கலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள ‘சன்’ டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!



‘பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்’ என்ற பூரிப்பான அறிவிப்புடன், ‘சன்’ தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமா யணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கி யிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், ‘இராமாயணம்’ ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு. ஏற்கனவே ‘இராம பக்தி’யில் மூழ்கிக் கிடக்கும் வடநாட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, ‘சங்பரிவாரங்களின்’ இராமன் அரசியலுக்கு அவர்களை தயார்படுத்த, ‘என்.டி.டி.வி.’ இந்தி மொழியில் இராமாயணத் தொடரைத் தொடங்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டு மண்ணையும், பார்ப்பனியமாக்க இதோ, என்னால் இயன்ற ‘அனுமான்’ உதவி என்று ‘விபிஷணராக’ அவதாரமெடுத்துள்ளது ‘சன்’ டி.வி.!

மெகா தொடர்களை அறிமுகப்படுத்தி பெண்களை அதில் மூழ்க வைத்து தமிழ்நாட்டில் குடும்ப - சமூக உறவுகளில் கடும் நெருக்கடிகளை உருவாக்கியதில் ‘சன்’ தொலைக்காட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அடுத்த கட்டமாக, இவர்கள், ‘இராமராஜ்யத்துக்கு’ தாவியுள்ளார்கள் இதற்கான காரணத்தை, ஆழமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சி மீதும் - கலைஞர் மீதும் - சன் தொலைக்காட்சிக் குள்ள குடும்ப பகை காரணமாக தனது கலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள ‘சன்’ டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!

திராவிட இயக்க அரசியலை மூலதனமாக்கி, தொலைக்காட்சி நிறுவனத்தையும், தொழில் நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டவர்கள் தான் இந்த ‘சன்’ டி.வி. குழுமத்தார்! தமிழினத்தை அவமதிக்கும் இராமாயணத்தை எரிக்கச் சொன் னார் அண்ணா! ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் இராமனை ‘தேசியத்’ தலைவனாக்க முயன்ற பார்ப்பன இராஜகோபாலாச்சாரிக்கு பதிலடி தந்து, ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் ராமனின் பார்ப்பன சுயரூபத்தை, கிழித்துக் காட்டினார் கலைஞர். ‘சன் டி.வி.’ குழுமத்தின் நாயகராகப் போற்றப்படும் முரசொலி மாறன் - 1995 ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் இராவணனின் பரம்பரை’ என்று பெருமிதத்தோடு அறிவித்தார். ஆனால் அவரின் வாரிசுகளோ, அந்த உணர்வுகளுக்கு சமாதி கட்ட துடிக்கிறார்கள்!

இந்திய அரசின் ‘தூர்தர்ஷன்’ ஆண்டுக்கணக் கில் ஒளிபரப்பிய ‘இராமாயணத் தொடரால் உந்தப்பட்ட மக்களின் மத உணர்வை - மத வெறி யாக்கி - ‘இராமன் கோயிலுக்கான’ அஸ்திவார மாக்கி, அதை ஆட்சி பீடமேறுவதற்கான படிக்கட்டு களாக மாற்றிக் கொண்டது பா.ஜ.க. கூட்டம்! மீண்டும் இப்போது அதிகாரத்தைப் பிடிக்க, இவர்களுக்கு ‘ராமன்’ தேவைப்படுகிறான். அதற்கான சதிவலை நாடு முழுதும் பின்னப்படு கிறது. சேது சமுத்திரத் திட்டத்தைப் பிடித்துக் கொண்டு, அதற்குள்ளே ‘ராமனை’த் தேடி, அந்த கற்பனை ராமனை தமிழகத்திலிருந்து இந்தியா முழுதும் தேர்தல் விற்பனைக்குக் கொண்டு போக முயற்சிக் கிறார்கள். அந்த விற்பனைக்கு மக்கள் சந்தையைத் தயார்படுத்தும் சதி வலைக்குள் ‘சன்’ தொலைக் காட்சி விருப்பத்தோடு இடம் பிடித்திருக்கிறது.

