பெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை

பெரியார் எவருக்கும் பதிப்புரிமை வழங்கவில்லை சமுதாயப் புரட்சியாளர் பெரியாரின் சிந்தனைகள் மக்களுக்கானவையே!
உயர்நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் தாக்கல் செய்த பதில் மனு


பெரியார் திராவிடர் கழகம் - குடிஅரசு தொகுப்புகளை வெளியிடுவதற்கு தடை கோரியும், பெரியார் திராவிடர் கழகம் தங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்றும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு மனுவுக்கு பதிலளித்து கழகத் தலைவர், பொதுச்செய லாளர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் கடந்த 12 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி எம். ஜெயபால் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களுக்கு பதில் தருவதற்கு கி.வீரமணி தரப்பு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு 15 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சார்பில் வழக்கறிஞர் துரைசாமியும், பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் சார்பில் பெண் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் அவர்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இரண்டு மனுக்களிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம்:

வழக்கறிஞர் துரைசாமி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
முதலில் மனுதாரர் கி. வீரமணி பெரியாரின் தொண்டர் என்றும், நாத்திகர் என்றும், மதத்தில் நம்பிக்கையற்றவர் என்றும் கூறுகிறார். ஆனால், அவர் தாக்கல் செய்த மனுவில் தன்னை ஒரு ‘இந்து’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே அவர் உண்மையான பெரியார் தொண்டர் இல்லை என்பது தெரிகிறது. அதன் காரண மாகவே பெரியார் இறக்கும் வரை அறக் கட்டளையில் அவரை உறுப்பினராக நியமிக்க வில்லை.பெரியாரின் எழுத்துக்கள் தனது நிறுவனத்துக்கு மட்டுமே உரிமையுடையது என்று கி.வீரமணி கோருவதற்கு, சட்டப்படி உரிமை கிடையாது. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் - 19வது பிரிவின்படி பதிப்புரிமை கோரும் ஒருவர், எழுத்தாளரிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். பெரியார், அப்படி எழுத்துப்பூர்வமாக எழுதித் தரவில்லை. வீரமணி செயலாளராக உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற “சொசைட்டி”யின் விதிகள் (22வது விதி) பெரியார் “வாங்கிய” சொத்துகளைப் பற்றித் தான் குறிப்பிடு கின்றனவே தவிர, படைப்பாற்றலால் உருவாக்கப்படும் பேச்சு எழுத்துகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, மனுதாரரின் அறக்கட்டளை விதிகளே பெரியார் நூல்களுக்கு உரிமை கோராத போது தனது நிறுவனத்துக்கு உரிமையில்லாத ஒன்றின் மீது மனுதாரர் இடைக்கால தடை கோர முடியாது.
பெரியார் தனது எழுத்துகளும், பேச்சுகளும் மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பிய தலைவரே தவிர, அதை வைத்து பொருள் ஈட்டும் எண்ணம் கொண்டவர் அல்ல. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் - பரப்புங்கள் என்றும், தனது கருத்துகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் பெரியார் எழுதியும், பேசியும் வந்துள்ளார். அத்துடன், பெரியார் ஒரு தத்துவத் தலைவர். தனது தத்துவங்களை மக்களிடம் பொதுக் கூட்டங்கள் வழியாக பரப்பியவர். பொதுக் கூட்டங்கள் இல்லாத போது, தமக்கு சரி என்று தோன்றிய சிந்தனைகளை ‘குடி அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’, ‘ரிவோல்ட்’ போன்ற பத்திரிகைகளில் எழுதினார். சமூகத்தை மாற்றியமைப்பதே அவரது தத்துவத்தின் முழுமைனயான நோக்கம். எனவே மக்களுக்கான பெரியாரின் தத்துவங்களுக்கு இந்த பூமிப் பந்தில் தனியுரிமை கோரும் உரிமை எவருக்கும் கிடையாது. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே, தனது தத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்று பெரியார் ஒரு போதும் கூறவில்லை. அதற்கான உரிமையுள்ளவர் மனுதாரர் மட்டுமே என்று பெரியார் தனது அறக்கட்டளை விதிகளிலும் குறிப்பிட வில்லை. பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புவதற்கு பெரியாரைப் பின்பற்றும் தொண்டர்களுக்குக்கூட உரிமை உண்டு.
எல்லோருக்கும் பொதுவானவர் பெரியார். அவர் தேசத்துக்கே பொதுவானவர். மனுதாரரும், அவரது அறக்கட்டளைக்கும் மட்டுமே சொந்தமானவர் அல்ல. அவரது எழுத்துக்களைப் போற்றிப் பாதுகாக்கும் உரிமை - ஒவ்வொரு பெரியார் தொண் டருக்கும் உண்டு. இதில் மக்களை மனுதாரர் கட்டுப்படுத்த முடியாது. அது மட்டுமல்ல, பெரியாரின் சிந்தனைகளை காலவட்டத் துக்குள்ளும் அடக்கிட முடியாது. அவை காலங்களைக் கடந்து நிற்பவை. மனித குலம் நீடிக்கும் வரை அவரது சிந்தனைகளை வெளி யிடவும், பரப்பவும் பெரியார் தொண்டர் களுக்கு உரிமை உண்டு. மனுதாரரான கி.வீரமணி மட்டுமே பெரியாரைப் பின்பற்றுபவர் அல்ல; ஆயிரக் கணக்கில், இலட்சக்கணக்கில் பெரியாரைப் பின்பற்று வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே பெரியார் கொள்கைகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியார் தனது வாழ்நாளின் மிக கடைசி காலத்தில்தான், தானும் 12 பேருடனும் சேர்ந்து இந்த அறக்கட்டளையை நிறுவினார். அதுகூட தனது தனிப்பட்ட அசையா சொத்துகள் விண்ணப்பதாரரான கி.வீரமணி போன்ற எந்த தனிப்பட்ட நபர்களுக்கும் போய் சேர்ந்து விடாமல், பரவலாக மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே உருவாக்கினார்.
பெரியார் பதிப்புரிமையை தன்னிடம் எழுத்துப் பூர்வமாகக் கொடுத்துள்ளார் என்ற சான்று ஆதாரத்தைக் காட்டாதவரை, விண்ணப்பதாரர், சட்டப்பூர்வமாக பதிப்புரிமை கோர முடியாது. பதிப்புரிமை சட்டத்தின் 19வது பிரிவு, இதைத் தான் கூறுகிறது.
பெரியார் 1952 ஆம் ஆண்டு உருவாக்கிய அறக்கட்டளையின் வழியாக பெரியார் தனது அனைத்து எழுத்துகளையும், அறக்கட்டளைக்கு உரிமையாக்கியுள்ளார் என்று மனுதாரர் கூறுவது உண்மையல்ல. முதலில் அந்த அறக்கட்டளையை பெரியார் மட்டுமே தொடங்கவில்லை. அறக்கட்டளைகளின் 13 உறுப்பினர்களில் பெரியார் இருக்கிறார். அதில் பெரியாரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பெரியார் உயிருடன் இருந்த காலத்திலேயே வே. ஆனைமுத்து - பெரியார், எழுத்து பேச்சுகளைத் தலைப்புவாரியாக ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’களிலிருந்து 3 தொகுதிகளாக தொகுத்து, அதை பெரியார் மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில், மனுதாரரும் (கி.வீரமணி) பங்கேற்றார். இவை தவிர, பெரியாருடைய கருத்துகளை பல்வேறு பதிப்பகங்கள் ஏற்கனவே வெளியிட் டுள்ளன. மனுதாரர்கூட இப்படி வெளியிட்டுள்ளார். உதாரணத்துக்கு சிலவற்றைக் குறிப்பிடுகிறோம்.
1. ‘தந்தை பெரியார் இறுதி சொற்பொழிவு’ வெளியீடு : மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி; 1993.
2. ‘தந்தை பெரியாரின் இறுதி சொற்பொழிவு நாத்திகம்’ வெளியீடு; 2002.
3. பெரியாரின் “அபாய சங்கு” வெளியீடு: பெரியார் அச்சிடுவோர் வெளியீட்டு குழுமம்; 1983.
4. ‘புதியதோர் உலகு செய்வோம்’ வெளியீடு: அறிவுப் பண்ணை.
5. பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” முனைவர் கே.எம்.ராமாத்தாள் ஆங்கில மொழியாக்கம் வெளியீடு: தமிழ் மண் பதிப்பகம், 2007.
6. பெரியாரின் “கல்வி சிந்தனைகள்” வெளியீடு: இந்திய மாணவர் சங்கம்-2007.
7. பெரியார் ஈ.வெ.ரா.வின் “வாழ்க்கை துணை நலம்”; வெளியீடு: கோட்டையூர் ரெங்கம்மாள் மற்றும் ஏ.எல். சிதம்பரம் (குறிப்பு: கி.வீரமணியின் திருமணத்தின்போது வழங்கப்பட்டது.)
8. “பகுத்தறிவாளர் மன்ற தொடக்க விழாவில் பெரியார் பேருரை” வெளியீடு: கோவை அண்ணா சிந்தனையாளர் பேரவை; 1971.
9. பெரியார் எழுதிய ‘கடவுளர் கதைகள்’; வெளியீடு: சிந்தாமணி பதிப்பகம், 2003.
10. “இஸ்லாம் பற்றி பெரியார்”; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. அறிமுக உரை எழுதியவர் ஜி.அலோசியஸ்; வெளியீடு: கிரிட்டிக்கல் கியுஸ்ட் - 2004.
11. ‘மதமும் - மனிதனும்’ - பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் 24.11.1964-ல் பேசியது; வெளியீடு: பகுத்தறிவாளர் கழகம்; 1993.
12. ‘குடிஅரசு’ 1925 முதல் தொகுதி; குடிஅரசு - 1926 (இரு தொகுதிகள்) வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம் - 2003.
13. “சிந்தனே வாய்ச்சரிக்கதே” (கன்னடத்தில் - பெரியாரின் பேச்சு மொழி பெயர்ப்பு) வெளியீடு: சுவபிமான காலுவலி கருநாடகா-2006.
14. ‘இந்த சந்தர்ப்பம் மறுபடியும் வராது’ - பெரியாரின் குடந்தைப் பேருரை. வெளியீடு: பெரியாரியல் குடும்பங்களின் நட்புறவு சங்கம்-1984.
15. ‘இனி வரும் உலகம்’ - பெரியார் எழுதியது. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1958.
16. ‘மதமும் - அரசியலும்’ பெரியார் ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1960.
17. ‘ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்’-ஈ.வெ.ரா. வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு-1961
18. தீண்டாமையை ஒழித்தது யார்? (வைக்கம் போராட்ட வரலாறு) வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு - 1964.
19. கிராம சீர்திருத்தம் - பெரியார் சொற்பொழிவு - சிந்தனை பண்ணை.
1925 இல் பெரியார் தொடங்கிய குடிஅரசுக்கும் 1952 இல் பெரியார் நிறுவிய அறக்கட்டளைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அறக்கட்டளை தொடங்குவதற்கு முன்பே ‘குடிஅரசு’ நின்று போய்விட்டது.‘குடிஅரசு’ பத்திரிகைக்கும், ஆசிரியராகவும், பதிப்பாளராகவும், வெளியிடு வோராகவும், பலர், பல்வேறு காலகட்டங்களில் இருந்து வந்துள்ளனர். அதன் விவரம்:
தேதி - பத்திரிகை - ஆசிரியர் - அச்சிடுவோர் மற்றும் வெளியிடுவோர்
2.5.1925 - குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி - கே.ஏ. அப்பையா நாயக்கர் மற்றும் ஈரோடு சுயராஜ்ய பிரஸ் தங்கப் பெருமாள் பிள்ளை
26.7.1925 ” ஈ.வெ.ராமசாமி - கே.ஏ.அப்பையா நாயக்கர் ஈரோடு சுயராஜ்ய பிரஸ்
27.9.1925 ” ஈ.வெ.ராமசாமி - ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நாயக்கர் ஈரோடு டைமண்ட் பிரஸ்
18.4.1926 ” ஈ.வெ.ராமசாமி -சா.ராமசாமி நாயக்கர் நாயக்கர் ஈரோடு ஸ்டார் பிரஸ்
9.1.1927 ” ஈ.வெ.ராமசாமி ஈ.வெ.ரா. - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
16.6.1929 ” ஈ.வெ.ராமசாமி ஜெ.எஸ்.கண்ணப்பர் திராவிடன் பிரஸ், சென்னை.
2.2.1930 ” ஈ.வெ.ராமசாமி ஈ.வெ.ரா. - நாகம்மையார் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
29.11.1931 ” ஆசிரியர் பெயர் ஈ.வெ.ரா. - நாகம்மையார் இல்லை ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
26.11.1933 -புரட்சி - ஆசிரியர் பெயர் எஸ்.ஆர். கண்ணம்மாள் இல்லை ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ்
24.12.1933 புரட்சி - ஈ.வெ.ராமசாமி எஸ்.ஆர். கண்ணம்மாள் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
31.12.1933 ” ஈ.வெ.கிருஷ்ணசாமி எஸ்.ஆர். கண்ணம்மாள் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
4.2.1934 ” ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
26.8.1934 - பகுத்தறிவு- ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
13.1.1935- குடிஅரசு - ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈ.வெ.கிருஷ்ணசாமி ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்
20.8.1939 ” அ. பொன்னம்பலனார் அ. பொன்னம்பலனார் ஈரோடுஉண்மைவிளக்கம்பிரஸ்1.7.1944 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
3.1.1948 ” கரிவரதசாமி கரிவரதசாமி ஈரோடு தமிழன் பிரஸ்
எனவே ‘குடிஅரசு’க்கு பலர் ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுவோராகவும் இருந்து வந்துள்ளனர். கடைசியாக ‘குடிஅரசு’க்கு ஆசிரியராகவும், அச்சிட்டு வெளியிடுவோராகவும் இருந்தவர் தமிழன் பதிப்பகத்தைச் சார்ந்த கரிவரதசாமி. கரிவரதசாமியோ, அவரது தமிழன் பதிப்பகத்தாரோ மனுதாரரான வீரமணிக்கு பதிப்புரிமை ஏதும் எழுதித் தரவில்லை.
பதிப்பாளர்தான் பத்திரிகையின் உரிமையாளர் ஆவார். பெரியார் ‘குடிஅரசு’க்கு 27.9.1925-லிருந்து 18.11.1926 வரை மட்டுமே பதிப்பாளராக இருந்துள்ளார். இந்தியாவின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் தமது அறக்கட்டளை சார்பாக நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், மாநாடுகள் நடத்தப்படுவதாகவும் மனுதாரர் கூறுவது உண்மைக்கு மாறானது. அது நீதிமன்றத்தை திசை திருப்புவதாகும். மனுதாரரின் அறக்கட்டளை நல்ல வருமானம் தரக்கூடிய கல்வி நிறுவனங்களைத்தான் நடத்தி வருகிறது.பெரியாரின் வாழ்க்கை வரலாறான ‘தமிழர் தலைவர்’ நூலை வெளியிடுவதற்கு 12.3.1949-ல் ‘ஸ்டார் பதிப்பகம்’ என்ற நிறுவனம் வெளியீட்டு உரிமை கோரி பெரியார் ஈ.வெ.ரா.வுடன் ஒப்பந்தம் போட முன் வந்ததாக மனுதாரர் சமர்ப் பித்துள்ள ஆவணம் மோசடியானது. அந்த ஆவணத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி யின் கையெழுத்தும் இடம் பெறவில்லை. அந்த ஆவணத்தில்கூட அனைத்து உரிமைகளும் ‘குடிஅரசு’க்கே உரிமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குடிஅரசு’ பதிப்பகம் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விடவில்லை. ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ வந்த பிறகும்கூட - 1964 ஆம் ஆண்டு வரை ‘குடிஅரசு’ பதிப்பக வெளியீடுகள் வெளிவந்து கொண்டுதான் இருந்தன.
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் ‘குடிஅரசு’ கட்டுரைகளைத் தொகுக்க - தாம் ஒரு குழுவை நியமித்ததாக மனுதாரர் கூறுகிறார். அப்படி, எந்தக் குழுவையும் மனுதாரர் நியமிக்கவில்லை. பெரியாரின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளி லிருந்து சில ஆவணங்களை சேகரித்தனர். அப்படியே பார்த்தாலும், அதுகூட திராவிடர் கழகம் நியமித்த குழு தான், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் உரிமை கோர முடியாது. உண்மையில் மனுதாரரிடம் ‘குடிஅரசு’ பத்திரிகைகள் அத்தனையுமே முழுமையாக கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை கீழ்க்கண்டவர்களிட மிருந்து நாங்கள் தான் (கொளத்தூர்
மணி) திரட்டினோம்.
சென்னை மறைமலை அடிகள் நூலகம், அண்ணா அறிவாலயத்திலுள்ள பேராசிரியர் ஆய்வக நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம், கரந்தை தமிழ்ச் சுடர் நூலகம், புதுக்கோட்டை ஞானாலயா நூலகம், மதுரை யாதவர் கல்லூரி நூலகம், மதுரை முத்துமுருகன் நூலகம், நாகர்கோயில் ஆசிரியர் புவனன் நூலகம், மேட்டுப்பாளையம் உலக சிந்தனையாளர் நூலகம், ஈரோடு பேராசிரியர் மு.க. சுப்ரமணியம் நூலகம், குளித்தலை தமிழறிஞர் கா.சு. பிள்ளை நூலகம், மன்னார்குடி கோபால முதலியார் நூலகம், விருத்தாசலம் பல்லடம் மாணிக்க நூலகம், சைதை மாக்சிம் கார்க்கி நூலகம், சிங்கப்பூரிலுள்ள தேசிய நூலகம், தேசிய பல்கலைக்கழக நூலகம், ‘தமிழ் முரசு’ நூலகம், தேசிய ஆவணக் காப்பகம், சென்னை கன்னிமாரா நூலகம், ரோஜா முத்தையா நூலகம், காஞ்சிபுரம் கே.பி. ஞானசம்பந்தர், மதுரை சாலமன் பாப்பையா போன்ற பிரமுகர்கள் மற்றும் நூலகங்களிலிருந்து, பெரியாரின் நூல்கள் தேடி சேகரிக்கப்பட்டு, அவரது சிந்தனைகள் தொகுக்கப்பட்டன.
பெரியாரின் ‘ஒரிஜினல்’ மூலப் பிரதிகள் தம்மிடம் இருப்பதாக மனுதாரர் கி.வீரமணி கூறுவது, பரிதாபத்துக்கு உரியது. ‘ஒரிஜினல்’ என்பதற்கான அர்த்தம்கூட அவருக்கு தெரிய வில்லை. அச்சடிக்கப்பட்ட பிரதிகள் ‘ஒரிஜினல்களாக’ முடியாது. ‘ஒரிஜினல்’ என்பது கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்க வேண்டும். அப்படி, ‘குடிஅரசில்’ பெரியார் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் எதுவும் மனுதாரரிடம் கிடையாது. ‘குடிஅரசு’ பத்திரிகைகளை பாதுகாத்து வைத்துள்ளோரிடமும் கிடையாது. நாங்கள் இதுவரை ‘குடிஅரசு’ 3 தொகுதிகளை வெளியிட்டுள்ளதோடு, செப்டம்பர் 17-ம் தேதி 1927 முதல் 1949 வரையிலான ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தோம். கடந்த ஆக°ட் 26-ம் தேதி மேட்டூரில் நடந்த விழாவில் பெரியார் ‘பகுத்தறிவு’ வார ஏட்டை தொடங்கிய, நாளைக் கொண்டாடும் வகையில் அன்று நடந்த சிறப்பான விழாவில், ‘குடிஅரசு’ தொகுப்புகளும் வெளியிடப்பட்டு விட்டன. அப்படி வெளியிடப்பட்ட செய்தி தெரிந்த பிறகே, மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
பெரியார் மாபெரும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்; ஒப்பற்ற போராட்ட வீரர்; தமிழக வரலாற்றை மாற்றியமைத்தவர்; அத்தகைய மாபெரும் தலைவரின் எழுத்துகளை ஒரு தனி மனிதர் கோரும் பதிப்புரிமைக்குள் முடக்கிவிடக் கூடாது. பெரியாரின் எழுத்துகள் - பதிப்புரிமை கோரக் கூடிய விற்பனைச் சொத்து அல்ல. பெரியாரின் சிந்தனைகள் விற்பனைப் பொருள் அல்ல; அவை சிந்தனையை விதைப்பவை.
மாபெரும் சிந்தனையாளர்களின் தத்துவங்களுக்கும், கொள்கைகளுக்கும் பதிப்புரிமை சட்டங்களை விரிவாக்க முடியாது. பெரியாரின் எழுத்துக்களை தேசத்தின் சொத்துக்களாகவே கருத வேண்டுமே தவிர, மனுதாரர் கோருவதுபோல், பெட்டிகளில் வைத்து பூட்டிவிடக் கூடாது. மனுதாரர் கூறுவது போல், எங்கள் கட்சிக்காரர், பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருவது உண்மை தான். காரணம், மனுதாரரான கி.வீரமணி, பெரியார் கொள்கைகளிலிருந்து வெகுதூரம் விலகிப் போய், பெரியார் கொள்கைகளை சிதைக்கவும் தொடங்கிவிட்டார். அதன் காரணமாகவே பெரியார் திராவிடர் கழகத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. எங்களது கட்சிக்காரர் போன்ற உண்மையாகவே பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவோர்தான், பெரியாரின் தத்துவங்களை, சிந்தனைகளை பதிப்பித்து, பரப்புவதற்கான உரிமை பெற்றவர்கள். பெரியாரே தனது எழுத்துக்களுக்கு பதிப்புரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடிஅரசு, ஜஸ்டிஸ், ரிவோல்ட், மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றிலிருந்து பெரியார் எழுத்து, பேச்சுகளைத் திரட்டுவதற்கு கடுமையான முயற்சிகளை எடுத்ததாக மனுதாரர் கி.வீரமணி கூறுவதில் கொஞ்சம்கூட உண்மை கிடையாது. உண்மையில் குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி பத்திரிகைகளின் பல பிரதிகளே மனுதாரரிடம் கிடையாது. மனுதாரருக்கு பெரியார் எழுத்தில் பதிப்புரிமை கோரும் உரிமை கிடையாது என்பதற்கு இதுவே போதுமானது. எங்களது கட்சிக்காரரிடம் இருப்பதுபோலவே, மனுதாரரிடமும் சில ‘குடிஅரசு’ பிரதிகள் இருக்கலாம். அதன் காரணமாகவே அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. மனுதாரரின் திருச்சியிள்ள அலுவலகத்திலிருந்து எங்கள் கட்சிக்காரர் ‘குடிஅரசு’ பிரதிகளை தெரியாமல் எடுத்துச் சென்றுவிட்டதாக மனுதாரர் கூறுவது உண்மையல்ல. தஞ்சை பகுத்தறிவாளர்களை குடிஅரசு தொகுப்புக்கு தமது அறக்கட்டளை நியமித்ததாக மனுதாரர் கூறுவதும் உண்மையல்ல. குடிஅரசு குறுந்தகடுகளும் மனுதாரரிடம் கிடையாது. நாங்கள் லாபத்துக்கு ‘குடிஅரசு’களை விற்பதாகக் கூறுவதும் உண்மையல்ல. பல லட்சம் ரூபாய் இழப்பில் தான் நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுகிறோம். மனுதாரரிடமிருந்து ஒரு சிறு துண்டுக் காகிதத்தைக்கூட நாங்கள் எடுக்க வில்லை. மனுதாரரிடமே பெரியாரின் எழுத்துகள் முழுமையாக இல்லாதபோது, அவரிடமிருந்து நாங்கள் ‘திருடிச் சென்று விட்டோம்’ என்ற கேள்விக்கே இடமில்லை.
பெரியார் எழுத்துகள் அனைத்துமே, திருச்சி யில் மணியம்மை மேல்நிலைப் பள்ளியில் திரட்டப்பட்டதிலிருந்து தான் தொகுத்தோம் என்று நாங்கள் எந்த ஒப்புதலும் தரவும் இல்லை.பெரியார் எழுத்துகளை பதிப்பிப் பதால், தனக்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளதாக சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி கூறுகிறார். பெரியார் எழுத்துகள் மக்களிடம் சென்றடையக் கூடாது என்றும், எவருமே பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடாது என்றும் மனுதாரர் கருதுகிறாரா என்பது புரியவில்லை. பெரியார் எழுத்துகளைப் படிக்கும் போதுதான் பெரியாரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமே தவிர, மனுதாரரும் அவரது குழுவினரும் தயாரித்த பெரியார் சினிமாவிலிருந்து பெரியாரை புரிந்து கொள்ள முடியாது.
மனுதாரர் கி. வீரமணி தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அவர் கூறும் பொருளாதார இழப்பு, நாங்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிடுவதால் நிகழ்ந்துள்ளதா? அல்லது பெரியார் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதால், மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை, மனுதாரர் தெளிவுபடுத்தவில்லை.மனுதாரரும், அவரது சகாக்களும் பெரியார் எழுத்துகளுக்கு உரிமை படைத்தவர்கள் அல்ல. எனவே நீதிமன்றம் தடை ஆணையை பிறப்பிக்கக் கூடாது. மனுதாரர் விரும்பினால் எங்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி, அவரும் பெரியார் எழுத்து பேச்சுகளை தாராளமாக வெளியிடலாம். பொருளாதாரம், அரசியல், சமுதாயம் அல்லது மதம் தொடர்பான கட்டுரைகளை செய்தி ஏடுகள், பத்திரிகைகளிலிருந்து மறு பதிப்பு செய்வது, பதிப்பு உரிமைகளில் தலையிடுவது ஆகாது. கட்டுரைகளை எழுதிய ஆசிரியர், அதற்கு வெளிப்படையாக பதிப்புரிமை பெற்றிருந்தால் மட்டுமே வெளியிட முடியாது. எனவே பெரியாரின் எழுத்து பேச்சுகளை மறுபதிப்பு செய்வது - பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வராது. பெரியாரின் எழுத்துகளை மட்டும் மறுபதிப்பு செய்யவில்லை. பொது மக்களிடம் அவர் பேசிய பேச்சுகளும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. இத்தகைய பேச்சுகளை மறுபதிப்பு செய்வது, பதிப்புரிமையில் குறுக்கிடுவது ஆகாது. எனவே இந்த நீதிமன்றம் மனுதாரரின் மனுவை நிராகரித்து நீதி வழங்கக் கோருகிறோம்.
இதேபோல் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள வேறு சில தகவல்கள்:
1. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 17வது பிரிவின்படி பதிப்புரிமையை வழங்குவோர் வழங்கப்படுவோருக்கு கட்டாயமாக அதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை விதிகளில் அப்படி பதிப்புரிமை வழங்கியதற்கான பிரிவுகள் ஏதுமில்லை.
2. அறக்கட்டளை விதிகளின்படியே பதிப்புரிமை உண்டு என்று வாதிட முடியாது. காரணம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு மட்டும் தான் அறக்கட்டளையே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவே விதிகள் கூறுகின்றன. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. அவை பெரியாரால் படைக்கப்பட்டவை. வாங்கப்பட்ட பொருளுக்காக பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையின் விதி 22 - பெரியாரால் படைக்கப்பட்ட அவரது எழுத்து - பேச்சுகளுக்குப் பொருந்தாது. சமூகநீதி, பெண்ணுரிமை என்று மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய புரட்சிகரமான தலைவர் பெரியார்; அத்தகைய ஒரு தலைவர் தனது எழுத்துகளை தனக்காகவோ, தனது அறக்கட்டளைக்காகவோ வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை. அவரது வாழ்நாளில் தனது எழுத்துகளுக்காக அவர் எந்த ‘ராயல்டியும்’ பெற்றது இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.
3. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தனக்கே உரியது என்பதை நிரூபிக்க மனுதாரரி டம் எந்த சான்றும் இல்லை. இதில் மிக மோசமாக அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த உரிமை கோருவதற்கே தொடர்பில்லாத வராக (Stranger) - அந்நியராக அவர் இருக்கிறார். தனக்குத்தான் பதிப்புரிமை உண்டு என்பதற்கு எந்த ஆவணமும் மனுதாரர் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
4. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் ஏற்கனவே மக்களின் சொத்தாகிவிட்டது. ஏற்கனவே பல்வேறு பதிப்பகங்கள் - பெரியார் நூல்களை வெளியிட்டுவிட்டன. மனுதாரர் கடந்த காலங்களில் இந்த வெளியீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு கூட தனிப்பட்ட பகைமையினால் தான் மனுதாரர் தொடுத் துள்ளாரே தவிர, அவர் கூறுவதுபோல் பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரி அல்ல.
5. மனுதாரர் கூறுவதுபோல் - பெரியார், பெண் களின் முன்னேற்றத்துக்கு மட்டும் பாடுபட்டவர் அல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக் காகவும் அவர் பாடுபட்டுள்ளார். மனுதாரருக்கு பெரியாரின் அடிப்படை தத்துவமே தெரிய வில்லை. யுனெ°கோ நிறுவனம் வழங்கிய விருதும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடலுமே, பெரியார் ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக்குப் போராடியதை உணர்த்து கின்றன.
6. பெரியாரின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அவரது எழுத்துகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியாரின் தத்துவங்களை தனிநபர்களிடமோ, அல்லது நிறுவனங்களிடமோ முடக்கிவிட முடியாது. ஏதோ சில - பெரியாரின் எழுத்துகளை, மனுதாரர் சேகரித்து வைத்திருப்பதாலேயே பெரியார் சிந்தனைகளுக்கு அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. வேண்டுமானால் எங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் பெரியார் சிந்தனைகளை தாராளமாக வெளியிடட்டும்.
7. நூற்றுக்கணக்கில் அச்சடித்து பத்திரிகைகள் வெளி வந்த பிறகு, அதன் பிரதிகள் எல்லோரி டமும் போய் விடுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருப்பது மட்டுமே ‘ஒரிஜினல்’ என்று மனுதாரர் எப்படி உரிமை கோருகிறார் என்பது தான் புரியவில்லை. பெரியார் பத்திரிகை அவரது தொண்டர்கள் பலரிடம் இருக்கிறது. உண்மையில் மனுதாரரிடம் தான் பெரியாரின் பல பத்திரிகைள் இல்லை.
பெரியார் எதிரிகள் யார்?

பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். கரிவரதசாமி போன்றோரும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். ஆசிரியராக இருந்த பெரியார், சட்டப்படியான உரிமை வழங்கும் வெளியீட்டாளர் உரிமையை தம்மிடம் வைத்துக் கொண்டது இல்லை. இதை பதில் மனுவில் நாம் சுட்டிக்காட்டி யிருப்பதை கேலி செய்கிறது ‘விடுதலை’! பெரியாருக்கு நம்மை எதிரானவர்களாக தங்களது கழகத்தினரிடையே சித்தரிக்க முயற்சி செய்கிறது; அதெல்லாம் இருக்கட்டும்!
பெரியாரின் நூல்களை தாங்கள் மட்டுமே வெளியிட வேண்டும்; பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடை போட வேண்டும்; 15 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்கள் பெரியாரின் எதிரிகளா?
அல்லது - பெரியாரின் எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தடைகளைக் கடந்து களத்தில் நிற்கும், பெரியார் திராவிடர் கழகம் பெரியாருக்கு எதிரியா?
இதுதான் இப்போது மக்கள் மன்றத்தின் முன் உள்ள கேள்வி!வழக்கு மனுவில் தன்னை ‘இந்து’ என்ற அடையாளத்தோடு, மனுதாக்கல் செய்து கொண்ட “தமிழர் தலைவர்” பெரியாருக்கு உரிமை கொண்டாடுவதை தமிழர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கி.வீரமணிக்கு ஆதரவாக தஞ்சை ரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு
‘குடி அரசு’ பத்திரிகையை வெளியிடும் உரிமை கி.வீரமணிக்கு மட்டுமே உண்டு என்றும், திருச்சியில் 1983 இல் ‘குடிஅரசு’ பத்திரிகைகளிலிருந்து பெரியார் எழுத்து பேச்சுகளைத் தொகுத்து, தமது தலைமையிலான குழு வீரமணியிடம் ஒப்படைத்துவிட்டது என்றும், எனவே கி.வீரமணி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு தஞ்சை இரத்தினகிரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரும் தன்னை ‘இந்து’ என்றே கூறியுள்ளார்.

