறும் சொல் மாற்றம் மட்டும் போதாது. உளவியல் ரீதியான நாம் அவர்களை மதிக்க வேண்டும்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட துணை புரிபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் காவல் துறையினர், அரவாணிகள் மீது பொய்வழக்கு புனைவதில் இந்தியத் துணைக் கண்டம் முழுக்க ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கிறார்கள். அரவாணிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை - இவை போன்ற எவ்வளவோ இல்லைகள் தாம் பரிசாக தரப்படுகின்றன.

திரு. மு. கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆளுநர் உரையில், ‘அரவாணிகளுக்கென தனி நல வாரியம்’ ஏற்படுத்துவதாக கூறியுள்ளது மிக வரவேற்கத்தக்கது. ஏளனப் பார்வை, இழிவுபடுத்துதல் கலையப்பட வேண்டும் எனவும், சமநோக்கு என்பதை மய்யமாக வைத்து இவ்வாரியம் இயக்கத் தொடங்கினால் நல்ல அணுகுமுறைக்கான தொடக்கமாக அது இருக்கும் எனவும் நாம் கருதுகிறோம்.கடைசியாக, துளி விஷப் பார்ப்பான் சோ-வுக்கு சில வரிகள்: சாதாரணமான உடலியல் தன்மைகளைக் கொண்ட ஆண், பெண் இவர்களிடமிருந்து, அரவாணி வேறுபடுவது மேற்சொன்ன இரு சுரப்பிகளின் விகித வேறுபாடுதான். அதேபோன்று, பெரும்பாலோரி டமிருந்து வேறுபடுகிற ஆண் - ஆண், பெண் - பெண் உறவுக்கும் கூட ஒரு முதன்மைக் காரணம், இதே சுரப்பிகளின் வேறுபட்ட விகிதம்தான். அரவாணிகளை இழிவுபடுத்தும் சோ, சாவர்க்கர் - கோட்சே இருவரையும் சேர்த்தே இழிவுபடுத்தியதாக நாம் எண்ணு கிறோம். ஏனெனில், ‘கோழை’ சாவர்க்கர் - ‘அயோக்கியன்’ கோட்சே ஆகியோருக்கு இடையில் ஆண் - ஆண் உறவு இருந்ததாக நிறைய செய்திகள் வந்து விட்டன.

நாம் இவர்கள் இருவரையும் எதிர்க்க எதிர் கருத்துத் தளம் என்ற ஒன்றை மட்டுமே கையாள்கிறோம்.(இது எந்த உடற்கூறு இயல் மருத்துவரி டமும் ஆலோசனைப் பெற்று எழுதப்பட்டதல்ல; படித்த தகவல்களை வைத்தே எழுதப்பட்டது. எனவே, சிறு பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு.)

தில்லியில் மானப் பேரணி- தமிழேந்தி -

குலைநடுங்க வைத்த தில்லிக் குளிரையேகுலைநடுங்க வைத்த கொள்கைப் பேரணிமலைப்போன்ற துன்பில் மடிகின்ற இனத்திற்குமலையரணாய் வாய்த்த மானப் பேரணிசரியான நேரத்தில் சரியான இடத்தில்சாதனை படைத்த தன்மானப் பேரணிபெரியார் திராவிடர் கழக வரலாற்றில்பெருமையுறத் தனது பெயர்பொறித்த பேரணிகழகக் கண்மணிகள், காளையர்கள், பெண்கள்,மழலைப்பட் டாளம்என அணிவகுத்த பேரணி‘காந்திதேசம் கொடுக்குது புத்ததேசம் கொல்லுது’ஏந்திய கொடியோடு இடியென முழங்கிநடந்தவரால் நடுங்கியது நரிகளின் செங்கோட்டைஉடைந்தே நொறுங்கியது உலுத்தர்களின் மனக்கோட்டை“எங்கள் இனத்தைக் கொன்று புதைப்பதற்குஇங்கிருந் தே,கருவி ஏற்றுமதி யாவதா?சிங்களக் கேடரின் செயலுக்குப் பார்ப்பனத்தில்லிக் கேடரின் பச்சைக் கொடியா?இந்தியத் தேசிய இனங்களை ஒடுக்கும்இந்தி வல்லாதிக்கப் பார்ப்பனக் கழுகுஅங்கேபோய் தனது ஆட்டத்தைக் காட்டுவதா?அத்துமீறி யே,தனது மூக்கை நீட்டுவதா?ஒப்போம் ஒப்போம் என்றே உறுமியது அங்கேஒப்பற்ற பெரியார் திராவிடர் கழகம்!தமிழீழ விடுதலையின் தாகத் தவிப்பைத்தமிழ்மண்ணைத் தாண்டித் தலைநகர் தில்லியிலும்பற்றவைத்து வந்துள்ள பட்டாளத் தோழர்களைபோற்றுதற் குரிய பெரியார் தொண்டர்களைஅஞ்சாத மறவர்களின் ஆற்றல்மிகு பணியைநெஞ்சாரப் போற்றி மனம்நிறைய வாழ்த்துகிறோம்!கெடுதலைச் சிங்களர் கீழ்மைகள் தோற்கும்விடுதலைப் புலிகளின் வீரம் வெல்லும்ஒற்றுமையாய் நம்குரலும் உரத்து முழக்கவேற்றமைகள் களைந்து வெளிப்படுங்கள் தோழர்களே!