அயோத்தியில் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நாடு முழுதும் மதக் கலவரங்கள் வெடித்தபோது, தமிழகம் மட்டும் ‘பெரியார் மண்ணாக’ தனது அமைதியை வெளிப்படுத்தி கம்பீரமாக எழுந்து நின்றது. பார்ப்பனர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் - ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று தமது சமூகத்தினருக்கு அறிவுரை கூறினார். பார்ப்பனர் ராஜகோபாலாச் சாரி! அந்த எச்சரிக்கையை ‘வேதவாக்காகக்’ கருதி வரும் கூட்டம், இப்போது இராமாயணத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் எப்போதுமே பார்ப்பனர் பார்ப்பனியத்தின் பக்கமே நிற்கத் துடிக்கும் சன் தொலைக்காட்சிக் குழுமம் - இப்போது பச்சை யாகவே வெளிவந்து விட்டது; வரலாறு இவர்களை மன்னிக்காது.

ஆனாலும் திட்டவட்டமாக கூறுகிறோம் - இது இராமாயன காலமல்ல; துரோகத்தை தமிழர்கள் சரியாகவே புரிந்து கொள்வார்கள்.


தீட்சதர்கள் மீது ஆறுமுக நாவலரின் கிரிமினல் வழக்கு

இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளி வந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: சென்ற இதழ் தொடர்ச்சி-

• “பாரம்பர்யமாக தேவாரம் பாடுவதற்கு அங்கே இடமிருக்கிறது என்பது மட்டு மல்ல, தேவாரம் தினமும் பாடவும்படு கிறது” என்கிறது கட்டுரை.
தேவாரம் எப்படிப் பாடப்பட்டது? ஆறுகால பூசைகளின் நிறைவில் தேவாரம், திருவாசகத்தில் சில வரிகளைப் பாடி, பூசையை முடிப்பார்கள். ஆறுகாலப் பூசைகளுக்கு இடைபட்ட நேரத்தில் - தேவாரம் பாட முடியாது. எனவே சிற்றம்பல மேடை மீதேறியும் பாட முடியாது. ஆறுகாலப் பூசையை நடத்தும் - தீட்சதப் பார்ப்பனர்களுக்குத் தான் பூசையை தேவாரம் பாடி முடிக்க உரிமை உண்டு. இதுதான் - தில்லை கோயிலில் தேவாரத்துக்கு கிடைத்து வந்த மரியாதை. ‘சைவத்தின் தலைநகரம்’ என்று கட்டுரையாளர் சொல்கிறாரே, அந்த தில்லையில் தேவாரத்துக்கு தரப்பட்ட மரியாதை இதுதான்! ஆறுகால பூசைகள் நடக்காத இடைப்பட்ட நேரத்தில், ஏன் தேவாரம் பாடத் தடை? அப்போது- தீட்சதப் பார்ப்பனர் அல்லாத ‘சூத்திரர்கள்’ பாடி விடுவார்களே; அதனால் தான் தடை!

தேவாரம் பாடத் தடை கோரி சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தில் தீட்சதர்கள் தாக்கல் செய்த மனுவில், “தேவாரத்தை எந்த இடத்தில் பாடுவது என்பதை முடிவு செய்யும் உரிமை எங்களுக்குத் தான் உண்டு; சிற்றம்பல மேடையில் வள்ளலார், அப்பர் கூட ஏறியது கிடையாது” என்று திமிரோடு குறிப்பிட்டுள்ளனர்.

சிற்றம்பலம் மேடையில் நின்று தேவாரம் பாட வந்தவர்தான் ஓதுவார் ஆறுமுகசாமி. 8.5.2000 அன்று சிவடினயார் ஆறுமுகசாமி மேடை ஏறி பாட முயன்றபோது, தீட்சதர்கள் அந்த முதியவரை கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, ரத்தக் காயங்களுடன் கோயிலுக்கு வெளியே தூக்கி வீசினார்கள். 55 நாட்கள் கழித்து தான் காவல்துறை முதல் தகவல் அறிக்கையையே பதிவு செய்தது. தமிழக அரசு முறையாக வழக்கை நடத்தாததால் தீட்சதர் கும்பல் விடுதலைப் பெற்றது.

1992 இல் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் கோயில் கருவறையில், தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. (17.6.1992 இல் நீதிபதி ஆர். லட்சுமணன் அளித்த தீர்ப்பு) ஆனால், கோயில் கருவறைக்கு வெளியே சிற்றம்பல மேடையில்கூட தேவாரம் பாடுவதைத் தடுக்கிறார்கள் தீட்சதர்கள்.