பெரியாரை திரிப்பது யார்? (1)
பெரியார் எழுத்து பேச்சுகளை கி.வீரமணியின் நிறுவனம் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும்; கருத்துச் சிதைவு இல்லாமல் பெரியாரை அவர் ஒருவரால் மட்டுமே படம் பிடிக்க முடியும் என்றும் திராவிடர் கழக எழுத்தாளர்கள் வண்டி வண்டியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பெரியார் கருத்துகளை சிதைப்பவர்களில் பெரியாரின் எதிரிகளைவிட கி.வீரமணியே முன்னணியில் இருக்கிறார் என்பது, வேதனையான உண்மை. கி.வீரமணி - பெரியார் கருத்துகளை திரித்ததற்கு சில சான்றுகளை இங்கே முன் வைக்கிறோம். கி.வீரமணியானாலும் சரி, அவரது தொண்டரடிப் பொடிகள் ஆனாலும் சரி, அவரது அரசவை எழுத்துப் புலவர்களானாலும் சரி, எல்லோருக்குமே அறைகூவல் விடுக்கிறோம்; இவைகளை - மறுக்க முடியுமா?
13.12.2000 அன்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.“தந்தை பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என அறிவிக்கப்பட்டது” என்பது தீர்மானம்.இது உண்மை தானா?
• பெரியார் தனது இறுதிப் பேருரையிலேயே தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினார்.
• பெரியார் மறைவுக்கு முன் 1.10.73, 2.10.73 ‘விடுதலை’ நாளேடுகளில் பிரிவினையை வலியுறுத்தி எழுதினார்.
• “சுதந்திரத் தமிழ்நாடு பெற தூக்குமேடையும் ஏறுவோம் கி.வீரமணி முழக்கம்” என்ற தலைப்பில் கி.வீரமணி பேச்சு 3.10.1973 ‘விடுதலை’ நாளேட்டில் வெளி வந்தது.
• 14.11.1973 இல் ‘விடுதலை’யில் வெளிவந்த ‘கழகமும் பிரிவினையும்’ என்ற கட்டுரை “திராவிடர் கழகத்தின் வரலாற்றில் இரண்டறக் கலந்து விட்ட கொள்கையே நாட்டுப் பிரிவினை என்பது வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டது.
பெரியார் 24.12.73 இல் முடிவெய்தினார். அதற்கு முன்பு சுமார் ஒரு மாத காலத்துக்குள் எழுதியவற்றை மட்டுமே மேலே சுட்டிக்காட்டியுள்ளோம்.‘விடுதலை’ நாளேட்டில் இதழின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பெரியார் காலத்திலும் பெரியார் மறைந்த பிறகும்கூட இடம் பெற்றிருந்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு ‘அவசர நிலை’ காலத்தில்தான் அது நீக்கப்பட்டது.
இவ்வளவுக்கும் பிறகு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் தந்தை பெரியார் காலத்திலேயே “திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுவிட்டது” என்று கி.வீரமணி தலைமையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மானம் போடுவது பெரியாரைத் திரிப்பதா? இல்லையா?
“பெரியார் வலியுறுத்திய பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம்” என்று தீர்மானம் போட்டுக் கொள்ளட்டும். அது கி. வீரமணியின் உரிமை. ஆனால், பெரியாரே பிரிவினையை கைவிட்டார் என்று தனது முடிவை பெரியார் மீது ஏற்றிச் சொல்வதற்கு பெயர் என்ன?பதில் வருமா?
(‘புரட்டுகள் உடைப்பு’ தொடரும்)

பெரியாரின் நூல்களை நாட்டுடமையாக்கு! பொள்ளாச்சி, விழுப்புரத்தில் கழக ஆர்ப்பாட்டம்

தந்தை பெரியாரின் எழுத்தையும், பேச்சையும் நிறுவனங்களுக்குள் முடக்க நினைக்கும் கி.வீரமணியைக் கண்டித்தும், பெரியாரின் அறிவுசார் சொத்துடைமையை நாட்டுடமை ஆக்க வலியுறுத்தியும், 25.8.2008 திங்கள் மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளர் வே. வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் ருக்மணி முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் இரா. மோகன், சி. விசயராகவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் காசு. நாகராசன், தா. இராசேந்திரன், கலை. இராசேந்திரன், அரிதாசு, சம்பத், சின்னு, யாழ் மணி, சபரி, கண்ணன், பழ. முருகானந்தம், இராமகிருட்டிணன், மு. பிரபா கரன், த. மணி, “தீமிதி” கதிர், சுரேசு, மணிமொழி, கணேசு, அப்பாதுரை, சரவணன் மற்றும் தமிழ் இளைஞர் பொது நல மன்றம் அ. ராசுகுமார், சாகுல், சாரணாத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 30.8.08 காலை 11 மணியளவில் பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கும் சதியை முறியடிப் போம்; பெரியார் நூல்களை தமிழக அரசே அரசுடைமை யாக்குக என்று கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் ந. அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. ஆசைத்தம்பி, சி. சாமி துரை முன்னிலை வகிக்க, வெ. அமிர்தலிங்கம், நல்லத்தம்பி, வழக்கறிஞர் ப. கண்ணன், மு.வ. நடராசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை குறித்து கருத்துரை வழங்கினர். மு.வ. செல்வராசு, செ. பிரபு, அ. முருகன், இளையராசா, விழுப்புரம் கணேசன், ச. பெரியார் வெங்கட், அல்லி முத்து, கல்லை செந்தில் உட்பட ஏராளமான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

வெளிமாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடைகழகம் நடத்திய போராட்டம் வெற்றி
தமிழகத்திலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான டன் மணல் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப் பட்டு வந்தது. தண்ணீர் கொடுக்காத மலையாளிகளுக்கு தமிழ்நாட்டு மணலைக் கொடுக்க அனுமதியோம் என்ற முழக்கத்தோடு பொள்ளாச்சி பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் 6.8.2008 அன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார்கள். அதைத் தொடர்ந்து கடந்த 22, 23 ஆகிய இரு நாள்களும் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் ‘பறி போகும் தமிழர் உரிமைகள்’ என்கிற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப் பட்டன. தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி. வேலுச்சாமி, பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் இரா. மோகன், சி. விசயராகவன், பொள் ளாச்சி நகர கழகச் செயலாளர் வே. வெள்ளிங்கிரி, வட்ட செயலாளர் காசு. நாகராசன், ஒன்றியத் துணைச் செய லாளர் சம்பத் ஆகியோர் மணல் கடத் தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவான பிரச்சாரம் செய்தனர். அதில் மணல் கடத்தலை உடனடியாக தடை செய்யாவிட்டால் அடுத்ததாக எல்லை தாண்டும் மணல் லாரி களை பெரியார் திராவிடர் கழகம் சிறை பிடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இரண்டு நாள் பிரச் சாரக் கூட்டங்களிலும் ஏராளமான பொது மக்கள், விவசாயத் தொழி லாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கழகத்தின் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த அன்றே வேலூரில் முந்நூறுக்கும் மேற்பட்ட மணல் லாரிகளை பொது மக்கள் சிறை பிடித்த செய்தியும் வெளியானது. நாடு முழுவதும் மணல் கடத்தலுக்கு எதிரான ஓர் அலை பெரியளவில் எழுந்தது.கழகப் பிரச்சாரம் நடந்து முடிந்த இரண்டாம் நாளே தமிழக அரசு வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை விதித்தது. இது கழகம் எடுத்த தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பொள்ளாச்சி, எல்லை பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

நாட்டுடைமையாக்கிட குரல் கொடுத்தோர்!
பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று இதுவரை குரல் கொடுத்த தலைவர்கள் :
1. மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்2. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்3. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு4. மதுரை ஆதினகர்த்தர்.

சென்னை சிந்தனை வட்டம்
14.9.2008 ஞாயிறு மாலை 6 மணியளவில் சென்னை தலைமை கழக அலுவலகத்தில் ‘சுயமரி யாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் மதிப்பீடு எனும் தலைப்பில் வழக்கறிஞர் சு. குமாரதேவன் உரையாற்றினார். நா. தினகரன் வர வேற்க, அன்பு தனசேகரன் நன்றி கூறினார். 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

“அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” - கி.வீரமணி

‘யுக்திகளே’ இவர்களுக்கு இலட்சியம்!


பெரியார் நினைவிடம் பெரியார் திடலுக்குள். பெரியார் அருங்காட்சியகம் (அப்படி ஒன்று இருக்கிறதா என்று எவரும் கேட்டுவிடக் கூடாது) பெரியார் திடலுக்குள். நடத்தும் மாநாடுகளும் பெரியார் திடலுக்குள். இப்படி பெரியார் திடலுக்குள் பெரியாரை முடக்கிப் போட்டவர்கள் ‘பெரியாரியலை’யும் பெரியார் திடலுக்குள்ளே முடக்கிட துடிக்கிறார்கள்.

‘குடிஅரசில்’ பெரியாரின் எழுத்து பேச்சுகளை காலவரிசைப்படி இதுவரை வெளியிட முன் வராதவர்கள் - பெரியார் திராவிடர் கழகம் - கடும் முயற்சி எடுத்து வெளிக் கொணரும்போது, “முடியாது; எங்கள் பெரியார் திடலுக்குள்ளே தான் இருக்க வேண்டும்; அது எங்களின் சொத்து; எவராவது வெளியிட்டால், 15 லட்சத்தை, இழப்பீடாக எடுத்து வை” என்கிறார்கள்.

பார்ப்பனர்களும் இப்படித்தான் ‘வேதம்’ தங்களிடமே இருக்கவேண்டும் என்று நிலைப்படுத்தி - அதை மறை பொருளாக்கினார்கள். அதன் காரணமாகவே அது ‘மறை’ என்னும் பெயர் பெற்றது. பெரியார் எழுத்தும் பேச்சும் காலவரிசைப்படி முழுமையாக வெளி வருவதைக் கண்டு இவர்கள் ஏன் பதட்டமடைகிறார்கள்? கொள்கையை முன்னெடுக்கவே பெரியார் அதற்கான செயல் யுக்திகளைப் பின்பற்றினார் என்பதற்கான அடுக்கடுக்கான சான்று கள் அந்த எழுத்துகளிலும், பேச்சு களிலும் பொதிந்து கிடப்பதுதான், இதற்குக் காரணம்.
காங்கிரசை பெரியார் ஆதரித்த போதும் சரி; எதிர்த்த போதும் சரி; நீதிக்கட்சியை ஆதரித்த போதும்; அதைக் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாக்கியபோதும்; காமராசர் ஆட்சியை ஆதரித்த போதும்; பக்தவத்சலம் ஆட்சியை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய போதும் - பெரியாரின் உறுதியான கொள்கை அடிப்படையிலான ‘செயல் யுக்திகளை’ புரிந்து கொள்ள முடியும். தனது லட்சியங்களை முன்னிறுத்தியே அவரது ஆதரவும் எதிர்ப்புகளும் இருந்திருக்கின்றன.

ஆனால் வீரமணியைப் பொறுத்தவரை ‘யுக்திகளே’ (Strategies) அவரது ஒரே லட்சியமாகிவிட்டது. அந்த ‘யுக்தி’ களுக்காகவே, அவ்வப்போது கொள்கை பரப்பலை செய்து வருகிறார்.தோழர் தியாகுவும் இதே கருத்தை, சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக் காட்டினார். வீரமணியின் லட்சியம் ‘யுக்தி’ (Strategy) தான். யுக்திக்காகவே அவரது பெரியார் கொள்கை பரப்புதல் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளைப் பட்டியலிட முடியும்.

“ஆயுள் உள்ள வரை ஆதரவாக இருப்பேன்”; “அன்பு சகோதரி ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வருமேயானால் திராவிடர் கழகம் தற்கொலைப் படையாக மாறும்” என்று “சமூக நீதி காத்த வீராங்கனைக்கு” இன்று கலைஞருக்கு பாராட்டு மழை பொழிவது போல் அன்றும் நாள்தோறும் வாழ்த்துப்பாக்களை பாடிக் கொண்டிருந்தபோது, திராவிடர் கழகத்துக்குள் கொள்கை உணர்வுள்ள இளைஞர்கள் தட்டிக் கேட்டார்கள். வீரமணி, அவர்களை எல்லாம் ‘துரோகிகள்’ பட்டியலில் சேர்த்தார். 1996 இல் பெரியார் திராவிடர் கழகம் உருவானது. கடும் நெருக்கடிக்கு உள்ளான வீரமணி, தனது ‘யுக்தி’யைப் பயன்படுத்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு திட்டங்களை தீட்டினார்.

அவசர அவசரமாக பிரச்சார நூல்களை வெளியிட் டார்கள்; புத்தக சந்தைகளை நடத்தினார்கள்; மாநாடுகள் கூட்டப்பட்டன; இவ்வளவும் ‘பெரியார் திராவிடர் கழகம்’ உருவான பிறகு தான்! அய்.அய்.டி. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் களத்தில் நின்று போராடியது. ‘ராமலீலாவை’ எதிர்த்து ‘இராவண லீலா’ நடத்தி, ராமன் படத்தை எரித்து, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஒவ்வொரு வருடமும் சிறை ஏகினார்கள். அடுக்கடுக்கான போராட்டங்களை முன்னெடுத்து, பெரியார் இயக்க மரபின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகம் பயணப்பட்டபோது, வீரமணியின் ‘விடுதலை’ முகத்தைத் திருப்பிக் கொண்டது. இவைபற்றியெல்லாம் ஒரு வரி செய்தியும் கிடையாது. கேட்டால், ‘துரோகிகள்’ நடத்தும் ‘பார்ப்பன எதிர்ப்பு’ எங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று சமூக நீதிகாத்த வீராங்கனைக்கு புகழாரம் சூட்டும் தங்களின் பார்ப்பன எதிர்ப்பே ‘அக்மார்க்’ முத்திரையுடையது என்றார்கள்.

பெரியார் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் தலைமை ஏற்ற நிலையில், பெரியார் கருத்துகளை கடவுள், மதம், பெண்ணுரிமை போன்ற தலைப்புகளில் தொகுத்து, ‘பெரியார் களஞ்சியம்’ வெளியிடும் திட்டத்தைத் தொடங் கினார். 6 தொகுதிகள் வரை வெளிவந்தன. 6வது தொகுப்பு வெளி வந்தது 1991 அக்டோபர். அப்போது ‘அம்மா’ ஆட்சிக் கட்டிலுக்கு வந்த நேரம். அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடு வதிலும், கலைஞருக்கு எதிராக அர்ச்சனைகளை நடத்து வதிலும்தான் காலம் உருண்டோடியது. யுக்தியையே லட்சிய மாக்கிக் கொண்டவர்கள், வேறு என்ன செய்வார்கள். ஆட்சி யாளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ‘யுக்திகளே’ திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளாயின.

2003 ஆம் ஆண்டு ‘பெரியார் திராவிடர் கழகம்’ பெரியாரின் ‘குடிஅரசு’ பேச்சு எழுத்துகளைத் தொகுத்து, 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை வெளியிட்டது. பெரியார் சொத்துகளையும் அறக்கட்டளை களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கி.வீரமணி, இந்தத் தொகுப்புகளை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விகள் வீரமணியை நெருக்கடிக்கு உள்ளாக்கின. அந்த நெருக்கடியிலிருந்து மீள, ஒரு ‘யுக்தி’யாக பெரியார் களஞ்சியத்தின் அடுத்த தொகுப்பை ‘சாதி-தீண்டாமை’ எனும் தலைப்பில் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

பெரியார் களஞ்சியத்தின் 6 ஆம் தொகுப்புக்குப் பிறகு 7வது தொகுப்பை வெளியிட கி.வீரமணிக்கு 13 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் எப்படி வந்தது? 2003 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ முதல் தொகுப்பை வெளியிட்ட பிறகு தான்! அதற்குப் பிறகு தான் ‘குடிஅரசு’ நூல்களை குறுந்தகடுகளாக வெளியிடும் அறிவிப்பும் வந்தது. தனது நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ‘யுக்தியாகவே’ வீரமணி செயல்பட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும். ‘சாதி தீண்டாமை’ (7வது தொகுப்பு), 2004 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும், 2005 ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் (8வது தொகுப்பு) என ஆண்டுக்கு ஒரு தொகுப்பை திராவிடர் கழகம் வெளியிட்டது. அதற்குப் பிறகு 2006 ஆம் ஆண்டில் பெரியார் திராவிடர் கழகம் 1926 ஆம் ஆண்டு ‘குடிஅரசில்’ பெரியார் பேச்சு எழுத்துக்களைத் தொகுத்து ஒரே நேரத்தில் இரு தொகுதிகளை வெளியிட்ட போது, மீண்டும் வீரமணிக்கு அதிர்ச்சி.

“இந்த துரோகிகளுக்கு வேறு வேலையே கிடையாது போலிருக்கு, நம்ம உயிரை வாங்குறானுங்க. பேசாமல், நாம ஒரு அரசியல் கட்சியை துதி பாடுவதுபோல், அவனுகளும், ஒரு அரசியல் கட்சிக்குப் பின்னாலே போக வேண்டியது தானே. இந்த ‘துரோகி’களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை” என்று மனம் புழுங்கியிருப்பார். நெருக்கடியிலிருந்து மீள - மீண்டும் - ‘சாதி-தீண்டாமை’ தொகுப்புகள் தொடர்ச்சி யாக வெளிவரத் தொடங்கின. நாமும் மகிழ்ச்சி அடைந்தோம். எப்படியோ, பெரியார் நூல்களை வெளிவரச் செய்திருக்கிறோமே என்ற மகிழ்ச்சி தான்.

பெரியார் திராவிடர் கழகம் தனது செயல்பாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடுவதில் தீவிரம் காட்டி, 1925-லிருந்து 1938 வரை 27 தொகுதிகளை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு அறிவித்தது வீரமணியால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனியும், இவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தடைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டார்.

பெரியார் கருத்துகளைப் பரப்பு வதற்கு பெரியார் பெயரில் இயக்கம் நடத்துகிறவர்களே தடுக்கிறார்களே என்று கேள்விகள் மக்கள் மன்றத்தில் வெடித்த நிலையில், பெரியார் கருத்துகளைப் பரப்பும் “துரோகிகள்”, “அநாமதேயங்கள்”, “வெளியேற்றப் பட்டவர்கள்” பட்டியல் மேலும் நீண்டு விடும் என்ற அச்சத்தில் மீண்டும் ‘யுக்தி’ யைப் பயன்படுத்தினார். அதுதான் நடந்து முடிந்துள்ள மாநாடு. தொண்டர் களை தக்க வைத்துக் கொள்ள வழக்க மாக வீரமணி நடத்தும் “யுக்தி” தான்.