வேழவேந்தன் இல்லத் திறப்பு

கழக ஆதரவாளர் வேழ வேந்தன் சென்னை யில் புதிதாக கட்டியுள்ள மாசிலாமணி-கண்ணம் மாள் இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் 13.4.2008 அன்று திறந்து வைத்தார். தோழர்கள் அன்பரசன், உமாபதி, தபசி குமரன், அன்பு சீலன், அன்பு தனசேகரன் உட்பட பலரும் பங்கேற்ற னர். கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கி னார்கள். நன்றி (ஆர்.)

சென்னையில் தொடர் பிரச்சாரம்

சென்னையில் மார்ச் 24 முதல் 29 வரை கழகத்தின் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கின்றன. சிற்பிராசன் ‘மந்திரமா, தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.‘ஆயுதம் வழங்காதே’ ஆர்ப்பாட்டத்துக்கு அரசு தடை - கைது!இந்தியா - இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து, மார்ச் 22, சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற 300-க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பில் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கேசவன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் மணியரசன் (த.தே.பொ.க. பொதுச்செயலாளர்), தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கைது செய்யப்பட்டு, அனைவரும் இரவு 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்

இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளி வந்திருக் கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: சென்ற இதழ் தொடர்ச்சி-• தில்லை தீட்சதர்களுக்கு - நடராசன் கோயில் பாரம்பர்ய உரிமை படைத்தது என்றும், அவர்களுக்கு அரசு உத்தரவு போட முடியாது என்றும் கூறுகிறது, கட்டுரை!மக்களாட்சி அமைப்பில் அரசு கட்டுப் பாட்டிலிருந்து முழுமையாக விலக்குப் பெற்ற எந்த நிறுவனமும் இருக்கவே முடியாது. குடும்பத்துக்குள்ளேயே சட்ட மீறல் நடந்தால், காவல்துறை தலையிட்டு வழக்கு தொடர உரிமை இருக்கும் போது பழம் பெருமை வாய்ந்த கோயில் முழுமையாக அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியுமா? நடராசன் கோயிலில் திருட்டுப் போய்விட்டது என்றால், காவல்துறைக்கு புகார் தர மாட்டார்களா? கோயில் விழாவுக்கு போலீ° பாதுகாப்பு வேண்டாமா?

தமிழ்நாட்டில் - எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது கோயில் சொத்துகளைப் பங்கு போட்டுக் கொள்வதில் தீட்சதர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து கோயிலுக்குள் பயங்கர மாக மோதிக் கொண்டார்கள். கோயில் நகைகளை திருடிக் கொண்டு போய் விட்டதாக, ஒரு தீட்சதர் அணி, மற்றொரு அணி மீது மாறி மாறி காவல் நிலையத் திற்குப் போய்த் தான் புகார் தந்தது. தமிழகம் முழுதும் சிரிப்பாய் சிரித்த கதை இவை. அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், தில்லைக் கோயிலுக்கு தனி அதிகாரி ஒருவரை நியமித்து, கோயிலை அரசே எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். உடனே தீட்சதப் பார்ப்பனர்கள் உயர் நீதிமன்றம் போய் தடை வாங்கிவிட்டனர்.அரசு தலையிடவே முடியாது என்று கட்டுரை எழுதக் கிளம்பியுள்ள “ஆன்மீகங் களை”ப் பார்த்து நாம் கேட்க விரும்புகிறோம்;

அரசே தலையிட முடியாது என்று கூறுகிற தீட்சதர்கள், ஏன், நீதிமன்றத்துக்கு ஓட வேண்டும்? காவல்துறையில் புகார் தர வேண்டும்? நீதிமன்றம் விதித்த தடையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்? தில்லை நடராசனிடம் முறையிட்டு விட்டு, ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே! கோயில் நகைகளையும், பொருட்களையும் திருடுவதும், பங்கு போட்டுக் கொள்வதில் ‘கும்மாங்குத்து குஸ்தி’ போடுவதுதான் - தெய்வீகத் திருப்பணியா?கோயில் வருமானத்தைப் பங்கு போடு வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்ற தீட்சதப் பார்ப்பனரை வேறு சில தீட்சதப் பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கோயில் கல்தூணிலேயே மண்டையை மோதி, “மோட்சத்துக்கு” அனுப்பினார்கள். ஆன்மீகத்துக்கு சவால் விடுவது யார்? அர்ஜுன் சம்பத்துகள் பதில் சொல் வார்களா? (தொடரும்)