2006 ஆம் ஆண்டு ஆக°டில் - தி.மு.க. ஆட்சி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், சட்ட ரீதியான உரிமையோடு ஜூலை 15 முதல் 20 வரை திருச்சிற்றம் பலத்தில் தேவாரம் பாடப் போவதாக சிவனடியார் ஆறுமுகசாமி அறிவித்தார். உடனே தீட்சதர் கூட்டம் சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்துக்கு ஓடி தடையாணை வாங்கிவிட்டது. கட்டுரையாளர் கூறுவதுபோல் - தேவாரம் பாடுவதை தீட்சதர்கள் எதிர்க்கவில்லை என்றால், தீட்சதர்கள் ‘சுத்தத் தமிழர்கள்’ என்பது உண்மை என்றால், ஏன், நீதிமன்றம் ஓடித் தடையாணை வாங்கினார்கள்? தேவாரம் பாடப் போனது கடவுள் மறுப்பாளர்களா? இல்லையே! சிவனடியார் தானே!

• ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின் பற்றக்கூடிய மரபுகளை, சமய நம்பிக்கை களை, வழிபாட்டு முறைகளை மீறலாமா என்ற கேள்வியை எழுப்புகிறது, கட்டுரை!

தீண்டப்படாதவர்களையும், பெண்களையும், கோயிலுக்குள்ளே விடக் கூடாது என்பதுதானே கடந்த கால மரபு? கோயிலுக்கு ‘பொட்டுக்கட்டி’ பெண்களை தேவதாசிகளாக்கி விடுவதுதானே மரபு! இவையெல்லாம் அப்படியே தொடரலாமா? சரி; பழையகால மரபை மீறக் கூடாது என்றால், கோயிலுக்குள் மின்விளக்கு போடலாமா? தீட்சதர் ஸ்கூட்டரில் போகலாமா? சிறைக்குப் போய்விட்டு திரும்பிவந்து தீட்சதர் பதவியில் தொடரலாமா?

இவையெல்லாம் கூட ஒரு பக்கம் இருக்கட்டும்; கட்டுரையாளர் கசிந்துருகும் ‘ஆன்மீக’ப் பார்வையி லிருந்தே சில கேள்விகளை கேட்கிறோம்:

தீட்சதப் பார்ப்பனர்கள் தில்லை கோயிலில் நடத்தும் வழிபாட்டு முறையே சிவவழிபாட்டுக்கு நேர் எதிரானது என்று பழுத்த சிவ மதத்தவர்களே - எதிர்ப்பு தெரிவித்திருப்பது, கட்டுரையாளருக்கு தெரியுமா?

சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகவே வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தவர், யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர். சைவத்தைப் பரப்பும் பாடசாலைகளை நிறுவியவர். 60-க்கும் மேற்பட்ட பழம் சைவ நூல்களை தேடிப் பிடித்து பதிப்பித்தவர். அவரது ஆளுமைக்காக திருவாடுதுறை ஆதீனத்தால் ‘நாவலர்’ பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். யாழ்ப்பாணத்திலிருந்து அடிக்டி தமிழகம் வந்து போனவர். அப்போதெல்லாம் பெரும்பாலும் அவர் தங்குமிடம், அவர் போற்றி வணங்கும் சிதம்பரம் தான். தில்லை நடராசன் மீது அபார பக்தி கொண்டவர். சிதம்பரத்திலேயே ‘சைவப் பிரகாச வித்யாசாலை’யை நிறுவியவர். அத்தகைய பழுத்த சிவப்பழம் ஆறுமுக நாவலரே - சிதம்பரம் தீட்சதப் பார்ப்பனர்களை அங்கீகரிக்கவில்லை. சிவாகமத்தில் கூறியபடி சிவதீட்சை பெற்றவர்கள் மட்டுமே சிவாலயங்களில் அர்ச்சகராக இருக்கவேண்டும். ஆனால், தீட்சதப் பார்ப்பனர்கள் ஆகமங்களைவிட வேதங்களை உயர்வாகக் கருதக் கூடியவர்கள். சைவ கோயில்களில் ‘சிவ தீட்சை’ பெறாத வைதீக பார்ப்பனர்கள் கையினால் விபூதி வாங்கக் கூடாது. ஆகமக் கோயில்களில் சிவ தீட்சை பெறாதவர்களுக்கு இடமில்லை என்பது நாவலரின் உறுதியான கருத்து. அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்துகளால் தீட்சதப் பார்ப்பனர்கள் நாவலர் மீது கடும் கோபமடைந்தனர்.