“பெரியார் திராவிடர் கழகம்’ 28 தொகுதிகளை ரூ.3500-க்கு வழங்கு கிறதா? இதோ நான் 30 தொகுதிகளை ரூ.2500-க்கு தருகிறேன். ஒரு ‘பை’ இலவசம்” என்று அறிவிப்புகள் வரு கின்றன. இதுவும் நமக்கு மகிழ்ச்சி தான். பெரியார் கொள்கைகள் தீவிரமாகப் பரவும் போதுதான் மக்கள் உண்மை யான பெரியாரியலைப் புரிந்து கொள் வார்கள். சமூக மாற்றத்துக்கும் தயார் ஆவார்கள் என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. பெரியார் கொள்கை பரப்புதலை ‘யுக்திக்காகவே’ நடத்தி வரும் கி.வீரமணியின் பார்வையில் நாங்கள் “துரோகிகளாகவும்” “நீக்கப் பட்டவர்களாகவும்” இருக்கிறோம் என்பதுதான் நாங்கள் உண்மையான பெரியாரியல்வாதிகள் என்பதற்கான சான்று. ஒன்றை மட்டும் சொல்லி வைக்கிறோம். பெரியார் திராவிடர் கழகத்தை முடக்கி விட்டு, ‘யுக்திகளுக் குள்ளேயே’ காலத்தை கடத்தி விடலாம் என்று மட்டும் கனவு காண வேண் டாம். அடிக்க அடிக்க எழும் பந்து போல், பெரியார் திராவிடர் கழகம் வலுப் பெற்று, களப் பணிகளில் இறங்கும்; எங்களின் தோழர்கள் உறுதி யான கொள்கையாளர்கள்; திருவரங்கம் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது - தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியவர்கள். நன்கொடை செலுத்தி கல்லூரிகளில் படிக்க வந்த அப்பாவி மாணவர்கள் அல்ல.

பெரியாரின் ‘குடிஅரசுகள்’ வீர மணிகள் இருட்டடிக்கும் சுயமரியாதை இயக்கக் காலத்தின் உணர்வலைகளை இனி தட்டி எழுப்பப் போவது உறுதி. அப்போது ‘யுக்தி’யாளர்களும் அவரது ‘பக்தியாளர்களும்’ கல்வி நிறுவனங் களின் கணக்குகளை பார்த்துக் கொண் டிருக்க முடியாது; ‘துரோகிகள்’ என்று புலம்பிக் கொண்டிருக்க முடியாது. காலத்தின் அறை கூவலை சந்திக்க வேண்டியிருக்கும்.

- ‘இரா’


உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர தீர்ப்பு!

கோயில்களில் பெண்கள் அர்ச்சகர்களாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், பூசை உட்பட சடங்குகளில் அவர்கள் பங்கேற்பதை, பாலின அடிப்படையில் தடுக்கக் கூடாது என்றும், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பை (செப்.5, 2008) வரவேற்று பாராட்டுகிறோம். உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு, சமூக வரலாற்றில் பதியத்தக்க இத்தகைய புரட்சிகர தீர்ப்பை வழங்கியிருக்கிறார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் துர்க்கையம்மன் கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது மகள் அர்ச்சகராக பூசை செய்ய விரும்பினார். இப்படி, துணிவான ஒரு முடிவுக்கு வந்த அந்த பெண்ணின் பெயர் பின்னியக்காள் (வயது 45).

பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ள, ஆணாதிக்க-பார்ப்பன-சாதியமைப்பு சமூகம், அதை அனுமதித்து விடுமா? எதிர்ப்புகள் எழுந்தன. ஆணாதிக்க சாதி வெறியர்கள் இதைத் தடுக்க முயன்றபோது, உசிலம்பட்டி வட்டாட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு, பெண்ணுக்கு பூசாரியாகும் உரிமையில்லை என்று கூறி, ஆண் பூசாரி ஒருவரையும் தேர்வு செய்தது. உள்ளூர் சாதி ஆதிக்க பெண்ணடிமைக்கு அரசு எந்திரமும், துணை போயிருப்பது தான் வெட்கக் கேடானது. நீதிபதி தமது தீர்ப்பில் இதைத் தவறாமல் சுட்டிக் காட்டியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அரசு ஊழியரான ஒரு தாசில்தாரே பிற்போக்குசக்திகளின் மூடத்தனமான கருத்துகளுக்கு துணை போயிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டி, கண்டித்துள்ளார்.
“வணங்கப்படக்கூடிய கடவுள் - அம்மன் என்ற பெண் உருவத்தில் இருந்தும்கூட, ஒரு பெண் அர்ச்சகராக இருக்கக் கூடாது என்று கூறுவதுதான், துயரமாகும். வேத காலங்களில்கூட - பெண்கள், பூஜைகள், சடங்குகள் நடத்த அனுமதிக்கப்பட் டுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அதிர்ஷ்ட வசமாக, இந்த துர்க்கையம்மன் கோயில் ஆகம சா°திர வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை. நாட்டின் தென் பகுதியிலுள்ள உள்ளூர் கலாச்சாரங்களின் அடையாளங்களான கிராமக் கோயில்கள் ‘மனு°மிருதி’களிலிருந்து விலகியே உள்ளன’ என்று நீதிபதி சமூகப் பார்வையோடு சுட்டிக் காட்டியுள்ள கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும்.

சமூகக் கண்ணோட்டத்தில் இக்கருத்துக்களைப் பதிவு செய்த நீதிபதி, சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார். இத்தகைய உரிமைகளை பெண்களுக்கு வழங்குவதன் வழியாக மட்டுமே அரசியல் சட்டத்தின் பிரிவு 15 மற்றும் 51ய(ந) ஆகிய பிரிவுகள் செயல்பூர்வமாகிறது என்ற அர்த்தத்தைப் பெற முடியும். அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு பால் அடிப்படையில் குடிமக்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகிறது.சட்டப் பிரிவு 51ய(ந) பெண்களின் கவுரவத்தைக் குலைக்கக் கூடிய செயல்பாடுகளைக் கைவிடுதலை ஒவ்வொரு குடிமகனுக்குமான அடிப்படை கடமையாக வலியுறுத்துகிறது” என்று நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஆகமங்களுக்குள்ளும், மனுஸ்மிருதிக்குள்ளும் கோயில்கள் கொண்டு வரப்படும்போது, அங்கே அரசியல் சட்டம் வழங்கியுள்ள பெண்ணுரிமைகள் மீறப்படுவதை தீர்ப்பு சுட்டிக்காட்டியிருப்பதோடு ஆகமங்களும், மனுஸ்மிருதிகளும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவையே என்பதை, இத் தீர்ப்பு துணிவுடன் பிரகடனப்படுத்தியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பெண் அர்ச்சகராகப் பதவியைத் தொடருவதற்கு மாவட்ட ஆட்சியாளர் உரியப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்றும், நீதிபதி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.


ஆகமங்களுக்கு உட்படாத கிராம கோயில்களுக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், ஆகம கோயில்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பு கிறோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தபோதே, கழகம் இந்தக் கருத்தை சுட்டிக் காட்டியுள்ளதை குறிப்பிட விரும்புகிறோம். தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை கோயில்களில் பெண்கள் ஊழியர்களாக பணியாற்றுவதற்கே தடை விதித்திருந்தது. மாநில அரசு தேர்வாணையம் இந்து கோயில் நிர்வாகத்துக்கான ஊழியர்கள் தேர்வில் பெண்கள், விண்ணப்பிக்கக் கூடாது என்று விளம்பரம் செய்திருந்ததை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையைத் தகர்த்தது. அதற்குப் பிறகு தான் கோயில் நிர்வாகங்களில், பெண்கள், பணியாற்றும் உரிமை கிடைத்தது. இப்போது, நீதிபதி கே. சந்துரு வழங்கியுள்ள தீர்ப்பு ஆகமக் கோயில்களுக்கும் விரிவாகும் போதுதான் பெண்கள் மீது மதம் விதித்து வரும் தடைகளைத் தகர்க்க முடியும். ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்ற உரிமை கோரிக்கை ஆண்களுக்கானதாக மட்டுமே நின்று விட்டால், அது முழுமையான உரிமைக்கான கோரிக்கையாகவும் இருக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

ஏன் இந்த அவலமோ!

பெரியார் திராவிடர் கழகம் 27 “குடிஅரசு” தொகுப்புகளை வெளியிடுவதை ‘விடுதலை’யில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் (ஆகஸ்டு 24) இவ்வாறு குறை கூறி இருந்தார்.“ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும். சாதாரண மக்களுக்குச் சென்றடையாது.”இப்படி எழுதி இரு வாரங்கள் மட்டுமே ஓடின. செப்டம்பர் 7 ஆம் தேதி விடுதலையில் இப்படி ஒரு விளம்பரம்:

“பெரியார் களஞ்சியம் வாங்குவோருக்கு அழகிய பை அன்பளிப்பு. 31 தொகுதிகள் 10,000-க்கும் அதிகமான பக்கங்கள். ரூ.2500 மட்டுமே!” போச்சுடா! ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் வெளியிடுவதால் யாருக்குப் பயன்? என்று எழுதியவர்கள், இப்போது, முகத்தில் கரி பூசிக் கொள்ள வேண்டியதுதான். வீரமணியை நம்பி, அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் விரிவுரைகள் தரத் தொடங்கினால், இப்படிப்பட்ட விபத்துகளைத் தான் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை எழுத்தாளர்கள் புரிந்து கொள்வது நல்லது. இனி, அடுத்து என்ன?


“வாராது வந்த மாமணியாய் - தந்தை பெரியாருக்குக் கிடைத்த - அந்தத் தமிழர் தலைவர்தான் ஒரே மூச்சில், 10000க்கும் மேற்பட்ட பக்கங்களில் 31 தொகுதிகளை அச்சிட்டு, அகிலத்துக்கும் பரப்பி, அதுவும் அடக்கவிலை ரூ.2500-க்கே வழங்கி சாதனை படைக்கிறார் என்பதால், துரோகிகள் வயிறு எரிகிறார்கள்” என்று அடுத்த கட்டுரையில் இவரே எழுத வேண்டியிருக்கும். எனவே வீரமணியின் விரிவுரையாளர்கள் அவரை நம்பி, வாதங்களை முன் வைக்காதிருப்பதே சாலச் சிறந்தது! இல்லையேல் இந்த அவலம் தான்!

மயிலாடுதுறையில் தொடர் பிரச்சார எழுச்சி

மயிலாடுதுறை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு - பகுத்தறிவு விளக்க தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் ஆகஸ்டு 18, 19, 20 ஆகிய நாட்கள் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

எழுச்சியாக நடைபெற்ற தொடர் பிரச் சாரக் கூட்டங்கள் அனைத்திற்கும் பெரியார் தி.க. மாவட்ட துணைத் தலைவர் இரசீத்கான் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நா. இளையராசா, மாவட்ட செயலாளர் தெ. மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கூட்டங்களிலும் முதல் நிகழ்ச்சி யாக ஏகலைவன் அன்பு இன எழுச்சிப் பாடல்கள் பாடினார். பின்பு சிற்பி இராசன், ‘மந்திரமல்ல தந்திரமே’ எனும் பகுத்தறிவு விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். இதனை அடுத்து பெரியார் தி.க. தலைமை கழக பேச்சாளர் நங்கவள்ளி அன்பு எழுச்சியுரை யாற்றினார்.

18.8.08 அன்று மாலை 4 மணிக்கு கொற்கை என்ற கிராமத்தில் பிரச்சாரக் கூட்டம் தொடங்கியது. பின்பு மாலை 6 மணிக்கு ஆனதாண்டவபுரத்தில் எழுச்சியாக நடைபெற்றது. அப்பகுதி தோழர்களான வினோத், ஸ்ரீதர், பகலவன் ஆகியோர் காலை முதல் பெரியார் இன எழுச்சிப் பாடல்களை ஒலிக்கச் செய்தனர். பின்பு கூட்டத்தின் இறுதியில் கழக கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகே இரவு 8 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 10 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியை பெரும் திரளான மக்கள் கண்டு களித்து வரவேற்றனர்.


19.8.08 அன்று மாலை 4 மணிக்கு மங்கை நல்லூர் கடைவீதியில் பிரச்சார கூட்டம் துவங்கி 6 மணி அளவில் எலந்தங்குடி பகுதி யில் கழக கொடியேற்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோடங் குடி கிராம பகுதியில் பிரச்சாரக் கூட்டம் தொடங்கி 10 மணியளவில் முடிவடைந்தது. இறுதி நாள் நிகழ்ச்சியாக 20.8.08 அன்று மாலை குத்தாலம் கடைவீதியில் 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கண்டு களித்தனர். பின்னர் 6.30 மணி அளவில் மாப்படுகை கிராம பகுதியில் பிரச்சாரம் துவங்கி 8 மணி வரை நடந்தது. இறுதியாக ரயிலடி கடைவிதியில் 8.30 மணியளவில் துவங்கி 10 மணி வரை நடைபெற்றது.
மூன்று நாள் நிகழ்ச்சியிலும் புதிய பகுதி களில் கழகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. தொடர் பிரச்சாரத்தின் மூலமாக பெரியார் திராவிடர் கழகத்தின் செயல் பாட்டினை நங்கவள்ளி அன்பு சிறப்பாக விளக்கினார். மூடநம்பிக்கைகளை தோலு ரிக்கும் நிகழ்ச்சிகளை சிற்பி ராசன் விளக்கி செய்து காட்டினார். கழகத் தோழர்கள் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் இருசக்கர வாகனங்களில் முழக்கங்களோடும் கொடி களை ஏந்தி வந்தது எழுச்சியாக இருந்தது.மூன்று நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்ற தோழர்கள்: நகர செயலாளர் ஏகலைவன் அன்பு, நகர தலைவர் நாஞ்சில் சங்கர், நகர துணை தலைவர் ராஜா, நகர துணைச் செயலாளர் முகிலன், முத்தழகன், உதயகுமார், விஜி, ஒன்றியத் தலைவர் உ. ஜீவா, ஒன்றிய செயலாளர் இயற்கை, சந்துரு, வினோத், பகலவன், ஸ்ரீதர், ராஜா, பொன்னுதுரை, முரளி, சதீஷ் மற்றும் தோழர்கள் மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

பெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து! - தோழர் தியாகு முழக்கம்

பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியார் அறிவுக் களஞ்சியம் தமிழர்களின் சொத்து என்று குறிப்பிட்ட தோழர் தியாகு, ‘குடிஅரசு’ கால வரிசைத் தொகுப்பு காலத்தின் தேவை என்று வலியுறுத்தினார்.வீரமணியைக் கண்டித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக் கோரியும், 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுப் செயலாளர் தோழர் தியாக ஆற்றிய உரை:

தந்தை பெரியார் வாழ்க்கை முழுவதிலும் எதிர்ப்பு களைச் சந்தித்து வந்தவர். எதிர்ப்புக் கண்டு அஞ்சாதவர். எப்போதும் பெரியாருடைய பாதை சரளமானதாக, தடையற்றதாக இருந்ததில்லை. அதற்கு பொருத்த மாகவே இப்போது பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி ‘குடிஅரசு’ தொகுப்புகளாக வெளியிடும் முயற்சிக்கும் தடைபோட துடிக்கிறார்கள். பெரியாருடைய கூட்டங்களுக்கும், உரை வீச்சுகளுக்கும், பார்ப்பனர்கள், சனாதனிகள், ஆட்சியாளர்கள் தடை போட்டார்கள். இப்போது பெரியாருடைய நூல்களை வெளியிடுவதைத் தடுப்பது வரலாற்றில் மிகப் பெரும் பின்னடைவு. இது பெரியார் திடலிலிருந்தே வந்திருக் கிறது என்பதுதான் வேதனை. பெரியாரின் நூல்கள் வெளி வரப்போகிற செய்தி தமிழ் நாடெங்கும் தெரிய வேண்டும். அக்கரையுள்ள எல்லோருக்கும் தெரிய வேண்டும்.
பெரியார் திராவிடர் கழகம் செய்திருக்கிற பரப்புரை, விளம்பரம் போதுமானதல்ல என்று கருதியோ என்னவோ இந்தச் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு நேரடி உதவி செய்திருக்கிறார் வீரமணி. அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். (கைதட்டல்)எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர் கூறியிருக்கிற காரணங்கள் என்ன? முதலாவதாக இவைகளுக்கெல்லாம் அறிவுசார் காப்புரிமையை கோருகிறார். இது மிகவும் வேடிக்கையானது. சட்டம் என்ன சொன்னாலும் அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். தோழர் கொளத்தூர் மணி ‘நல்லது சந்திப்போம்’ என மிகப் பொருத்தமாக பதிலளித்து இருக்கிறார்.