1868 இல் ஆறுமுக நாவலர் சிதம்பரம் வந்தபோது, தீட்சதப் பார்ப்பனர்கள் தில்லைக் கோயிலில் உள்ள பேரம்பலத்தில், நாவலருக்கு எதிராக ஒரு கூட்டத்தைக் கூட்டினர். 1869 ஆம் ஆண்டு இந்த கூட்டம் நடந்தது. அப்போது, கூட்டத்துக்கு தலைமை வகித்த தில்லை தலைமை தீட்சதப் பார்ப்பனர் சபா நடேசர் என்பவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து, ‘இப்போதே ஆறுமுக நாவலர் இருக்குமிடத்துக்குப் போய், அவரை இழுத்துக் கொண்டு வந்து, நையப்புடைப்பதற்கு விரும்புகிறேன். நீங்கள் எனக்கு உதவியாக வரவேண்டும்’ என்று அழைப்பு விடுக்கிறார். யாரும் முன்வரவில்லை. இதை கேள்விப்பட்ட ஆறுமுக நாவலா கடலூர் பஞ்சகுப்பம் நீதிமன்றத்தில் தீட்சதப் பார்ப்பனர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். 1869 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நம்பூதிரி பார்ப்பனர் மீதான குற்றத்தை உறுதி செய்து ரூ.50 அபராதம்; கட்டத் தவறினால் ஒருமாத சிறை என்று நீதிபதி ‘றொபேர்ட்°’ அறிவித்தார். (ஆதாரம்: ஸ்பிரீமேன் பத்திரிகை 3-2-1870)

தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள் கட்டிக் காத்து வரும் - வழுவாத பாரம்பர்ய பழக்க வழக்கங்களுக்கு இது ஒரு உதாரணம்.
1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி, நீதிபதி மகாராசன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. தமிழகக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக - சிவாச்சாரியார்கள், பட்டர்கள் மற்றும் ஆன்மீக வழி வந்தவர்களைக் கொண்ட குழு அது. அந்தக் குழு, சிதம்பரம் நடராசன் கோயில் பற்றி தனது அறிக்கையில் இவ்வாறு கூறியிருக்கிறது:

“சிதம்பரம் நடராசர் பூஜை மகுடாகம பூசை. மகுடாகமமே தமிழுக்குச் சிறப்புப் பிரிவுகளாகிய இசை நாடகம் இரண்டையும் சிறப்பிக்க வந்த ஆகமம்...

14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் தாங்கள் பாடிய தில்லைக் கல கம்பத்தில், நடராசப் பெருமான் மகுடாகமப் பூசை கொள்கிறார் என்று பாடியிருக்கின்றனர். ஆனால் தில்லையில் மகுடாகமப் பூஜை நடைபெறவில்லை.

பதஞ்சலிபத்ததிப்படி பூசை நடக்கிறது. இது வைதீக பூசை என்று தீட்சதர்கள் சொல்கிறார்கள். இவர்கள் கூற்று சரியானதாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. சிதம்பரம் கோயிலில் ஆகமப் பிரதிட்டையேயன்றி, வைதீய பிரதிட்டையல்ல. சிவாச்சாரியர்கள் (தீட்சதர்கள்) வேத மந்திரங்களை சேர்த்துக் கொள்வது அதிகப்படியானது. இங்கு வேதமந்திரம் இன்றியமையாத அங்கம் அல்ல. சிவாச்சாரிகள் வேறிடத்தில் கூறிய வேத ஆகம ஒருமைப்பாட்டு உணர்ச்சியின் விளைவாகத் தான் வேத மந்திரங்களைச் சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள். ஆதலால் தமிழ்நாட்டுக்கே உரிய வேறு எந்த நாடும் கண்டிராத, நடராசன் மூர்த்தியின் பூசை, வைதீக பூசை என்று கூறுவது பெரும் பிழை மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய புராதனமான கடவுள் கொள்கைக்கும், பண்பாட்டுக்கும் செய்த பெரும் தீமையும் ஆகும். ஆகம விதிப்படி இதுவும் புனிதம் கெடுவதாகும்.”