நாம் சொல்ல விரும்புவதெல்லாம் பைபிள் என்கிற புதிய நூலுக்கு அறிவு காப்புரிமை கோரவில்லை. போப் பாண்டவர் பார்த்துத்தான் பைபிள் வெளியிட வேண்டுமென்றால் உலகத்தில் இத்தனை மொழிகளில் பைபிள் வெளி வந்திருக்காது. தமிழிலேயே எத்தனை மொழிப் பெயர்ப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? இவைகளை எல்லாம் போப் ஆண்டவர் அங்கிகரிக்க வேண்டும் என்றால் பைபிள் உலகிலே பரவியிருக்காது.
மார்க்சின் ‘மூலதனம்’ தொகுப்பு அவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு தொகுதிதான் வெளிவந்தது. ஆங்கிலத்தில் அதை ஏங்கல்சு மொழி பெயர்த்து வெளியிட்டார். மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில், மார்க்சும், ஏங்கல்சும் மறைந்த பிறகு தான் மற்ற தொகுப்புகளும், தொகுதிகளும் வந்தன. மாஸ்கோவிலிருந்து மூலதன நூலின் மொழி பெயர்ப்புகள் வெளி வந்திருக்கின்றன. அந்த மொழி பெயர்ப்புகளில் நிறைய தடைகள், இடையூறுகள் இருப்பதாகக் கருதி வேறு மொழிப் பெயர்ப்புகள் இருக்கின்றனவா எனத் தேடினோம். ‘பென்குயின்’ என்ற முதலாளித்துவ வெளியீட்டு நிறுவனம், மிகப் பெரிய பொருளியல் வாதியான மார்க்சின் ‘மூலதனம்’ முழுமையும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அதை வைத்துத் தான் நாங்கள் தமிழில் மொழி பெயர்த்து மூலதனம் முழுவதையும் சீர் செய்தோம். இப்படி மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர்களுடைய நூல்கள் எல்லாம் உலகில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக் கின்றன. முறையாக தொகுத்தும், வகுத்தும், பகுத்தும் பதிப்பித்து வெளியிட்டிருக் கிறார்கள் அழகிய அச்சு வடிவிலே. இதற்கெல்லாம் அன்றைக்கு சோவியத் அரசோ, மற்றவர்களோ தடை போட்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்குமான உறவு பிரிந்ததற்கு பிறகு எழுதின நூல்களையெல்லாம் சீனாவிலிருந்து புதி தாக மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்கள். இதற்கு யாரும் அறிவு சார் காப் புரிமை கோரவில்லை.
நம்மைப் பொருத்தவரை தந்தை பெரியார் தமிழ்நாட்டினுடைய லெனினாக, தமிழ் நாட்டினுடைய தேசிய தந்தையாக நாம் மதிக்கிறோம். இந்தியாவிற்கு எப்படி காந்தியை முக்கியமாகக் கருதுகிறார்களோ, அதுபோல் தமிழ்நாட்டிற்கு தந்தை பெரியார் தான். பெரியார் தமிழ்நாட்டின் சொத்து. பெரியாருடைய அறிவுக் களஞ்சியம் என்பது நம்முடைய சொத்து. அவர்கள் ஒரு திடலை, ஒரு கட்டிடத்தை ஒரு சிலையை சொந்தமாக வைத்துக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை.

பவுத்தம் என்பது போருக்கெதிரான - சிந்தனைதான். ஆனால் சிங்கள பவுத்தவாதிகள் தமிழர்களுக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். அவர்களிடம் என்ன யிருக்கிறது என்றால், புத்தருடைய பல் இருக்கிறது. ஒரு இடத்திலே புத் தருடைய முடியை வைத்திருக்கிறார்கள். ஆனால் பவுத்தம் அவர்களிடம் காணாமல் போய் விட்டது. அந்த பவுத்தத்தை பெரியாரும், அம்பேத்கரும் தான் இந்த நாட்டுக்குரிய, மக்களுக்குரிய கருத்துகளாக வழங்கினார்கள்.புத்தருடைய பல்லையும், முடியையும் வைத்துக் கொண்டு - பவுத்தர்களாக உரிமை கோரும் சிங்களர் - பவுத்தத்தின் சிந்தனைக்கு எதிராக போர் வெறி பிடித்து அலைகிறார்கள். இங்கே பெரியாருடைய உடைமைகளை வைத்திருப்போர் - பெரியார் நூல்களை வெளியிட தடை கோருகிறார்கள். அம்பேத்கருடைய நூல்களை மராட்டிய அரசு ஆங்கிலத்திலே வெளியிட்டது மட்டுமல்ல, தமிழிலேயும் அரசு துணையோடு வெளியிட்டது. நானும் ஒரு சில தொகுதிகளை மொழி பெயர்த்து கொடுத்திருக்கிறேன். இப்படி நூல்கள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது.தந்தை பெரியாருடைய கருத்துகளுக்கு அவருடைய சொற்களில், அவருடைய பதப் பிரயோகத்தில் கால வரிசைப்படியான சிந்தனையில் தான் பணி மலர்ச்சியை புரிந்து கொள்ள முடியும். அப்படி வெளியிடப்படாத ஒரு பிழை இருக்கிறது. அந்த வரலாற்றுப் பிழையை நிறைவு செய்கிற முயற்சியை பெரியார் திடலே செய்திருக்கு மானால் நாம் மெத்த மகிழ்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்யத் தவறியிருக்கிற நிலையிலேதான் அவர்கள் அறிக்கையிலே கூறியிருப்பதைப் போல பல ஆண்டுகளுக்கு முன்பு இவற்றையெல்லாம் முறைப்படி எழுதி ஒப்படைத்தும்கூட அவற்றை வெளியிட முயற்சி செய்யாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம் அரும்பாடுபட்டு ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளிக் கொண்டு வர முயல்கிறது. தந்தை பெரியாருடைய தமிழ்நாடு தமிழருக்கே என்பதை உயிர் முழக்கமாக கொண்டிருக்கிற எங்களது ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்’ இதற்காக நன்றிப் பாராட்டுகிறது. ஒவ்வொரு தமிழனும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். வீரமணி அவர்களும் நன்றி சொல்லியிருந்தால் கண்ணியமான, மரியாதையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வீரமணி கண்டுக் கொள்ளாமலாவது இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அவர் விளம்பரம் கொடுக்கிறார். இவைகளை எல்லாம் தடை செய்வேன், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். இது தேவையில்லாத வேலை.நாங்கள் பெரியார் நூல்களை வெளியிடவில்லையா என்று வீரமணி கேட்கிறார். நீங்கள் எதையுமே வெளியிடவில்லை என்பதல்ல எங்கள் வாதம். நீங்கள் சுவரொட்டி அடித்து விளம்பரபடுத்தித் தான் நீங்கள் வெளியிட்டிருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. தந்தை பெரியார் காலத்திலேயே அவருடைய எழுத்துக்கள் வெளிவந்தன. எத்தனையோ கூட்டங்களில் பெரியாரே புத்தகங்களையெல்லாம் வண்டிகளில் எடுத்துக் கொண்டு வந்து விற்றுவிட்டு வா என்று சொல்லுவார். திரும்ப வண்டியிலே ஏறுகிற பொழுது எவ்வளவு புத்தகங்கள் விற்றன என்று கேட்பார். முப்பது புத்தகம் விற்றது என்றால், ஆகா முப்பது பேர் படிப்பார்கள் அல்லவா என்று பெரியார் மகிழ்ச்சி யடைவார். அப்படித்தான் தன்னுடைய சிந்தனைகளை பரப்புவதற்கு எளிய முயற்சிகளை செய்தார். பெரியார் காலத்தில் சின்ன சின்ன புத்தகங்கள் வெளி வந்தன. அவைகளை தொகுத்து வெளியிடுகிறபோது தான் பெரியாருடைய சிந்தனை பனி மலர்ச்சியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
நாம் ஒரு செய்தியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர்கள், மார்க்சிய வாதிகள், அறிவாளிகள் என்று பிறப்பிலேயே எவனும் பிறப்பதாக நாம் நம்புவதில்லை. பிறந்த பிறகுதான் அறிவு வருகிறது. அதுவும் படிப்படியாகத்தான் வருகிறது. மரத்தடியிலே உட்கார்ந்தால் ஞானம் வந்து விடும் என நாம் நம்புவதில்லை. இது எல்லோருக்கும் பொருந்துகிற செய்தி. பெரியாருடைய சிந்தனை வளர்ச்சி என்பது நமக்குத் தேவையானது. அது எப்போது கிடைக்கும் என்றால், பெரியாருடைய எழுத்துக்கள் கால வரிசைப்படி முழுமையாக எதையும் நீக்காமல், திருத்தாமல், மறைக்காமல் வெளியிடபடுகிறபோது மட்டுந்தான் கிடைக்கும். அப்படித் தான் ஆய்வாளர்கள் எதிர்ப் பார்ப்பார்கள். தங்களைத் தவிர, மற்றவர்கள் பெரியார் நூல்களை வெளியிட்டால் கருத்துகள் சிதைக்கப்பட்டு விடும் என்று கூறுகிறார்கள்.
பெரியார் எழுதியதை ஒன்றை வைத்துக் கொள்ளலாம். இன்னொன்றை நீக்கி விடலாம், ஒரு சொல்லை விட்டு விடலாம், இன்னொரு சொல்லை சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்குப் பெயர்தான் திரிபுவாதம், புரட்டல் வேலை. இந்த புரட்டல் வாதம், திரிபுவேலை கூடாது என்பதால்தான் உள்ளது உள்ளபடியே தொகுத்து வெளியிடுகிற முயற்சியை, கடினமான பணியை பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் கேட்கிறேன், வீரமணி சொல்வது போல இப்படியெல்லாம் வெளியிட்டால் தவறாகப் பயன் படுத்தி விடுவார்கள் என்று கூறுகிறாரே; பெரியாரை யார் தவறாகப் பயன்படுத்த முடியும். அதனுடைய எழுத்துக்களை திருத்தி விடுவார்கள், பதிப்பிக்கிறோம் என்ற பெயரில் மாற்றி விடுவார்கள் என்கிறார் வீரமணி. அப்படி இருந்தால் நீங்கள் அம்பலப்படுத்துங்கள். உங்கள் கையிலுள்ள ஏட்டில் எழுதலாம். பாருங்கள் பெரியார் எழுதியது ஒன்று, அவர்கள் வேறொன்றை காட்டுகிறார்கள் என்று. மார்க்சு அவர்கள் தன்னை மார்க்சியவாதியாக அறிவித்துக் கொள்வதற்கு முன்னால் நிறைய எழுதிக் குவித்தார். கையெழுத்துப் படிகளாகவே அவையெல் லாம் இருந்தன. அதற்குப் பெயரே ( Early Manuscripts ) அதாவது, தொடக்கக்கால கையெழுத்துச் சுவடிகள். இன்றைக்கு பல ஆய்வாளர்கள் பிற்காலத்தில் மார்க்சி யத்தோடு முரண்பட்டவர்கள் எல்லாம் உண்மையான மார்க்சியமே அந்தக் கையெழுத்துச் சுவடிகளில் தான் இருக்கின்றது. அவற்றை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படி பெரியாரைப் பற்றி எத்தனைக் கருத்துக்கள் வேண்டுமானாலும் வரட்டும், முட்டி மோதட்டும், இதுதான் பெரியாரியல் வாதம், விவாதம் அரங்கேறட்டும். அதற்கெல்லாம் அடிப்படையாக பெரியாருடைய படைப்புகள் அவருடைய எழுத்தில், மொழியில், சொல்லில், காலவரிசைப்படி வரவேண்டும்.
வீரமணி அவர்களே! நீங்கள் ஏற்கனவே வெளியிட் டிருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்டிருப்பதாலேயே மற்றவர்கள் வெளியிடக் கூடாது என்பதில்லை. நீங்கள் வெளியிடாதவற்றையும் வெளியிடலாம். நீங்கள் வெளியிட்டவற்றையும் மீண்டும் வெளியிடலாம். அய்யா ஆனைமுத்து அவர்கள் பல நூல்களை கொண்டு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல ‘பெரியார் சிந்தனைகள்’ என்று மூன்று பெரிய தொகுப்பையும் கொண்டு வந்தார். அதற்கும் ‘குடிஅரசு’ தொகுப்பிற்கும் வேறுபாடு உண்டு. அது பொருள் குறித்த வரிசையிலே கொண்டு வரப்பட்டது. ஆனால், ‘குடிஅரசு’ கால வரிசைப்படி வருகிறது. இதில் எல்லா வகையான சிந்தனைகளும் இருக்கும். அப்படிப்பட்ட நல்ல நூல் வருவது இன்றியமையாதது.பெரியார் ஒரு காலத்திலே சொன்னதற்கும், இன்னொரு காலத்திலே சொன்னதற்கும் முரண்பாடுகள் இருக்குமோ என்றெல்லாம் வீரமணி கவலைப்படு கின்றார். எங்களுக்கோ இன்றைக்கு கலைஞர் அவர்களைப் பற்றி வீரமணி எழுதி கொண்டிருப் பனவற்றையும், பேசிக் கொண்டிருப்பனவற்றையும், அன்றைக்கு ஜெயலலிதாவைப் பற்றி எழுதிக் கொண் டிருந்தவற்றையும் பேசிக் கொண்டிருந்தனவற்றையும் ஒரே தொகுதியாக நாங்கள் வெளியிட்டால் (சிரிப்பு, கைதட்டல்) முரண்பாடுகள் தெரியும். அதை நாமே கூட அவருக்காக வெளியிடலாம். (கைதட்டல்)

வீரமணி அவர்களை கேட்க விரும்புகிறேன், பெரியாரைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் பெரியார் காசிக்குப் போன நிகழ்ச்சி காட்டினீர்கள். எந்த அளவுக்கு நீங்கள் காட்டினீர்கள் என்றால் நமக்கு பெரிதும் வேதனையாக இருந்தது. சாதாரணமாக ஒரு குறியீட்டின் மூலமாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு செய்தி. எச்சில் இலையை பெரியார் வழித்துச் சாப்பிடு வதாக காட்டினீர்கள். நீங்கள் காட்டாமல் விட்டது 1938 ஆம் ஆண்டு மொழிப் போர் நிறைவடைகிற பொழுது சென்னைக் கடற்கரையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டாரே அதை நீங்கள் அடியோடு மறைத்து விட்டீர்கள். ஏன்? எச்சில் இலையை வழித்து சாப்பிடுகிற மாதிரி காட்டும் அளவுக்கு கலையதார்த்த உணர்வு இருக்கிறது. ஆனால் பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியதை நீங்கள் காட்ட மாட்டீர்கள். ‘குடிஅரசு’ தொகுதிகள் எல்லாம் வெளி வருமானால் பெரியார் கொள்கை எதுவென்று தெரிந்து விடும்.

வீரமணிக்கு கொள்கை கிடையாது. யுக்தி மட்டுந்தான் உண்டு. அந்த யுக்தியால் மட்டுமே தான் பெரியாரைப் பார்க்கிறார். தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொன்னதெல்லாம் கொள்கை யல்ல, யுக்தி என்று வீரமணி அவர்கள் விடுதலை இராசேந்திரனுக்கும், எஸ்.வி. இராசதுரைக்கும் பதில் சொன்னதை நான் மறக்கவில்லை. அது யுக்தியா கொள்கையா என்பதை பெரியார் எழுத்திலேயே படித்து தெரிந்து கொள்கிற வாய்ப்பு பெரி யாருடைய ‘குடிஅரசு நூல்கள் வெளி வருகிறபோது நமக்கு கிடைக்கும்.
உருவமில்லாத பொம்மையல்ல பெரியார். உயிருள்ள பெரியாரின் கொள்கைகள் நமக்கு இன்றியமையாதது என்றால், பெரியாரின் சிந்தனைக் களஞ்சியம் நூல்களாக வெளிவரும் எல்லாத் தடைகளையும் உடைத்துக் கொண்டு ‘குடிஅரசு’ தொகுப்பு வெளி வரும் என்பது உறுதி.
தமிழக அரசு வீரமணியை காப்பாற்று வதற்காகவாவது (கைதட்டல்) பெரியார் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். எங்களுக் காகக் கூட அல்ல. இத்தனையும் மீறி குடிஅரசு நூல்கள் வெளியிடுகிறபொழுது வீரமணி என்ன செய்வார் பாவம். அந்த ஒரு காரணத்திற்காகவாவது இந்த நேரத்தில் உங்கள் நண்பர் வீரமணியைக் காப்பாற்றுங்கள். அவருக்கான நன்றிக் கடனை செலுத்துங்கள்.
செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளில் பெரியார் நூல்கள் அரசுடையாக்கப் பட்டன என்ற அறிவிப்பு வரட்டும்.
பெரியார் வழியில் சமத்துவபுரம் கண்டவர், பெரியாருக்காக நீங்கள் நிறைய செய்திருக்கலாம். ஒன்றை நீங்கள் மறந்து விடக் கூடாது. பெரியார் தன் வாழ்நாளில் தனி மனிதருக்கு சிலை வைக்க சொன்னார் என்றால் அது கலைஞருக்கு மட்டுந்தான். இன்றைக்கு நீங்கள் பெரியாருக்கு சிலை கூட வைக்க வேண்டாம். பெரியாரின் நூல்களை நிரந்தரமாக வரலாற்றிலே பதியச் செய்யுங்கள். வருங்கால தலை முறைக்கு படிக்கக் கொடுங்கள். ஆய்வாளர்கள் அதைப் படித்து தமிழ் சமூகத்திற்கு வழிகாட்டட்டும்.

பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குக!

பெரியார் நூல்களை நாட்டுடைமை யாக்க வலியுறுத்தியும், வீரமணியை கண்டித்தும் நாகை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலகம் முன் பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க. நாகை மாவட்டத் தலைவர் இரா. பரசு ராமன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நா. இளையராசா, மாவட்ட செயலாளர் தெ. மகேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் தி.க. மாவட்ட துணைத் தலைவர் இரசித்கான் கண்டன உரை யாற்றினார். தொடர்ச்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளர் மா. ஈழவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அமைப்பாளர் தங்க. அய்யா சாமி, புரட்சி கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்டச் செயலாளர் அன்பு ராசப்பா, தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் இரா. முரளிதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக மயிலாடுதுறை நகரச் செயலாளர் ஏகலைவன் அன்பு நன்றி கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர், நகரத் துணைச் செயலாளர் முகிலன், சீர்காழி நகரச் செயலாளர் பெரியார் செல்வம், மயிலாடுதுறை நகரத் துணைத் தலைவர் ராஜா, குத்தாலம் ஒன்றியத் தலைவர் செ. இயற்கை, ஒன்றியச் செலயாளர் உ.ஜீவா, இளைஞரணி அமைப்பாளர் முத்தழகன், மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர் முரளீதரன், பொன்னு துரை மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழர் உரிமை இயக்கத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சென்னையில் அண்ணா நூற்றாண்டு விழா பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்கள்
சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாக்கள் நகர் முழுதும் பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்களாக நடத்தப்பட்டன. ஆகஸ்ட் 25 முதல் 28 வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்த கூட்டங்களில் சிற்பி. ராசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார்.
ஆக. 25 ஆம் தேதி திருவல்லிக்கேணி வி.ஆர். பிள்ளை வீதியில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் அண்ணாவின் சமுதாய - பகுத்தறிவு கருத்துகளை விளக்கி உரையாற்றினர். ம. தம்பிதுரை தலைமை தாங்கினார். பா. பாபு நன்றி கூறினார். ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.
ஆக. 26 அன்று மயிலை விசாலாட்சி தோட்டத்தில் க. சுகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர் குமாரதேவன், ஈ.பி.இளங்கோ, சிறப்புரையைத் தொடர்ந்து சிற்பி ராசன் நிகழ்ச்சி நடந்தது. தி. இராவணன் நன்றி கூறினார்.
ஆக. 27 இல் இராயப்பேட்டை நடேசன் சாலையில் நடந்த கூட்டத்துக்கு ஆ. பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர் குமாரதேவன் சிறப்புரையாற்றினார். செந்தில் நன்றி கூறினார்.
ஆக. 28 இல் இராயப்பேட்டை மாவடி வினாயகன் கோயில் தெருவில் தோழர் ரமேசு தலைமையில் வழக்கறிஞர் குமாரதேவன், ஈ.பி.இளங்கோவன், டிங்கர்குமரன் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, சிற்பி. ராசன் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.

கோவையில் குறும்படங்கள் திரையிடப்பட்டன

கோவையில் பெரி யார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்க குழு சார்பில் 15.8.2008 அன்று குறும்படங்கள் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கியும், யாழ் நூலகம் எரிக்கப்பட்டது குறித்தும் எடுக்கப்பட்ட எரியும் நினைவுகள், வதை, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் சிறுகதையான உடைப்பு, பெண்ணடிமையை விளக்கும் மறை பொருள்ஆகிய
4 குறும்படங்கள் திரையிடப்பட்டன. திரையிடுவதற்கான எல்.சி.டி. கருவியை கிளாடிசு இலவசமாக வழங்கினார். 100க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பயிலரங்க குழு சார்பில் மாநகர பொருளாளர் மணிமாறன், மாநகர தலைவர் ம.ரே. இராசக்குமார், தமிழ்நாடு மாணவர் கழக ச. மணிகண்டன், கதிரவன், காளிமுத்து, சாஜித் உட்பட பலர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.

பெரியாரியல் பயிலரங்கம்
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத் தில் 17.8.2008 ஞாயிறு மாலை பெரியாரியல் பயிலரங்கம், பயிலரங்க குழு சார்பில் நடந்தது. “வன்கொடுமை தடுப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வழக்கறிஞர் சு. குமாரதேவன் சிறப்பான உரை நிகழ்த்தினார். இ.மு.சாஜித் வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி தலைமை தாங்கினார். கலந்து கொண்ட தோழர்கள் உரையின் முடிவில் பல சந்தேகங்களை கேட்டனர். அனைத்திற்கும் வழக்கறிஞர் சு. குமாரதேவன் தெளிவாக விளக்கம் அளித்தார். பல புதிய தோழர்கள் பங்கேற்றனர். முடிவில் ச. மணிகண்டன் நன்றி கூறினார்.

மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்! அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு

நாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எ°., அய்.பி.எ°. போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வு களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம்.

அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் - இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப் படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தை யும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. (பார்க்க - தலையங்கம் - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மார்ச் 27)இந்த நிலையில் மத்திய தேர்வாணையத்தின் அதிர்ச்சியான பார்ப்பன மோசடிகள் மேலும் வெளிவந்துள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் - அதிகார வலிமை கொண்டது என்றும், தங்களது செயல் பாடுகளை எவரும் கேள்வி கேட்க முடியாது என்றும் ‘பூணுலை’ இழுத்து விட்டுக் கொண்டிருந்த இந்த ஆணையத்தின் ‘சிண்டை’ இப்போது நாடாளுமன்ற நிலைக்குழு (31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது), அழுத்தமாகப் பிடித்து உலுக்கத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக் குழுத் தலைவர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன்.

வேலைவாய்ப்பு, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகங்களுக்கான இந்த நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய தேர் வாணையத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து, விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஆணையத்தின் பார்ப்பன மோசடிகள் தொடராமல் இருக்க, சில புரட்சிகரமான சீர்திருத்தங்களையும், நாடாளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அய்.ஏ.எ°. தேர்வுகளுக்கு முதலில் தொடக்க நிலை தேர்வு எழுதி, அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் முதன்மை தேர்வு எழுத முடியும். தொடக்க நிலை தேர்வின் முடிவுகள் வெளிவர ஆறுமாத காலத்தை தேர்வாணையம் எடுத்துக் கொள்கிறது. தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் போகிறவர்கள் இந்த 6 மாத காலத்தில் அடுத்த கட்ட பயிற்சிக்குப் போக முடிவதில்லை. தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு முற்றுப் புள்ளி வைத்து, கம்ப்யூட்டரின் ‘ஆன்லைன்’ முறையில் மாணவர்கள் தொடக்க நிலை தேர்வு எழுதலாம். ஒரு சில வாரங்களிலே முடிவு தெரிந்துவிடும் என்ற பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன் வைத்துள்ளது. இதன் மூலம் தேர்வாணையத்தின் தில்லுமுல்லுகளுக்கு கடிவாளம் போடப்படும். மத்திய தேர்வாணையம் வெளிப்படையாக செயல்படுவ தில்லை. தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண், நேர்முகப் பேட்டிக்குப் பிறகு அவர்கள் பெறும் ‘கட்-ஆப்’ மதிப்பெண் ஆகிய விவரங்களை தேர்வாணையம் தெரிவிக்க மறுத்து வருவது ஏன்? இதில் என்ன ரகசியம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார், சுதர்சன நாச்சியப்பன்.

அதே போல் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், தேர்வுக்குரிய பாடங்கள் - எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகிறது? இதற்கான அளவுகோல் என்ன என்பதும் ‘மர்மமாக’வே உள்ளது.2006 ஆம் ஆண்டு சிவில் சர்வீ° தேர்வு எழுதிய மாணவர்கள், தொடக்க நிலை தேர்வில் தங்களுக்கான மதிப்பெண் விவரத்தைக் கேட்டபோது, ஆணையம் தகவல் தர மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் ‘உண்மை வேண்டுவோர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, தேர் வாணையத்தின் பார்ப்பன அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தங்களின் தொடக்க தேர்வு மதிப்பெண், ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்கு மாறு தேர்வாணையத் திடம் மனு செய்தனர். ஆணையம், தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு மனு செய்தனர். உடனே மத்திய தகவல் ஆணையம் (ஊநவேசயட ஐகேடிசஅயவiடிn ஊடிஅஅளைளiடிn) - மூன்று வாரத்துக்குள் மாணவர் களுக்கு தொடக்க தேர்வு மதிப்பெண் மற்றும் ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்குமாறு தேர்வாணயத்திற்கு 13.11.2006 இல் பணித்தது. தாங்கள் பின்பற்றும் தேர்வு முறை விஞ்ஞான பூர்வமானது என்றும், அந்த ரகசி யத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய தேர்வாணையம் பதில்தர, அதை ஏற்க மத்திய தகவல் ஆணையம் மறுத்து விட்டது.

உடனே தேர்வாணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில், மாணவர் கள் பெறும் மதிப்பெண்கள் ரகசியத்தை வெளியிட்டு விட்டால், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அதை முறைகேடாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால், மதிப்பெண்ணை வெளியிட முடியாது. எனவே மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தேர்வாணையம் வழக்கு தொடர்ந்தது.தேர்வாணையத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.அகமது நிரா கரித்து, ஏப்.17, 2007 இல் தீர்ப்பளித்தார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உடனே வெளியிடுவதோடு, மாதிரி விடைத்தாளையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போதும் தேர் வாணையம் விடவில்லை. மே 3, 2007 இல் வழக்கை மேல் முறையீடு செய்து, ஒவ்வொருவரும் பெறும் மதிப் பெண்ணையும், ‘கட்-ஆப்’ மதிப் பெண்ணையும் வெளியிட்டு விட்டால், ஆணையத்தின் ரகசியமான தேர்வு முறை மிக மோசமாக பாதித்துவிடும், கடுமையான விளைவுகளை உருவாக்கி விடும்” என்று மேல் முறையீட்டு மனு வில் கூறியது. டெல்லி உயர்நீதிமன்றத் தில் - நீதிபதிகள் எம்.கே.சர்மா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது மே 22, 2007 இல் - நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதித்ததோடு, தேர்வாணையம் தன்னிடமுள்ள இது தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் போட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டனர். மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு - அது முதல் கிடப்பில் உள்ளது. மத்திய தேர் வாணையமும் மதிப்பெண்களை வெளி யிடாமல் இருந்து வருகிறது.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமல்ல, மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகமே, இதை பற்றிய தகவலைக் கேட்டபோதும், தேர்வாணையம் தகவல் தர மறுத்து வந்திருக்கிறது.

தேர் வாணையம் நடத்தும் நேர்முகத் தேர் வில், விருப்பு வெறுப்பு பாகுபாடுகள் காட்டப்படுவதாக, பிரதமர் அலுவல கத்துக்கு புகார் வரவே, பிரதமர் அலு வலகம் வேலை வாய்ப்புத் துறை அமைச் சகத்தின் வழியாக, இடஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’, பொதுப் போட்டியில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’ மதிப் பெண்களைக் கேட்டது. பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதியும், இதுவரை, தேர்வாணையம் அசைந்து கொடுக்கவில்லை.கடந்த காலங்களிலும் நாடாளு மன்றக் குழுவினரை, தேர்வாணையம் புறக்கணித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குழு கருத்து கேட்க அழைத்தபோது, மத்திய தேர்வாணையம் கருத்து தெரிவிக்கவே வர மறுத்துவிட்டது. குழு தனது பரிந்துரையில் இதை குறிப்பிட்டு தேர்வாணையத்துக்கான நிதி ஒதுக் கீட்டை நிறுத்துமாறு பரிந்துரைத் திருந்தது. “அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆணையம் என்று கூறிக் கொண்டு இந்த ஆணையம் தன்னுடைய மோசமான நிர்வாகத்தை மறைக்க முயலுகிறது.

இந்தத் தேர் வாணையத்திலேயே செயலாளர் என்ற தலைமைப் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. பல அரசு நிறுவனங்களிலும் ஆணையத்தின் அலட்சியத்தால் தலைமைப் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாகவே கிடக் கின்றன. ஆணையத்தின் செயலற்ற போக்கே இதற்குக் காரணம். தேர் வாணையம், சில நேரங்களில், சிலரின் பெயர்களைப் பரிந்துரைக்க, அவர் களுக்கான நியமனம் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, பரிந்துரையை ஆணையம் திரும்பப் பெற்றதும் உண்டு. “சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த நிறுவனமும் செயல்பட முடியாது. ஆணையத்தின் இந்த செயல்பாடுகள், நாடாளுன்றத்தின் உரிமை மீறல்களுக்கு உட்பட்டதாகும்.” என்றும் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளு மன்ற குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.“நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்; மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த நிறுவனத்தை யும், நாங்கள் அனுமதிக்க முடியாது; நாங்கள் அரசுக்கு சமர்பித்துள்ள பரிந்துரைகளை செயல்பட வைப் போம்” என்று உறுதியாகக் கூறுகிறார், சுதர்சன நாச்சியப்பன். பரிந்துரை மீது உரிய நேரத்தில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, மத்திய வேலை வாய்ப்புத் துறை செயலாளரும் உறுதி கூறியுள்ளார்.

பார்ப்பன ஆதிக்கம் - எப்படி, நாட்டை ஆட்டிப் படைக்கிறது என்ப தற்கு இது அசைக்க முடியாத சான்று.(ஆதாரம்: மார்ச் 28, ‘பிரன்ட்லைன்’ வெளியிட்ட கட்டுரை)

உதைபட்ட சிங்கள இயக்குனர் ‘பிரபாகரன்’ படத்தின் பின்னணி என்ன?

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் திரைப்படம் ஒன்றை சிங்கள இயக்குனர் பிரீ° என்வர் தயாரித்து, அதை பிரதி எடுப்பதற்காக (பிரிண்ட்) அந்த இயக்குனர் சென்னை ஜெமினி கலையகத்துக்கு வந்தார். செய்தி வெளியானவுடன், தமிழின உணர்வாளர்கள் கலையகம் விரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர் சீமான், சுப. வீரபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரோடு பெரியார் திராவிடர் கழகத் தோழர் களும் விரைந்தனர். படத்தின் உள்ளடக்கம் பொதுவானது என்று கூறி, சிங்கள இயக்குனர் எதிர்ப் பாளர்களை ஏளனப்படுத்தியபோது, அவர்தாக்குதலுக்கு உள்ளானார்.

படத்தை திரையிட்டு பார்த்தப் பிறகு பிரதி எடுக்கலாம் என்று ஜெமினி கலையகத்துடன் பேசி முடிவெடுக் கப்பட்டது. இதற்கு சிங்கள இயக்குனரும் ஒப்புக் கொண்டார். மார்ச் 27 ஆம் தேதி அப்படம் வட பழனியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இராம. நாராயணன், நடிகர் சத்திய ராஜ், தங்கர்பச்சான், இயக்குனர் சீமான் உள்ளிட்ட கலை உலகப் பிரமுகர்களும், தொல். திருமா வளவன், பேராசிரியர் சுப.வீரபாண் டியன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பா.ம.க. துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் தோழர்களும் படத்தைப் பார்த்தனர்.சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் அத்திரைப்படம் இலங்கை ராணுவ அமைச்சகத்துக்கும், ராணுவ தளபதி களுக்கும் நன்றி கூறி தொடங்குகிறது. பிரபாகரன் என்ற பெயரில் ஒரு சிறுவன், விடுதலைப்புலிகள் அமைப்பில் விருப்ப மின்றி கட்டாயப்படுத்தி சேர்க்கப்படு வதாகவும், புலிகள் அமைப்பு பள்ளிக் கூடத்தில் நுழைந்து சிறுவர்களை கடத்திச் சென்று ராணுவத்தில் சேர்ப்பதாகவும் காட்சிகள் வைக்கப்பட் டுள்ளன.

பிரபாகரன் சகோதரியான தமிழ்ப் பெண், ஒரு சிங்களரை காதல் திருமணம் செய்து கொண்டு, நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்தப் பெண்ணை தற் கொலைப் போராளியாக மாறுமாறு, விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்து வதாகவும், அந்தப் பெண் மறுத்து, கடைசியில் புலிகளையே வெடிகுண்டு வீசி கொல்வதாகவும் கதை சொல்லி யிருக்கிறார்கள். பிரபாகரன் என்ற சிறுவன் விடுதலைப் புலிகள் படையிட மிருந்து சிறுவர் களோடு தப்பும் போது, அனைவரும் புலிகளால் கொல்லப் படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில் எந்த ஒரு இடத்திலும், ஒரு சிங்கள ராணுவமோ, சிங்கள ராணுவ தளபதியோ தலைகாட்டும் காட்சியே கிடையாது. அந்நிய நாடுகள் சதி செய்து - போலி சமாதான முயற்சிகளை மேற்கொள் வதாகவும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சிங்களர்களை எதிர்த்து செயல்படுவதாகவும், புலிகள் தாக்கு தலால், அகதிகள் முகாம்களில் சிங்களர்கள் உண வின்றி தவிப்பதாக வும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக பொய்யைப் பரப்பும் படத்தைப் பார்த்து கொதித்துப் போன தமிழர்கள் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியான அம்சா என்பவரே இத் திரைப்படத்தை தமிழில் பிரதி எடுத்து, தமிழகத்தில் திரையிடும் முயற்சி களை மேற்கொண்டுள்ளதால், சிங்கள இயக்குனர் சென்னை வந்துள்ளார். எதிர்ப்பு வலுத்தவுடன், தமிழக காங்கிர° கட்சியிடம் சிங்கள தூதரகம் சரணடைந்துள்ளது. காங்கிர° தலைவர்களில் ஒருவரான எ°.ஆர். பாலசுப்பிரமணியம், சிங்கள தூதரகத் துடன் நெருக்கமாக இருப்பவர்; அவர் பத்திரிகையாளர்களைக் கூட்டி, சிங்கள இயக்குனர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை சிங்களப் படைகள் தாக்கும் போதெல்லாம் ஒரு முறைகூட கண்டனம் தெரிவிக்காத எ°.ஆர்.பாலசுப்பிரமணியம் என்ற மனிதர், இப்போது சிங்கள இயக்கு நருக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ளார். சிங்கள இயக்குனரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு காங்கிர° கட்சியைச் சார்ந்த சென்னை பிரமுகர் சபீர் அலி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.