- இது மகாராசன் குழு பரிந்துரை. தீட்சதப் பார்ப்பனர்களின் வழியாக குறித்த கருத்து. வேதத்தின் மீதுள்ள பார்ப்பனப் பற்று காரணமாகவே, வழிபாட்டு முறையில் ஆகமத்தைப் புறக்கணித்து கோயில் புனிதத்தைக் கெடுத்து வருகிறார்கள் என்கிறது, மகாராசன் குழு பரிந்துரை. இவர்களைத் தான் பாரம் பர்யத்தைக் கட்டிக் காப்பாற்றி வருவோம் என பெருமை பேசுகிறது தினமணி’ கட்டுரை.
(தொடரும்)

5 comments:

இரா.சுகுமாரன் said...

//பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்’ என்ற பூரிப்பான அறிவிப்புடன், ‘சன்’ தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமா யணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கி யிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், ‘இராமாயணம்’ ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு.///

ஆம் இதுமட்டுமா? காலை எழரை மணிக்கு கோயில்கள் பற்றி "தினமலம்" பாணியில் கோயில்களை பற்றிய வரலாறு வேறு.

இப்போதெல்லாம் சன் தொலைக்காட்சி தொல்லை தாங்கவில்லை.

சரி போகட்டும். இது என்ன சம்பந்தம் இல்லாமல் யாரோ ஒருவர் துப்பாக்கி தூக்கி கொண்டு நிற்கிறான்.

இதைப்பார்த்தால் எனக்கு எப்படித் தோன்றுகிறது தொரியுமா?

சம்பந்தமே இல்லாமல் சிலர் தனது உலாப்பேசியில் ஜோதிகா, நயந்தரா படத்தை வைத்திருப்பது போல் உள்ளது

bala said...

திராவிடர் னாக்கா யாரு?ஒரு வெறி பிடித்த கன்னட தாடிக்காரனை தங்கள் தந்தை என்று கூறிக்கொண்டு காட்டுமிராண்டி மாறி காட்டுக் கூச்சல் போட்டபடி வன்முறை செய்யும் கருப்பு சட்டை பொறிக்கி கும்பலா?

இரா.சுகுமாரன் said...

//திராவிடர் னாக்கா யாரு?ஒரு வெறி பிடித்த கன்னட தாடிக்காரனை தங்கள் தந்தை என்று கூறிக்கொண்டு காட்டுமிராண்டி மாறி காட்டுக் கூச்சல் போட்டபடி வன்முறை செய்யும் கருப்பு சட்டை பொறிக்கி கும்பலா?//

உன்கருத்தை தைரியமாக சொல்ல முடியாமால் இருக்கும் "போலி பாலா" தைரியம் இருந்தால் உன் உண்மை பெயரை போட்டு எழுதவேண்டியது தானே!.

காட்டுமிராண்டி காலத்து கடவுள் கொள்கை இன்னும் இருப்பதால் தான் இவர்கள் எழுதவேண்டியிருக்கிறது.


//வன்முறை செய்யும் கருப்பு சட்டை பொறிக்கி கும்பலா?//
//

என்று அனாயசமாக கருத்து சொல்லும் உம் வார்த்தையே ஒரு வன்முறை தான்.

உம் கருத்து நியாயம் என்றால் கருத்தை மறுத்துஎழுதுங்கள் பதில் எழுதுவார்கள் அதைவிடுத்து இப்படி எழுதுவது உமது செயல் தவறானது என்பதையே எமக்கு உணர்த்துகிறது.

இரா.சுகுமாரன் said...

தோழர்களுக்கு வணக்கம்,

கண்ட நாய்கள் ஊளையிடும் இடமாக இந்த தளம் மாறவேண்டாம். எனவே மறுமொழி மட்டுறுத்தல் வசதி செய்தால் நன்றாக இருக்கும்.

இல்லைஎனில் ஒநாய்கள், கழுதைகள், நாய்கள் எல்லாம் உங்கள் தளத்தில் வந்து கத்தும்.

Unknown said...

ஆமாம் திராவிட பன்னிங்க பதிவு போடலாம் அதுல ஓநாய்ங்க வந்து கத்த கூடாதா
?