இதற்கிடையே ‘பிரபாகரன்’ படம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத் துள்ளன. இந்தப் படத்தில் துரோகக் குழுவைச் சார்ந்த பிள்ளையான் என்பவரின் ஆட்களே, நடிக்க வைக்கப் பட்டுள்ளனர். துணை ராணுவக் குழுக்கள் அதிகம் நடமாடும் வெலிக்கந்த எனும் பகுதியில் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தில் உயர் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மற்றும் கேணல் பெரேரா ஆகியோர் படத் தயாரிப்புக்கு முழுமையாக உதவிகளை செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இந்த எழுச்சி சென்னை இலங்கை தூதக ரத்தை மட்டுமல்ல, தமிழக காங்கிரசா ரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.- நமது செய்தியாளர்

கருத்துரிமைக்கு தடையா?

முதலீடு இல்லாத தலைசிறந்த வர்த்தகமாக அதிகார அரசியல் மாறி நிற்கிறது என்பது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த அதிகார அரசியலுக்குள் இடம் பிடித்து, செல்வாக்குப் பெற்று, அதை மூலதனமாக்குவதே ‘கவுரவமான பிழைப்பு’ என்ற கலாச்சாரம் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

இந்தச் சூழலில், சமூக அக்கறையோடு, தங்களுக்கான லட்சியங்கள், குறிக்கோள்களோடு ஆர்ப்பாட்ட வர்த்தக அதிகார அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாமல், செயல்பட முன்வருவது என்பது மிகவும் அபூர்வமாகும். இத்தகைய ஆரோக்கியமான அரசியல் புரிதலோடு, சுயநலமற்று செயல்படுகிற அமைப்புகளும், இயக்கங்களும் தான் தமிழகத்தின் வலிமையான கருத்துருவாக்க சக்திகள், பொது வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கு முழுமையான சமாதி கட்டிவிடாமல் தடுத்து வரும், மக்களின் உண்மையான பிரதிநிதிகள்.

ஆனால், இத்தகைய அமைப்புகளும், குழுக்களும், தமிழகத்தில் காவல்துறை யினரால் குறி வைத்து நசுக்கப்படுகின்றன. இந்த அமைப்புகளின் கருத்துரிமை முற்றாக தடைப்படுத்தப்படுகிறது. காவல்துறை தங்குதடையற்ற அதிகாரத்தை தன்வசம் எடுத்துக் கொண்டு, இந்த அமைப்புகளும், இயக்கங்களும் மக்களிடம் கருத்துக்களைச் சொல்வதற்கான கூட்டங்களுக்கு தடை போட்டு வருகின்றன.சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், கடந்த வாரம் சென்னை மாநகரில், மூடநம்பிக்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற துடிப்போடு தன்னை அர்ப்பணித்து, அரும் தொண்டு ஆற்றி வரும் தோழர் சிற்பி ராசன், தனது ‘மாஜிக் கலை’யின் வழியாக, மக்களிடம் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தக் கூட்டங்களுக்கே கூட, சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம் பகுதியில் காவல்துறை தடைவிதித்துவிட்டது. கடும் போராட்டம் நடத்திய பிறகே, அனுமதி பெற வேண்டியிருந்தது.

குறிப்பாக - வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் எழுத்து மூலமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி பிறப்பித்த தடை ஆணையில், “தோழர் சிற்பிராசன் அவர்கள் நடத்தும் ‘மந்திரமா தந்திரமா’ என்ற நிகழ்ச்சி மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்பகரமான தகவல் உள்ளதால் அந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.மக்களிடையே மூடநம்பிக்கைகள் வேகமாகப் பரவி வருவதைப் பற்றி முதல்வர் கலைஞர் அவ்வப்போது பேசியும் எழுதியும் வருகிறார். ஆனால், அவரது ஆட்சியின் காவல்துறை, பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையில் நியாயம்?‘புரட்சிகர பெண்கள் விடுதலை மய்யம்’ என்ற பெண்கள் அமைப்பு சென்னையில் காமராசர் அரங்கில் சர்வதேச மகளிர் நாள் கூட்டத்தை நடத்தி, அதில் புரட்சிப் பாடகர் கத்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ‘நக்சலைட் தத்துவங்கள் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும்’ என்று கூறி காவல்துறை, அதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது.

தத்துவங்களுக்கே தமிழ்நாட்டில் தடை போடப்பட்டு விட்டதா!? என்று கேட்கிறோம்.அதேபோல் - தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசியல் காரணங்களுக்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் பொழிலன் விடுதலை கோரி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும், காவல்துறை தடை விதித்துள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள கருத்துரிமைகள் - தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா என்ற கேள்வியைத்தான் வேதனையுடன் கேட்க வேண்டியிருக்கிறது.தேர்தல் அரசியலில் - கூட்டணி அரசியலில் உள்ள கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் செயல்படலாம்; கூட்டம் போடலாம்; ஆனால் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏற்றுள்ள இயக்கங்களுக்கு தமிழகத்தில் அடிப்படை உரிமைகளே கிடையாது என்ற முடிவுக்கு தமிழக காவல்துறை வந்து விட்டதா? இதற்கு தமிழக அரசும் பச்சைக் கொடி காட்டி விட்டதா என்று கேட்க விரும்புகிறோம்.

தொடக்க காலத்தில், தத்துவத் தளங்களில் ஆழமாக தடம் பதித்து நின்ற கழகம் தான் தி.மு.க. அன்றைக்கே இப்படி முடக்கப்பட்டிருந்தால், மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்க முடியுமா? இந்தியாவிலேயே தமிழ் மண் சிந்தனைகளும், தத்துவங்களும் விதைக்கப்பட்ட மண் அல்லவா?பெரியார் இயக்கங்களும், பொதுவுடைமை அமைப்புகளும் தங்கள் கருத்துகளையும், தத்துவங்களையும், விவாதங்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து சேர்த்தது இந்த மண்ணில் தான். அந்த வரலாற்றுப் பெருமைகளுக்குரிய மேடைச் சிந்தனைகளையும், மக்கள் சந்திப்பையும், பிரிட்டிஷ்காரன் 1886 ஆம் ஆண்டு கொண்டு வந்த 120 ஆண்டு காலத்துக்கு முந்தைய சட்டங்களைக் காட்டி காவல்துறையின் ஆய்வாளர்களும், துணை ஆய்வாளர்களும் முடக்குவதற்கு இடம் அளிக்கலாமா? கூட்டங்களில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று, காவல்துறையினரே கருத்தாளர்களாக அவதாரம் எடுக்கும் நிலை தமிழகத்தில் வந்துவிட்டது, மிகப் பெரும் சோகம்! வாதங்கள் - விவாதங்கள் - தடைபடுத்தப்படும்போதுதான் அது ‘தீவிரவாதமாக’ உருவெடுக்கிறது என்ற அடிப்படை உண்மையை நினைவூட்டுவது நமது கடமையாகிறது.தமிழக முதல்வர் கலைஞர் இதில் அவசரமாக தலையிட்டு காவல்துறைக்கு கடிவாளம் போட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.அதிகார மோகத்தில் சிக்கி விடாமல் தமிழகத்தில் இன்னும் எஞ்சி நிற்கும் ஆரோக்கியமான இலக்கு நோக்கிய மக்களுக்கான இயக்கங்களை செயல்பட அனுமதியுங்கள்!

135 நாடுகளில் மடிந்து போன மரண தண்டனை

உலகில் 135 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. 62 நாடுகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அதில், இந்தியாவும், பாகி°தானும் அடங்கும். 2006 ஆம்ஆண்டில் 25 நாடுகளில் 1591 பேருக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதில் 91 சதவீத தூக்கு, 6 நாடுகளில் மட்டும் போடப்பட்டுள்ளது. சீனா, ஈரான், ஈராக், சூடான், அமெரிக்கா, பாகி°தான் ஆகியவைகளே இந்த 6 நாடுகள். சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. தூக்குத் தண்டனை அமுலில் உள்ளதாலேயே குற்றங்கள் குறைந்து விடவில்லை. அதே நேரத்தில் 1976 இல் கனடா தூக்கு தண்டனையை ஒழித்த பிறகு அந்நாட்டில் கொலைக் குற்றங்கள் 40 சதவீதம் குறைந்துள்ளன. உலகம் முழுதும் அனைத்து நாடுகளும், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று, டிசம்பர் 18, 2007 இல் அய்.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்போது, அவர்கள் உயிர் மீண்டும் வந்துவிடுமா? நிச்சயம் வராது. அமெரிக்காவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 126 பேர் - பிறகு குற்றமற்றவர்கள் என்று, விஞ்ஞான பூர்வமாகக் கண்டறியப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.

பாகி°தான், இந்தியா போன்ற நாடுகளில் வழக்குகளும், விசாரணைகளும், எந்த நிலையில் நடக்கிறது என்பது தெரிந்ததுதான். இதனால் தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை எதிர்க்கிறார்கள். மறைந்த பாகி°தான் உச்சநீதிமன்ற நீதிபதி தோரப்பட்டேல் என்பவர், தாம் மீண்டும் நீதிபதியானால், ஒருவருக்கும் தூக்குத் தண்டனை தரமாட்டேன் என்று கூறினார். அவர் கூறும் காரணம் - சட்டமும் நீதியும், ஏழைகளுக்கு எதிராகவே இருக்கின்றன என்பதுதான்.ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹக் - பாகி°தானில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்தபோது, அதை எதிர்த்து 1981 இல் தனது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியைத் தூக்கி எறிந்தார் இந்த நீதிபதி. பாகி°தான் மனித உரிமை ஆணையம் என்ற மனித உரிமை அமைப்பை அவர்தான் தொடங்கினார். பாகி°தானில் அவர் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது வாழ் நாள் முழுவதும் குரல் கொடுத்தவர்.பாகி°தானைப் போல் இந்தியாவும் தூக்குத் தண்டனையை ஒழிப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்தியாவும் இந்த மனித உரிமைக்கு எதிரான தண்டனையை ரத்து செய்ய தயங்குகிறது. பாகி°தானில் தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சார்ந்த சுராப்ஜித் சிங், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இந்தியா, தனது நாட்டில், தூக்குத் தண் டனையை ஒழிக்க வேண்டாமா? அதற்கு முன் நிபந்தனையாக, தூக்குத் தண் டனைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்காகவாவது, அதை ரத்து செய்ய வேண்டாமா?

நன்கொடை• ஹாங்காங் தோழர் என்.அப்துல் ரகுமான் ரூ.1000-மும்

• ‘நாளை விடியும்’ ஆசிரியர் தோழர் அரசெழிலன் ரூ.250-ம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ ஏட்டுக்கு நன்கொடை வழங்கி யுள்ளனர். நன்றி. (ஆர்.)

எடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு:

தோழர்கள் கைதுநாமக்கல் மாவட்டம், ப. குமார பாளைத்தில் 19.3.2008 அன்று மாலை 6 மணி அளவில் சரவண திரை அரங்கம் முன் துவக்கி வைத்து தி.மு.க. அவைத் தலைவர் தி.கு. சண்முகம் பேசினார். ஒகேனக்கல்லில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க துடிக்கும் கர்நாடக பி.ஜே.பி. எடியுரப்பாவை கண்டித்தும் கூட்டு குடிநீர்த் திட்டம் பல ஆண்டு களாக தருமபுரி, கிருட்டிணகிரி மக்களின் கனவு. அது நம் தமிழ்நாடு அரசு திட்டம். இதை நடைமுறைப் படுத்த கூடாது என்று கர்நாடக கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டல் நாகராஜை கண்டித்தும் பேசினார்.

தோழர் கலைமதி பேசும்போது தான்தோன்றிதனமாக அத்துமீறி நுழைந்த கர்நாடக வெறியர்களை கண்டித்தும், நம் பாரம்பரிய நிலப் பகுதியான பெங்களூரையும், கோளார் தங்க வயலையும் மீட்டெடுக்க தமிழர்களே அணி திரண்டு வாருங்கள் என்றார். நுழையாதே, நுழையாதே, அத்துமீறி நுழையாதே, பி.ஜே.பி.யின் இரட்டை வேடத்தை பாரீர் என்றும், மீட்போம் மீட்போம் பெங்களூரையும், கோலார் தங்க வயலையும் மீட்போம். கைது செய், கைது செய் பி.ஜே.பி. எடியுரப்பாவை கைது செய். இன வெறியை தூண்டும் எடியுரப்பாவை கைது செய். அடக்கி வை, அடக்கி வை. பி.ஜே.பி. அத்வானியே எடியுரப்பாவை அடக்கி வை. அடக்க உன்னால் முடியா விட்டால் அடக்கி காட்டும் பெரியார் தி.க. விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டு வந்தனர்.

பேருந்து நிலையம் அருகில் தோழர்கள் எடியூரப்பா உருவ பொம்மையை எரிக்க மு7யலும் போது காவல் துறையினர் பிடுங்க, தடுக்க முயன்றனர். உருவ பொம்மையை தோழர்கள் செருப்பால் அடித்தனர். காவல் துறையிடம் சண்டையிட்டு பிடுங்கி தீயிட்டு கொளுத்தினார்கள். பின்னர் அனை வரையும் கைது செய்வதாக சொன்னார்கள். போராட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்டத் தலைவர் தி.க. கைலாசம், முன்னிலை வகித்த மாதுராசு, மாவட்ட செயலாளர் மு. சாமிநாதன், கழக சொற்பொழிவாளர் கீசகன், ஈ°வரன், அ. கலைமணி, தி.மு.க., தி.கு.ச. மணிமாறன், குமார், அசோக், சின்னகுமார், ரமேசு, தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் ந. ஆறுமுகம், சமர்ப்பா கலைக்குழு குமரேசன், இந்திய இளைஞர் இயக்கம் பகலவன், இலக்கிய தல ந. அன்பழகன், மனித உரிமைக் கழகம் செல்வராசு, தமிழன் ஓவியர் பழனிச்சாமி பவானி, தோழர் விடுதலை வலையல் சண்முகம் உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். போராட்ட வேலைகளையும், தோழர் களை திரட்டியும் அசோக் மா. கலைமதி ஆகியோர் மிக சிறப்பாக செயல்பட்ட னர். அனைவருக்கும் தி.மு.க. கலைமணி தேனீர் விருந்து அளித்தார்.

செய்தி: மு. சாமிநாதன்

ராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா?

சொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளி யில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

மீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை.மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.

இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா? யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை.மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும்? பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்?தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை? என்றார் கொளத்தூர் மணி.

தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி: கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.

புதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.

ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா?சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை.ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.

தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

மன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்

தமிழர்களின் பாரம்பர்யப் பிரதேசம் மன்னார்! இங்கே கடலோர வாணிகம் செழித்திருந்த காலம் ஒன்று உண்டு. மன்னார் கடல் பரப்பில் அரபுக் கப்பல்கள் குதிரைகளைக் கொண்டு வந்து, மன்னார் சந்தையில் விற்பதும், மன்னார் கடல்பரப்பில் கிடைக்கும் விலை மதிப்புள்ள முத்துக்களை வாங்கிச் சென்றதும் உண்டு. அந்த மன்னார் பகுதியில்தான் - இப்போது ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலி களுக்கும், சிங்கள ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்களப் படைகள் மன்னாரை தம் வசமாக்கிட அங்கே குவியத் தொடங்கின. அதற்கு முன் 1999 இல் இதே மன்னார் பகுதியை ஆக்கிரமிக்க ‘ரணகோச’ என்று (போர் முழக்கம்) பெயர் சூட்டி, பெரும் தாக்குதலைத் தொடர்ந்தது சிங்கள ராணுவம். அதை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். அதே மன்னாரில் இன்று ஒவ்வொரு நாளும் தொடர் யுத்தம்.

மன்னார், ஒரு சதுப்பு வெளி, மண்ணைத் தோண்டுவதற்கு மண்வெட்டியைப் போட்டு வெட்டினால், மண் தெறிக்காது. மண் வெட்டிதான் உடையும். அத்தகைய சதுப்பு நிலப் பகுதியானாலும், எதிரியின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட முடியுமா?மன்னார் பிரதேசத்தைக் காப்பாற்ற, காவல் அரண்களை அமைத்தனர் விடுதலைப் புலிகள். அகழிகளை வெட்டி, எல்லைப் பகுதி முழுதும் காப்பரண்களை அமைத்தனர். (காப்பரண் என்றால் எல்லைப் பகுதி நெடுக பல மைல் தூரத்துக்கு 10 அடிக்கு ஒரு அரண் அமைத்து, அதில், 24 மணி நேரமும் துப்பாக்கியோடு கண்விழித்து எதிரிகளின் ஊடுருவல் நிகழ்ந்து விடாமல் காப்பது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கே குவிந்த சிங்களப் படை 6 மாதம் முழுமையாக தன்னை தயார்படுததிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் (24.9.2007) தனது முதல் தாக்குதலை காப்பரண்கள் மீது தொடங்கியது. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் அமைத்தது ஒற்றைக் காப்பரண்தான். பெரும்படையாக குவிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவராக எல்லைப் பாதை நெடுக காவல் காப்பார்கள். 75 மைல் தூரம் விரிந்து நிற்கும் இந்த ஒற்றைக் காப்பரண் மீது சிங்கள ராணுவத்தின் பெரும் படை தாக்குதல் தொடுத்து வருகிறது.

ஆனால் - ஒரு அங்குலம்கூட காப்பரணைத் தகர்த்து, சிங்கள ராணுவத்தால், ஊடுருவ முடியவில்லை என்பதுதான் முக்கியம்.2007 செப்டம்பர் 24 ஆம் தேதி, ராணுவத்தின் முதல் தாக்குதல் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. பெண் புலி லெப். அருமலர் காப்பரண் தாக்கப்பட்டது. காப்பரணில் அப்போது இருந்த பெண் புலிகள் 5 பேர் மட்டுமே. பெரும் படையுடன் தாக்க வந்த சிங்களத்தை - இந்த 5 பெண் புலிகளும் எதிர் கொண்டனர். மாலை 5.30 மணி வரை தாக்குதல் நீடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காயப்படுவதும், பிறகு காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து, மீண்டும் திருப்பி சுடுவதுமாக அந்தப் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந் தனர். ஊடுருவ முயன்ற சிங்களப் படை திரும்பி ஓட்டமெடுத்த நிலையில், அந்த 5 பெண் புலிகளும் உடல் முழுதும் ஏந்திய குண்டு காயங்களோடு வீர மரணத்தைத் தழுவினர். இந்த வீர காவியம் படைத்த போர் நடந்த பகுதி ‘கட்டுக்கரை குளக்கட்டு’.

தோற்றோடிய சிங்களப் படை மீண்டும் அதே காப்பரணைத் தாக்கி ஊடுருவ - தாக்குதலைத் தொடங்கியது. இப்போது பெண் புலி காப்டன் கோதை தலைமையிலான புலிகள் தாக்குதலை எதிர் கொண்டனர். முதற் சண்டையில் விதையாகிய தோழியரின் ரத்தமும், சதையும் ஊறி வீரத்தோடு எழுந்து நின்று, கடுமையாக மோதியது. சிங்களப் படையினரிடம் பலியாகாமல், வெளி யேறுவதற்கு வாய்ப்பிருந்த நிலையிலுங் கூட, பெண்புலி கோதை, படையை எதிர்த்துப் போரிட்டு, வீரமரணத்தைத் தழுவி, ஊடுருவலைத் தடுத்தார்.கட்டுக்கரையில் தொடங்கிய தாக்குதலை எல்லைப்பகுதி முழுதும் ஒரே நேரத்தில் ராணுவம் விரிவாக்கியது. அந்த யுத்தம் ஒவ்வொரு நாளும், இப்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மாதம் ஒரு முறை யுத்தம் என்ற நிலை மாறி, ஒவ்வொரு நாளும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுவதாக சிங்களம் பொய்ச் செய்திகளைப் பரப்பு கிறது. பிரபாகரன் மீதும் குண்டு வீசப் பட்டு, படுகாயமடைந்ததாக பொய்ச் செய்திகளைப் பரப்பியது. பொய் முகத்திரை கிழிந்து போனது. இப்போது மன்னாரில் என்னதான் நடக்கிறது?‘வீட்டுக்கு ஒரு போர் வீரன்’ என்ற முழக்கத்தோடு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போர் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். நேருக்கு நேர் மோதும் மரபு வழி யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. உலக வல்லரசுகள் வழங்கியுள்ள ராணுவ பலத்துடன் சிங்களம் படை முகாமை நிறுத்தியிருக்கிறது. புலிகளின் ஒற்றைக் காப்பரணை ஊடுருவி நகர முடியாமல் சிங்களத்தின் பெரும்படை ஒவ்வொரு நாளும் பெரும் இழப்பு களை சந்தித்து வருகிறது.

எல்லைப் பகுதியில் காப்பரணில் சண்டையில் நிற்கும் பெண் புலிகளை நேரில் சந்தித்து அளவளாவி படம் எடுத்து வரலாம் என்ற நோக்கத்தோடு போர் மேகம் சூழ்ந்த நிலையிலும், சாரதா என்ற பெண் புலி தலைமையிலான அணி மன்னார் பகுதிக்குச் சென்றது. ஒவ்வொரு காப் பரணாகச் சென்று பெண் புலிகளிடம் உசாவி விட்டு வரும் நிலையில் சிங்களப் படை திடீர்த் தாக்குதலைத் தொடங்கி யது. மிகவும் சக்தி வாய்ந்த பீரங்கியால் (50 கலிபர்) ராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. 50 அடி தூரத்திலுள்ள காப்பரண் மீது தாக்குதல் நடக்கும் போது, சாரதாவின் அணி, அடுத்த காப் பரணில் தோழிகளுடன் பேசிக் கொண் டிருந்தது. அந்த நிலையிலும் அரணில் இருந்த பெண் புலிகள், “வாங்கோ, வாங்கோ அக்கா” என்று அன்புடன் உபசரித்து, அடுப்பை மூட்டி, உணவு தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேனீர் பரிமாறப்பட்டது. ‘என்னடா இது? முன்னுக்குச் சண்டை நடக்கிறது? இவர்களை நோக்கி, எந்த நேரத்திலும் திரும்பலாம்; ஆனாலும், அதை வழமையாக எதிர்க் கொண்டு, அன்பான உபசரிப்புகளை வழங்கிக் கொண் டிருந்தது கண்டு சாரதா அணி வியந்தது.மன்னார் போர் அரங்கில் நிற்கும் படை அணியினர் அனைவருக்கும் உணவு வேளைகளுக்கு இடையே சாப்பிடக் கூடிய சத்தான உணவுப் பொருள்களை வாங்கித் தருமாறு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன், பெண் புலி கேணல் யாழினியிடம், ஒரு தொகைப் பணத்தைத் தந்திருந்தார். காப்பரண் முழுதும் படைவீரர்கள் அனைவருக்கும் இதை வழங்க 10 நாட்கள் ஆகிவிடும். அதற்குள் உணவு கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே யாழினி ஒவ்வொருவருக்கும் ‘சோன் பப்ளி’ எனும் இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொடுத்து விட் டார். அப்போது - ஒரு புதிய பெண் போராளி கேணல் யாழினியிடம் கேட்டார், “அக்கா, எங்களுக்குத்தான் மூன்றுவேளை சாப்பாடும் வந்து கொண்டிருக்கே, அதுவே போதும்; எதற்கு அண்ணன், இதை எல்லாம் தர வேண்டும்?” என்று கேட்டார். “சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளை யும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி. ‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடு வோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே!” என்றார், அந்தப் பெண் புலி.“அக்கா அண்ணனை நாங்கள் சந்திக்க வேண்டும்; கேட்டுச் சொல் லுங்க” என்று புதிய பெண் புலிகள் மரணத்தை எந்நேரமும் எதிர்கொள்ளக் கூடிய அந்த சூழலிலும் இதையே கோரிக்கையாக வைத்தனர்.போராட்டமே வாழ்க்கை; வாழ்க்கையே போராட்டமாய் - மன்னார் போர் அரங்கு மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மோதி மோதிப் பார்க்கும் சிங்களம் - பெண் புலிகளின் வீரத்தாலும், தியாகத்தாலும், தோல்வி களையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.- நமது செய்தியாளர்

நம்பியூர் போராட்டம் வெற்றி!

நம்பியூரில் திருமண மண்டபத் தில் அருந்ததியினருக்கு பணம் கட்டியும் இடம் வழங்க மறுத்த தீண்டாமையை எதிர்த்து, ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கி வைத்த கிளர்ச்சி விரிவடைந்து, சாதி ஒழிப்பு கூட்டியக்கமாக பரிணாமம் பெற்றது. தலித் அமைப்புகளும், பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து, தீண்டாமைக்கு எதிராக களமிறங்கின. மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிடும் நிர்ப்பந்தத்தை போராட்டக்களம் உருவாக்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண மண்டப நிர்வாகி களுடன் கலந்து பேசினார். சாதி வெறி பணிந்தது. கடந்த 19.3.2008 அன்று அனுமதி மறுக்கப்பட்ட அருந்ததி சமூக தோழர் மாரியப்பன் இல்ல நிகழ்ச்சியை நடத்த, திருமண மண்டப நிர்வாகிகள் அனுமதி வழங்கினர். ஆயிரம் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டக் கழக செயலாளர் கோபி. இளங்கோ மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமூக தீர்வை உருவாக்கிட முயன்ற மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், திருமண மண்டப நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

கழகத்துக்கு திருமாவளவன் பாராட்டு!

உடுமலையில் - சாளரப்பட்டி தீண்டாமை வெறியைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் - விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையிலிருந்து -“நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருமைத் தோழர் அதியமான் தலைமையில் நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது கண்டனத்தை தெரிவிப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாளரப்பட்டி மக்களுக்கு நேர்ந்த வன்கொடுமை களை எண்ணி ஒரு புறம் வேதனைப்பட்டாலும், அண்ணன் இராமகிருட்டிணன் சொன்னதைப்போல ஒரே களத்தில் நின்று போராடுவதற்கு உரிமைக் குரல் எழுப்புவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நாள் நமக்கு வழங்கி யிருக்கிறது.இன்றைக்கு சாதி ஒழிப்பு கூட்டியக்கம் என்கிற ஒரு தலைப்பின் கீழ் நாமெல்லாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையிலே நம்பியூர் பிரச்சனையை முன்னிறுத்தி, அண்ணன் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் கோவையிலே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வந்திருந்தபோது, ஒரு கூட்டியக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நம்பியூர் திருமண மண்டபம், ஒரு அருந்ததிய சகோதரன் தான் பெற்ற பிள்ளைக்கு காதணி விழா நடத்துவதற்காக பணம் கட்டி பதிவு செய்த நிலையில், அவன் தன்னுடைய நண்பனோடு தெலுங்கில் பேசினான் என்கிற ஒரே காரணத்திற்காக இவன் ரெட்டியாராகவோ, நாயுடுவாகவோ இருக்க முடியாது. இவன் அருந்ததியினராகத்தான் இருக்க முடியும் என்று அவன் யூகம் செய்து கொண்டு, உடனடியாகவே அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள், உனக்கு இடம் இல்லை என்று அவன் மறுதலிக்க, அந்த செய்தி விடுதலைச் சிறுத்தைகளின் கவனத்துக்கு வர அது சுசி கலையரசன் கவனத்துக்கு வர,அது என் கவனத்திற்கு வர அதை விடுதலைச் சிறுத்தைகள் போராட்டமாக முன்னெடுத்தபோது, எல்லோரும் சேர்ந்து செய்வோம் என்று கொளத்தூர் மணி, இராமகிருட்டிணனும் அந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டபோதுதான் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, நாம் இணைந்தே செய்வோம் என்று அன்றைக்கு ஒப்புதல் கொடுத்து ஒரே நேரத்தில் எல்லோரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து முறையிட்டோம். அன்றைக்கும் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆக, அந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் சார்பிலே நம்பியூரில் முதல் களத்தை அமைத்தோம். நம்முடைய கடுமையான கண்டனத்தை தெரிவித் தோம். உள்ளபடியே அரசு கடுமையாக அஞ்சியது, பின் வாங்கியது. சாதி வெறியர்களுக்கு துணை நிற்கிற நிலையில் இருந்து பின் வாங்கியிருக்கிறது. அதிலும் இன்னும் அடுத்தகட்ட பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.நாம் அரசாங்கத்திடமிருந்து மண்டியிட்டுக் கெஞ்சுகிற நிலையிலிருந்து நம்முடைய அணுகுமுறைகளை மாற்றியாக வேண்டும். காவல்துறை அதிகாரியிடம் மனு கொடுத்து பாதுகாப்பு கொடு என்று கெஞ்சுகிற இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். இதுதான் இன்றைக்கு இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். இங்கே அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். யார் யர் எந்தக் காலகட்டத்திலே எப்படி செயல்பட்டார்கள். மால்கம் எக்°, புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தலைவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். தோழர் சம்பத் அவர்கள்கூட சீனிவாசராவ் அவர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர் குடியால் பார்ப்பனராக இருந்தாலும்கூட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, விடுதலைக்காக ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியிலே களப்பணியாற்றியவர் என்கிற அந்த உணர்வோடு, நன்றி உணர்வோடு இங்கே சுட்டிக் காட்டினார்கள். ஆக, நாம் - எங்களைத் தாக்கி விட்டார்கள், காயப்படுத்தி விட்டார்கள், எங்கள் குடிசைகளை தீ வைத்து விட்டார்கள் என்று பாதிப்படைந்த பிறகு முறையிடுவது என்ற நிலையிலிருந்து மாறி பாதிப்படைந்த பிறகு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்கிற நிலையில் இருந்து மாறி எங்களை இனி தாக்கவே முடியாது என்கிற நிலைக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அத்தகைய துணிவை இத்தகைய ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தரும். இந்த ஆர்ப்பாட்டத்தால், பேரணியால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் ஒருபோதும் எண்ணக் கூடாது” என்றார் திருமாவளவன்.

செய்தி: கருமலையப்பன்

மீனவர் மீது துப்பாக்கிச் சூடு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகஸ்ட் 13 இல் ‘கண்டன நாள்’!

சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 20 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:• தமிழக மீனவர்கள் மீது முதன் முதலாக 13.8.1983 ஆம் ஆண்டு சிங்கள கடற்படை தொடங்கிய துப்பாக்கிச் சூடு, 25 ஆண்டு களாகத் தொடர்ந்து இதுநாள் வரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகும் இதுவரை ஒருமுறை கூட சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்க முன்வராத இந்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பிரதமர் மன்மோகன்சிங், சிங்களக் கடற்பகுதியில்தான் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்று கூறி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி யிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சிங்களக் கடற்படையால் இதுவரை 1,000 படகுகளுக்கு மேல் சேதமடைந்து பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும் உபகரணங்களும் அழிந் துள்ள நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும்- பிறகு இந்திய தமிழக அரசின் தலை யீட்டில் விடுதலை செய்வதும் தொடர் கதையாகி தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் நிலை குலைந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர் களுக்கான மீன்பிடி உரிமையை மீட்டுத் தரும் உடனடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.

• பார்ப்பன இந்துத்துவா சக்திகளுக்கு மாற்றாக இருக்கும் ஒரே காரணத்தால் மதச்சார்பற்ற தமிழர்களால் ஆதரிக்கப் பட்ட இந்திய தேசிய காங்கிரஸ கட்சி, தமிழக மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான சிங்கள கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்கி துணை போவதை தமிழகத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியோ, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு இந்திய அரசின் அத்தகைய தமிழினத் துரோகத்துக்கு பச்சைக்கொடி காட்டி வருவதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பதிலடி தரத் தயாராக வேண்டும் என்று தமிழர்களுக்கு இக்கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.

• - தமிழக மீனவர்களுக்கு எதிராக- சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூடு தொடங்கி எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கண்டித்து-தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத இந்திய அரசைக் கண்டித்து சிங்களக் கடற்படைத் துப்பாக்கிகள்; சுடத் தொடங்கிய அதே ஓகஸ்ட் 13 ஆம் திகதி, தமிழகம் முழுவதும் தமிழர்கள் வீடுகளில்- பொது இடங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றி கண்டனக்கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தி இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தும் கண்டன நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன், தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு. பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கோ.சு.மணி ஆகியோர் உரையாற்றினார். இரா. உமாபதி நன்றி கூறினார். உரை அடுத்த இதழில்.

தோழர் டி.ராசாவுக்கு பாராட்டு!

தமிழக மீனவர்களைத் தொடர்ந்து படுகொலை செய்தும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிராக கடலுக்கடியில் கண்ணிவெடிகளை புதைத்தும் வரும் சிங்கள அரசைக் கண்டித்தும் அத்தகைய அரசுக்கு இந்தியா ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கலாமா? என்ற நியாயமான கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பி - தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.ராசாவை கோடானுகோடி தமிழர்கள் சார்பில் பாராட்டி இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.